நரபலியை சொல்லும் அக்காலி எப்படி இருக்கிறது ??

நரபலியை சொல்லும் அக்காலி எப்படி இருக்கிறது ??

முழுக்க முழுக்க புதுமுகங்களின் முயற்சியில் மாறுபட்ட களத்தில், திரில்லர் திரைப்படமாக வந்துள்ள படம்அக்காலி. அறிமுக இயக்குநர் முஹம்மத் ஆசிப் ஹமீது இயக்கத்தில் நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், அர்ஜய், ஜெயக்குமார், தலைவாசல் விஜய், வினோதினி, யாமினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். PBS ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் யூகேஸ்வரன் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்ய, அனீஸ் மோகன் இசையமைத்திருக்கிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த தொடர் அமானுஷ்ய கொலைகளை பற்றி அந்த காலத்தில் விசாரணையில்இருந்த காவல்துறை அதிகாரி ஜெயக்குமாரிடம் இன்னொரு பெண் அதிகாரியான ஸ்வயம் சித்தா விசாரிப்பதாகதுவங்கும் கதை, அதன் பிறகு அந்த நேரத்தில் அந்த வழக்கில் நடந்த பல அதிர்ச்சியான விஷயங்களைஜெயக்குமார் சொல்ல சொல்ல கதை விரிவடைகிறது. 6 பேர் நரபலி கொடுக்கப்பட, 7வதாக ஒரு பத்திரிக்கைநிருபரும் அங்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறார். இதை எல்லாம் ஜானிஸ் என்ற ஒரு இளம் சூனியக்கார பெண்செய்தார் என நினைக்கும் காவல்துறை…
Read More
ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றாரா சூரி ? – கருடன் திரை விமர்சனம் !!

ஆக்சன் ஹீரோவாக வெற்றி பெற்றாரா சூரி ? – கருடன் திரை விமர்சனம் !!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் காலம். சந்தானம், யோகி பாபுவிற்கு பிறகு, ஒரு முழு நீள ஹீரோவாக தன்னை பலப்படுத்திக் கொண்டு களமிறங்கியுள்ளார் சூரி. விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் சூரியை வேறு தளத்தில் களமிறக்க, அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு, சூரி அந்த ரூட்டில் தன்னை கச்சிதமாக வடிவமைத்து கருடன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்த முறை வெற்றி பெற்ற மிகப்பெரிய நடிகர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு, ஒரு அட்டகாசமான இயக்குனர் கையில், வெற்றிமாறன் கதையில் சூரி மீண்டும் சொல்லி அடித்திருக்கிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஸ்வேதா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் சூரி நாயகனாக களமிறங்கியிருக்கும் கருடன் திரைப்படம் எப்படி இருக்கிறது ? சூரி படத்தில் சசிகுமார் துணைக்கதாப்பாத்திரம் என்பதே ஒரு ஆச்சரியம்தான். இந்த மாதிரி நிறைய ஆச்சர்யங்கள் படத்தில் இருப்பதுதான் கருடன் படத்தின் மிகப்பெரிய பலம்…
Read More
Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

Hit அடித்ததா? Hit Lisst மூவி ?

  ஹிட் லிஸ்ட் திரைப்படம் விமர்சனம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா வரலாறு மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாக இருக்கும் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் அட்லீஸ்ட் இந்த படத்தை ஒரு பிளாக்பஸ்டர் ரவிக்குமார் தயாரித்துள்ளார் அவரது உதவியாளர்கள் சூரியகதிர் காக்கலர் மற்றும் கே.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர். இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் ஆர்.சரத்குமார், விஜய் கனிஷ்கா, சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஸ்ம்ருதி வெங்கட், ஐஸ்வர்யா தத்தா, சித்தாரா, அனுபமா குமார், ராமச்சந்திரா ராஜு, முனிஷ்காந்த், ரெட்டின் கிங்ஸ்லி, ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு அறிமுக ஹீரோவுக்கான கதையை வடிவமைத்து அவரை நிலை நிறுத்தும் எண்ணத்தில் ஒரு திரில்லர் திரைப்படத்தை தந்திருக்கிறார்கள். மிடில் கிளாஸ் இளைஞன் அம்மா தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் திடீரென அவர் என் அம்மாவும் தங்கையும் கடத்தப்படுகிறார்கள் முகமூடி அணிந்த வில்லன் அவரை மிரட்ட ஆரம்பிக்கிறான் போலீஸ் உதவி கொண்டு…
Read More
பகலறியான் திரை விமர்சனம் !!

பகலறியான் திரை விமர்சனம் !!

