இயக்கம் – Vz துரை
நடிப்பு – சுந்தர் சி, பாலக் லல்வாணி, தம்பி ராமையா.
தலைநகரம் முதல் பாகம் தான் சுந்தர் சியை ஹீரோவாக்கியது. வடிவேலு காமெடியுடன் இணைந்து ரௌடியின் வாழ்க்கையை கமர்ஷியலாக சொல்லி வெற்றி பெற்றது படம். பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இப்போது அதன் இரண்டாம் பாகம். நேரடியாக எந்த தொடர்பும் இல்லாமல் புது கதையுடன் வந்துள்ளது இந்தப்படம்.
சிட்டிக்குள் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், ஹார்பரில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், சினிமா துறையில் ரௌடியிசம் பண்ணும் ஒருத்தன், இவர்களுக்கு மூவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. ஒருவரை ஒருவர் அழிக்க நினைக்கிறார்கள். இவர்கள் பிரச்சனையில் ரௌடியிசம் வேண்டாமென ஒதுங்கி இருக்கும் ரைட் உள்ளே வர நேர்கிறது. பின் என்ன நடக்கிறது என்பதே படம்.
முதல் பாதி ஒவ்வொரு வில்லனுக்கும் ஒரு ப்ளாஷ்பேக், ரைட்டின் கதை அவர்கள் பிரச்சனையில் உள்ளே வருவது என திரைக்கதை பரபரக்கிறது, ஒவ்வொரு காட்சியிலும் டீடெயிலிங் கச்சிதம். ரைட் கதாப்பாத்திரத்தின் அறிமுகம், இண்டர்வெல் ஃபைட் எல்லாம் பக்கா மாஸ் மெட்டீரியல். விஜய் அஜித் செய்திருந்தால் இன்னும் திரை கொண்டாடமாகியிருக்கும்.
சுந்தர் சி ரைட்டாக இன்னுமே மிடுக்குடன் இருக்கிறார் அவர் சண்டை போட்டு ஆளை அடிக்கும் போது நம்பும்படியாக இருக்கிறது அது அவருக்கு பெரிய ப்ளஸ். எல்லா உணர்வுகளையும் காட்ட படத்தில் அவருக்கு காட்சிகள் இருப்பது பெரிய பலம். ஆனால் முகத்தில் வயது தெரிய ஆரம்பித்து விட்டது.
பாலக் லால்வாணி ரொம்ப போல்டான கேரக்டர், சினிமா நடிகையாக பலர் செய்ய தயங்கும் கேரக்டரை அசால்ட்டால நடித்துள்ளார். தம்பி ராமையா வழக்கம் போல் கவர்கிறார்.
ஒரு பக்கா கமர்ஷியல் படமாக வந்திருக்க வேண்டிய படம். இடைவேளை படு கிரிப்பாக இருக்கும் படம் இடைவேளைக்கு பிறகு நொண்டியடிக்க ஆரம்பித்து விடுகிறது. இடைவேளைக்கு பிறகு என்ன நடக்கிறது என்றே புரியாத திரைக்கதை படத்தின் முழு சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடுகிறது.
ஒளிப்பதிவில் மினி பட்ஜெட் படம் அப்படியே தெரிகிறது. இசை சுமார் ரகம். இன்னும் கொஞ்சம் மெருகேற்றியிருந்தால் தலைநகரத்தை வசப்படுத்தியிருக்கலாம்.