சுந்தர் சி அரண்மனை 4  அசத்தியதா?

சுந்தர் சி அரண்மனை 4 அசத்தியதா?

குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடும் அரண்மனை படத்தின் நான்காம் பாகம் திரைக்கு வந்திருக்கிறது. குடும்பங்களை திருப்திப்படுத்தும் அளவு சிறப்பாக இருக்கிறதா ? இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, வி டிவி கணேஷ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளிவந்திருக்கிறது அரண்மனை 4.   சுந்தர் சி எப்போதெல்லாம் கொஞ்சம் சோர்ந்து போகிறாரோ, அப்போதெல்லாம் ஒரு அரண்மனை படம் எடுத்து ஜாலியாகி விடுவார். அவருக்கு மட்டுமல்ல படம் பார்ப்பவர்களுக்கும் அதே ஜாலியை இந்த படம் கடத்தி வந்தது, அதனால் தான் இந்த படம் 3 பாகங்களை கடந்து நான்காவது பாகமாக வெளிவந்திருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு செய்து வைத்த சட்டை போல ஒரு ஹாரர் படத்தில் காமெடி கிளாமர் கமர்சியல் எல்லாவற்றையும் கலந்து ஒரு விருந்து சாப்பாடை தயாரித்து வைத்திருந்தார் சுந்தர் சி. அரண்மனை படங்கள் அனைத்துமே கதை ஒன்றாக தான் இருக்கும், ஒரு அரண்மனை அங்கிருக்கும்…
Read More
சிறுவர்களுக்கான சினிமா – குரங்குப்பெடல் !!

சிறுவர்களுக்கான சினிமா – குரங்குப்பெடல் !!

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மதுபானக் கடை பரப்புகள் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் குரங்கு பெடல். எழுத்தாளர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை தழுவி படமாக உருவாகியுள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேல்முருகன், வி.ஆர். ராகவன், எம். ஞானசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இலக்கியம், சிறுகதை, நாவல் போன்றவற்றில் இருந்து படம் எடுப்பது, உலகம் முழுக்க நடைபெறும் வழக்கம் தான். இதன் மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால் அந்தந்த வட்டாரத்து மக்களின் உண்மையான வாழ்க்கை அந்த கதையில் தானாகவே அமைந்துவிடும். நீங்கள் அதற்கு தனியாக உயிர் கொடுக்க முயற்சிக்கத் தேவையில்லை. ஒரு முழுமையான வாழ்க்கை அதிலேயே இருக்கும். தமிழில் நாவல் சிறுகதைகளில் இருந்து படம் எடுக்கும் பழக்கத்தை, வெற்றிமாறன் மட்டுமே வம்படியாக செய்து கொண்டிருக்கிறார். இப்போது அங்கங்கே சில முயற்சிகள் அதன் மூலம் மலர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படம் திரைப்பட விழாக்களில் பார்க்கும்…
Read More
அக்கரன் படம் எப்படி இருக்கிறது ?

அக்கரன் படம் எப்படி இருக்கிறது ?

  குந்த்ரம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்எஸ் பாஸ்கர் எம்எஸ் பாஸ்கரை நாயகனாக வைத்து வெளி வந்திருக்கும் திரைப்படம் அக்காரன் தான் வளர்த்த பெண் பிள்ளைகளுக்காக ஒரு தகப்பன் செய்யும், செயல்கள் தான் இந்த படத்தின் கதைக்கரு. தமிழ் சினிமா ஆரம்பித்த தொன்று தொட்ட காலத்தில் இருந்து, எத்தனையோ முறை திரையில் சொல்லப்பட்ட கதையை, எந்த வித அம்சங்களும் இல்லாமல், இக்காலத்திற்கு ஏற்ற திருப்பங்களோடும், ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார்கள் இந்தப் படம் முழுக்க முழுக்க எம் எஸ் பாஸ்கரை நம்பி அவரின் கதாபாத்திரத்தை சுற்றி தான் அமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் காட்சியிலே எம் எஸ் பாஸ்கர் இரண்டு பேரை கடத்துகிறார் அவர்களை சித்திரவதை செய்து தன் பெண்ணுக்கு என்ன ஆனது எனக் கேட்க ஆரம்பிக்கிறார். அப்போதே நமக்கு மொத்தப்படத்தின் கதையும் தெரிந்து விடுகிறது. நாம் நினைத்தபடியே மொத்தப்படமும் நகர்கிறது. ஆனால் இயக்குநர் புத்திசாலித்தனமாக ஒரு…
Read More
ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் – ஹரி கூட்டணி…ரத்னம் படம் எப்படி?

ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் – ஹரி கூட்டணி…ரத்னம் படம் எப்படி?

  ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி நடிப்பில் திரைக்கு வந்துள்ள ரத்னம் திரைப்படம் எப்படி இருக்கிறது. ஹாட்ரிக் ஹிட் அடித்ததா விஷால் - ஹரி கூட்டணி? தமிழ் சினிமாவில் ஹீரோகளுக்கு அட்டகாசமான மாஸ் ஆக்சன் படங்களை தந்து கமர்சியல் மாஸ்டர் இயக்குர் எனப் பெயர் பெற்ற ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோ விஷால் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தான் ரத்னம் தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு மூன்றாவதாக இவர்களது கூட்டணியில் வந்திருக்கும் ரத்னம் திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி தந்திருக்கிறதா என்று பார்ப்போம் ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு என மூன்று மாநிலங்கள் இணையும் ஒரு இடம், அங்கு நடக்கும் பிரச்சனை தான் களம். சிறு வயதில் அம்மாவை இழந்த மகன், அந்த ஏரியாவில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சமுத்திரகனயைக் காப்பாற்றி அவரிடம் வளர்கிறான். அவருக்காக வெட்டுக்குத்து என எது வேண்டுமானாலும் செய்கிறான். எதேச்சையாக ரோட்டில் பார்க்கும் ஒரு பெண், அவளுக்கு…
Read More
எப்படி இருக்கிறது  டியர் திரைப்படம் ?

எப்படி இருக்கிறது டியர் திரைப்படம் ?

ஆயிரம் பொன் படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவான 'டியர்' திரைப்படம் ஏப்ரல் 11ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் ஜிவி பிரகாஷ் கூட்டணியே மிக வித்தியாசமான கூட்டணி, இவர்கள் இருவர் ஜோடியில், குறட்டை பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் டியர். சில மாதங்கள் முன்பாக குறட்டைப் பிரச்சனையை மையமாக வைத்து குட் நைட் என்ற படம் வந்தது. மணிகண்டன் நடிப்பில் வந்திருந்த அந்த திரைப்படம், குறட்டை பிரச்சனையும், அது குடும்பத்தில் ஏற்படுத்தும் குழப்பங்களையும் விரிவாக அலசி இருந்தது. கிட்டத்தட்ட டியர் படத்தின் கதையும் அதேதான். ஆனால் இந்த படத்தில் குறட்டை பிரச்சனை இருப்பது கதாநாயகிக்கு!! நம் தினசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு சிறு பிரச்சனை எப்படி பூதாகரமாக மாறுகிறது என்பதை திரைக்கதை ஆக்கும் பாடங்கள் பெரும்பாலும் ஜெயித்து விடும். அந்த வகையில்…
Read More
ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

ரசிகர்கள் மனதை ஜெயித்தானா இந்த ரோமியோ !!

விஜய் ஆண்டனி ரொமான்ஸ் எதிர்பாராத கூட்டணி படம் எப்படி இருக்கிறது ? விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மிர்னாலினி ரவி, ஷா ரா, விடிவி கணேஷ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ள ரோமியோ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.   விஜய் ஆண்டனியை வைத்து ஒரு ரொமான்ஸ் படம் இந்த ஐடியாவை யோசித்ததற்கே இயக்குனரைப் பாராட்டலாம் விஜய் ஆண்டனி இதுவரையிலும் சோகமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வந்திருக்கிறார். ஆக்சன் கதைகள், திரில்லர் கதைகள், எமோஷனல் கதைகள் இந்த மாதிரியானப் படங்கள் மட்டுமே நடித்து வந்த விஜய் ஆண்டனி, இந்த படத்தில் தன் களத்திலிருந்து முற்றிலுமாக வெளிவந்து வேறொரு களத்தில் முயற்சித்து பார்த்திருக்கிறார். அது அற்புதமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முதலில் கதை என்னவென்று பார்த்துவிடலாம் மலேசியாவில் வேலை பார்த்து முடித்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் விஜய் ஆண்டனிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவருடைய…
Read More
இந்திய காலபந்து வரலாற்றை பேசும் படம் மைதான் !!

இந்திய காலபந்து வரலாற்றை பேசும் படம் மைதான் !!

இந்திய கடைசியாக 1962 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 64 வருடங்கள் ஆகிவிட்டது ஒரு கோப்பையைக் கூட இன்று வரை வெல்லவில்லை. எத்தனை கொடுமையான விசயம் ஆனால் இந்திய காலப்பந்தாட்டத்தின் பொற்காலமாக சொல்லப்படுகிற 1956 முதல் 1962 வரை, இந்திய கால்பந்தாட்ட கோச்சாக பணிபுரிந்து இந்தியாவை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த, ரஹீம் எனும் அற்புதமான வரலாற்றை பேசுவது தான் இந்த மைதான் திரைப்படம். ஏன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் இத்தனை பின் தங்கி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் வாங்கிய பிற்பாடு உலகளவில் நமக்கு மரியாதை வாங்கி தந்தது விளையாட்டுப் போட்டிகள் தான். கிரிக்கெட், கால்பந்து, ஓட்டம் நம் விளையாட்டு வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளில் தங்கள் திறமையை கொட்டினார்கள் ஆனால் அ உரியவர்களுக்கு உரித்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டதா ? இல்லையே அந்த சோக வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்கிறது இந்தப்படம். ஏ ஆர் ரஹீம் தனக்கு கிடைத்த…
Read More
‘கள்வன்’ உள்ளங்களை கவர்கிறானா?

