பாயும் ஒளி நீ எனக்கு எவ்வளவு தூரம் பாய்ந்தது!

பாயும் ஒளி நீ எனக்கு திரை விமர்சனம்

இயக்கம் – கார்த்திக் அத்வைத்
நடிப்பு – விக்ரம் பிரபு, வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா

இசை-மஹதி ஸ்வர சாகர்

ஒளிப்பதிவு – ஸ்ரீதர்

 

நண்பருடன் இணைந்து நெட்வொர்க் தொடர்பான சிறிய நிறுவனம் நடத்தி வரும் கதாநாயகனுக்கு பார்வை குறைபாடு பிரச்சினை உள்ளது. இப்படியான நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்யும் ரவுடிகளிடமிருந்து ஒரு பெண்ணை காக்கிறார். இதன் விளைவாக ரவுடிகள் கூட்டம் அவரை பழிவாங்க முற்படுகிறது. மறுபுறம் விக்ரம் பிரபு சித்தப்பா கொலை செய்யப்படுகிறார். தன்னுடைய கண் பார்வை பிரச்சினைக்கு மத்தியில் எதிரிகளை கண்டுபிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதி கதை

விக்ரம் பிரபுவின் நடிப்பு இந்தப் படத்தை பெரிதும் தாங்கி நிற்கிறது .பார்வை குறைபாடால் அவதிப்படும் விக்ரம் பிரபு, சத்தத்தை வைத்து தன்னை தாக்க வருபவர்களை கண்டுபிடிப்பது உள்ளிட்ட ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டுகிறார். வேல ராமமூர்த்தி, வாணி போஜன் கதாபாத்திரங்களுக்கு பெரிதும் காட்சியில்லை ,

பார்வை குறைபாடு கொண்ட ஹீரோ, அதனை தங்களுக்கு பலமாக கொள்ளும் வில்லன் கூட்டம், இந்த குரை பாட்டை வைத்துக்கொண்டு எப்படி வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே கதைக்கரு , ஒரு நல்ல ஆக்சன் படத்திற்கு தேவையான கதை இருந்தும் திரைக்கதையில் பெரிய அளவில் மேஜிக் இல்லாமல் சாதாரண படமாகவே இயக்குநர் கார்த்திக் கொடுத்துள்ளார். எந்த காட்சியும் பெரிய அளவில் கவராத வகையில் சாதாரண காட்சி போல தோன்றுகிறது. ஹீரோயினும், பாடல்களும் மேலும் படத்தை மோசமாக்குகிறது , வாணி போஜன் நடிப்பு வழக்கம் போல இந்தப் படத்திலும் பெரிதாக இல்லை,

Vikram Prabhu and Vani Bhojan's 'Paayum Oli Nee Yenakku' wrap the shoot of  their film early here's why | Tamil Movie News - Times of India

ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிளைமேக்ஸ் உட்பட பல காட்சியில் பளிச்சிடுகிறது. அதேபோல் பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிக்கு பெரிதும் உதவுகிறது. மொத்த படத்தையும் விக்ரம் பிரபு தான் தாங்கியுள்ளர்

திரைக்கதையில் கவனம் செலுத்தாததால் பாயும் ஒளி நீ எனக்கு பெரிய அளவில் வெளிச்சத்தை கொடுக்கவில்லை.