  இயக்கம்: முருகன் நடிப்பு: வெற்றி, அக்ஷயா கந்தமுதன், சாப்ளின் பாலு, சாய் தீனா, முருகன், வினு ப்ரியா இசை: விவேக் சரோ தயாரிப்பு: லதா முருகன் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் வெற்றியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் முக்கிய பாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ள படம் பகலறியான். சின்ன பட்ஜெட்டை வைத்துக்கொண்டு ஒரு இரவுக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை கோர்த்து ஒரு திரில்லரை தந்திருக்கிறார்கள். காதலியை ஒர் இரவில் கடத்திக்கொண்டு திருமணம் செய்ய போகிறார் ஏற்கனவே ஜெயிலுக்கு சென்ற குற்றவாளி வெற்றி. இன்னொரு புறம் தன் தங்கையை காணவில்லை என சென்னையில் பிரபல ரௌடி தேட ஆரம்பிக்கிறான். வெற்றியையும், ரௌடியையும் கொலை செய்யும் நோக்கத்தில் சில குழுக்கள் அலைகின்றனர், இந்த கதைகளின் தொடர்பு என்ன ? இறுதியில் நடக்கிறது என்பது தான் படம். நாயகனாக நடித்திருக்கும் வெற்றிக்கு வழக்கமான கதாப்பாத்திரம் அதை தன் பாணியில் சிறப்பாக செய்துள்ளார். வெற்றி…
Read More
PT சார் ஜெயித்தாரா?

PT சார் ஜெயித்தாரா?

வீரன் படத்துக்குப் பிறகு, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ள PT சார் இப்போது வெளியாகியுள்ளது. வழக்கமான ஹிப் ஹாப் ஆதி படங்களிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு கருத்து சொல்லியிருக்கிறார்கள். படமாக அனைவரையும் கவர்ந்ததா ? ஈரோட்டில் பிரபல கல்வி நிறுவனத்தில் பிடி வாத்தியாராக வேலை பார்க்கும் ஹிப் ஹாப் ஆதியை அவரது அம்மா நேரம் சரியில்லாத காரணத்தால் பொத்தி பொத்தி வளர்க்கிறார். தன் பள்ளி நிறுவனத்தில் மேஜிக் சுவர் எனும் சுவாரஸ்யமான விஷயத்தை மாணவர்களுக்கு மத்தியில் உருவாக்கி பாராட்டுகளைப் பெறுகிறார். ஆனால் இதே சுவரால், எதிர்வீட்டுப் பெண்ணான அனிகா சுரேந்திரன் மூலம் எதிர்பாராத பிரச்னை, அதுவும் அவர் வேலை பார்க்கும் கல்வி நிறுவனத்துக்குள்ளேயே ஏற்படுகிறது. விளையாட்டுத் தனமாய் இருந்த ஹிப் ஹாப் ஆதி சமூகப் பிரச்னையாய் மாறும் இந்த விஷயத்தை எப்படி டீல் செய்கிறார்? அவர் எதிர்கொள்ளும் போராட்டம், அனிகாவுக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை. சமூகத்தில்…
Read More
எப்படி இருக்கிறது ராமராஜனின் சாமானியன் ?

எப்படி இருக்கிறது ராமராஜனின் சாமானியன் ?

  இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் மக்கள் நாயகன் ராமராஜன் நடித்து 23 நாள் 23 வருடங்களுக்கு பிறகு வெளிவந்திருக்கும் திரைப்படம் சாமானியன். ஒரு காலகட்டத்தில் நட்சத்திர நடிகராக வலம் வந்த ராமராஜன், 23 வருட இடைவேளைக்கு பிறகு படத்தில் நடித்திருக்கிறார். அவரது பலமே கிராமத்து கதைகள் தான், ஆனால் நவீன காலத்தில் மாறிவிட்ட சினிமாவுக்கு ஏற்றபடி, ஒரு கிராமத்து கிளறி விட்டுவிட்டு பேங்க் கொள்ளை கதையில் நடித்திருப்பது சிறப்பு மக்கள் நாயகன் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர், மைம் கோபி, போஸ் வெங்கட் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். கிராமத்து ராமராஜன், அவர் சம்பந்தி எம்.எஸ் பாஸ்கர், நண்பர் ராதாரவி மூவரும் சேர்ந்து ஒரு மிகப்பெரிய வங்கியை ஹைஜாக் செய்து சில கோரிக்கைகளை அரசாங்கத்திற்கு வைக்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன, எதற்காக இவர்கள் வங்கி ஹைஜாக் செய்கிறார்கள் என்பதே மீதிக்கதை. மரணத்திற்கு நீதியும் கதாபாத்திரத்தில் ராமராஜன் ஆக்சன் நாயகனாக வலம் வந்திருக்கிறார்…
Read More
மாறுபட்ட களத்தில் எலக்சன் கவனம் ஈர்க்கிறதா?

மாறுபட்ட களத்தில் எலக்சன் கவனம் ஈர்க்கிறதா?