‘கள்வன்’ உள்ளங்களை கவர்கிறானா?

தயாரிப்பு - டில்லி பாபு நடிப்பு - ஜி.வி.பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா இயக்கம் - PV ஷங்கர் அறிமுக இயக்குநர் PV ஷங்கர் இயகியுள்ள இப்படம், கோவை வட்டார வழக்குடன் ஒரு மலை கிராம மக்களின் கதையை சொல்கிறது. சிறு திருட்டு வேலைகள் செய்யும் ஒரு வாலிபன் வாழ்க்கையில் காத லும் அரவணைப்பும் கிடைக்க, அவன் என்ன செய்வான் என்பது தான் கள்வன். சத்திய மங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தில் யானை மிதித்து சிலர் இறக்கிறார்கள், அங்கு சில திருட்டு வேலைகள் செய்யும் இளைஞனான ஜீவி, இவானாவை காதலிக்கிறார். அவரைக் கவர்வதற்காக முதியோர் இல்லத்தில் இருக்கும் பாரதிராஜாவை தன்னோடு அழைத்து வந்து தன் வீட்டில் வைத்துக் கொள்கிறார் ஜி வி பிரகாஷ். இந்த நேரத்தில் அக்கிராமத்தில் யானை மிதித்து பல பேர் சாக, அவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதை தொடர்ந்து அங்கு நடக்கும் திருப்பங்களும், சுவாரசியங்களும் தான் திரைப்படம்…
Read More
நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம் !!

நேற்று இந்த நேரம் திரைப்பட விமர்சனம் !!

இயக்கம் : சாய் ரோஷன் தயாரிப்பு : கிளாப்இன் ஃபிலிமோடெய்ன்மென்ட் நடிகர்கள் : ஷாரிக் ஹசன், ஹரிதா, மோனிகா ரமேஷ், திவாகர் குமார், ஆனந்த், நித்தின் ஆதித்யா, காவ்யா, அரவிந்த் மற்றும் பலர். ஹாலிவுட் படங்களில் ஒரே இடத்தில் நடக்கும் க்ரைம் கதைகள் அதிகம் மிகக் குறைந்த பத்திரங்கள், அங்கு நடக்கும் குற்றம், அதை யார் செய்தது? இதுதான் இந்த க்ரைம் கதைகளின் அடிப்படைத் தன்மை. இந்த படமும் அதை பின்பற்றி ஒரு கிரைம் திரில்லராக வெளிவந்திருக்கிறது அறிமுக இயக்குநர் சாய் ரோஷன்- இன்றைய இளம் தலைமுறையினர் வாழ்க்கையில் காதல் நட்பு போதை என எப்படி இருக்கிறார்கள் என்பதையும் 'நேற்று இந்த நேரம்' சொல்கிறது ஆனால் அது உண்மையா ?   மலைப்பிரதேசம் ஒன்றின் கல்லூரி படிப்பு நிறைந்தவுடன் பொழுதுபோக்கிற்காக நண்பர்கள் அனைவரும் (நிகில்- ரோஹித் -ஆதித்யா- ஹிருத்திக் -நித்யா- ரித்திகா- ஸ்ரேயா-) ஒன்றிணைந்து பயணிக்கிறார்கள். நிகில் காணாமல் போகிறார். இதனால்…
Read More
ஹாட் ஸ்பாட் படம் வில்லங்கமா ?

ஹாட் ஸ்பாட் படம் வில்லங்கமா ?

  இயக்கம்: விக்னேஷ் கார்த்திக் நடிப்பு : கலையரசன், சோபியா, சாண்டி, அம்மு அபிராமி, ஜனனி, சுபாஷ், கௌரி ஜி கிஷன், ஆதித்ய பாஸ்கர், இசை: சதீஷ் ரகுநாதன், வான் தயாரிப்பு: பாலாமணிமார்பன் கே ஜே, சுரேஷ் குமார், கோகுல் பெனாய் அடியே, திட்டம் இரண்டு படங்களின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆந்தாலஜி வகையில் 4 வில்லங்கமான கதைகளின் தொகுப்பாக வந்துள்ள படம் ஹாட் ஸ்பாட் ஒரு தயாரிப்பாளரிடம் உதவி இயக்குநர் ஒருவர் கதை சொல்லப் போகிறார். கதை கேட்கும் மூடில் இல்லாத தயாரிப்பாளரிடம் அவர் 4 தனித்தனி கதைகளை சொல்கிறார். அந்த நான்கு தனித்தனி கதைகளும் தான் இந்த படம் விக்னேஷ் கார்த்திக் இயக்குனராகவே வருகிறார் அவர் சொல்லும் நான்கு கதைகளும் படத்தில் திரைப்படமாக வருகிறது. அடியே, திட்டம் இரண்டு என தனது படங்களின் கான்செப்ட் , ஐடியா எல்லாவற்றிலும் வித்தியாசமாக யோசிக்கும் விக்னேஷ் கார்த்திக் இந்த படத்தில்…
Read More