உறியடி மூலம் கவனம் ஈர்த்த விஜயகுமார் நடிப்பில், சேத்துமான் பட இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் எலக்சன். உள்ளாட்சித் தேர்தல் களப் பின்னணியில் நடைபெறும் கதை எப்படி இருக்கிறது இந்த எலக்சன். நாட்டின் உச்சகட்ட அரசியல் எங்கு ஆரம்பிக்கிறது என்றால் அது உள்ளாட்சி தேர்தலில் இருந்து தான், ஆனால் அந்தக்களத்தில் கட்சிகளை விட உள்ளூர் ஆட்களின் பகை, துரோகம், ஆசை என அந்த உள்ளூர் ஆட்களின் உறவும் அரசியலும் எந்த படத்திலும் பேசவில்லை, ஆனால் இந்தப்படம் அதை நெருக்கமாக பேசுகிறது. கட்சிகள் கோலோச்சும் அரசியலில் தொண்டன் ஒருவனின் மகன் தலைவன் ஆவதே எலக்சன் படத்தின் கதை. வாணியம்பாடி அருகே, அரசியல் கட்சியொன்றில் கொள்கைப் பிடிப்புள்ள தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவருக்கு நேரும் அவமானத்தை துடைப்பதற்காகத் தேர்தலில் நிற்கும் அவருடைய மகன் உறியடி விஜய் குமார், தேர்தலில் வென்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை. கிராமங்களில் வாழும் மக்களுக்கு…
Read More
ZEE5 யின் தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது ?

ZEE5 யின் தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது ?

  தலைமை செயலகம் தமிழில் புதிதாக வந்திருக்கும் சீரிஸ். இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில், ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவன தயாரிப்பில், கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில், அரசியல் தொடராக வந்திருக்கிறது தலைமை செயலகம். தமிழில் பெரும்பாலும் அரசியல் சினிமாக்கள் கொஞ்சம் கம்மிதான், அரசியலின் பின்னணியில் நடைபெறும் கதைகளை வைத்துக்கொண்டு ஒரு முழு சீரிசை முயன்ற பார்த்திருக்கிறார்கள். அதிலும் இயக்குனர் வசந்தபாலனிடமிருந்து இந்த மாதிரி ஒரு சீரிஸ் எதிர்பாராத ஆச்சரியம். கதை வழக்கம் போல் எல்லா அரசியல் கதையின் மையம் தான் நாற்காலி யாருக்கு எனும் போட்டி தான் இந்தக்கதையின் மையமும்   தமிழக முதல்வராக வருகிறார் அருணாச்சலம் (கிஷோர்). இவர் மீது ஊழல் வழக்கு ஒன்று மத்திய பிரமுகர் ஒருவரால் தொடுக்கப்பட்டு, சில வருடங்களாக அந்த வழக்கும் நடத்தப்பட்டு வருகிறது. சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக திரும்ப, தீர்ப்பும் முதல்வருக்கு எதிராக தான்…
Read More
எப்படி இருக்கிறது ஸ்டார் ?

எப்படி இருக்கிறது ஸ்டார் ?

  இளம் நட்சத்திரம் கவின் நடிப்பில், இளம் இயக்குனர் நலன் இயக்கத்தில், இந்த கால இளைஞர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ஸ்டார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் எந்த ஒரு திரைப்படமும் இத்தனை எதிர்பார்ப்பை தந்ததில்லை. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து இன்றைய கால இளைஞர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது சமீபத்தில் ஒரு டிரெய்லர் மிக அழகாக கட் செய்யப்பட்டு வந்தது என்றால் அது ஸ்டார் படத்திலிருந்து என்று தாராளமாக சொல்லலாம். முழுப் படத்தின் கதையையும் வாழ்க்கையையும் டிரெய்லரிலேயே படக்குழு தந்து விட்டது. இயக்குனரின் முந்தைய படம், நடிகர் கவினின் முந்தைய படமும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. மேலும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திந் மீது ஆர்வத்தை தூண்டியது. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியான ஸ்டார் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா? ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன்…
Read More
அமீரின் உயிர் தமிழுக்கு எப்படி இருக்கிறது?!

அமீரின் உயிர் தமிழுக்கு எப்படி இருக்கிறது?!

அமீர் கதாநாயகனாக நடிக்க ஆதம்பாவாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் உயிர் தமிழுக்கு. அரசியல் கதைக்கள பின்னணியில், ஆர்வத்தை தூண்டிய படம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறதா? அமீருடன் இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பொதுவாகவே இயக்குநர் அமீர் நிஜ வாழ்வில் நிறைய அரசியல் பேசுபவர், அவரது படைப்புகளும் அரசியல் நேர்த்தன்மையுடன் இருக்கக்கூடிய படைப்புகள், இப்படம் அவரது நடிப்பில் அரசியல் பின்புலத்தில் உருவாகிறது என்றவுடன் ரசிகர்களிடம் பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் இந்த படம் நிறைவு செய்ததா? ஒரு அரசியல் காமெடித் திரைப்படம் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் படத்துக்குச் சென்றால் நமக்குச் சின்ன ஏமாற்றம்தான் இது அரசியல் களத்தில் ஒரு காதல் கதை. தான் விரும்பும் பெண்ணிற்காக அரசியல் களத்தில் குதிக்கும் ஒரு கேபிள் ஆபரேட்டர் அந்த அரசியல் களத்தில் என்னவெல்லாம் செய்கிறார் என்பது தான் படத்தின்…
Read More