மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான மணிவண்ணன் காலமான தினமின்று. அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் நினைவஞ்சலி எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும்…
Read More
சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

திண்டுக்கல் நகரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.வி.பி.ஜி., திரையரங்கம் இடிக்கப்பட்டக் காட்சியை இன்னிக்கு ஒரு ரிப்போர்ட்டர் நேரில் பார்த்து நொந்து போயிருக்கிறார். எனது சின்ன வயது சினிமா கனவுகளை மிக எளிய கட்டணத்தில் நிஜமாக்கிய திண்டுக்கல் என்.வி.ஜி.பி. திரையரங்கம் சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்ததாம் என்று குறிப்பிட்டு காலி இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அண்மையில் சைக்கோ டைரக்டர் மிஷ்கின் கூட இந்த தியேட்டருக்கு போய் வந்து என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர்’ இது. என்றெல்லாம் சொல்லி இருந்து நினைவிருக்கும். இதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா பகிர்ந்திருக்கும் ரிப்போர்ட் இதோ: திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 1160 இருக்கைகளை கொண்ட பெரிய திரையரங்கம் என்பதால் இந்த தியேட்டரில் படம் பார்ப்பதே ஒரு திருவிழா போல் இருக்கும். தியேட்டர் தொடங்கிய முதல்நாள் பொன்னப்ப பாகவதர் நடித்த ‘பவளக்கொடி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.20 பைசா முதல் அதிகபட்ச…
Read More
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி இன்னியோட ஸ்வீட் 17 இயர்ஸ் ஆனதா வந்த சேதியை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி: சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. அப்படத்திற்கு சேரனே நடிகராகவும், இயக்குனராக வும் பல விருதுகளை வென்றுள்ளார். அதில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை கிளறும் வகையில் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மஹா ஹிட் அடிச்சு  3 தேசிய விருதுகளை குவிச்சுது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிச்சு இந்த ஆட்டோகிராஃப். இது குறிச்சு டைரக்டர் சேரன்-கிடே பேசினப்போ ”பல பேரு ‘ஆட்டோகிராஃப்’படத்துலே வந்த சம்பவங்கள் தங்களோட வாழ்க்கை நடந்த சம்பவமா நெனச்சாங்க. ஆனா ஒரு விசயம் தெரியுமா? இதே கதையை அப்போ டாப் லிஸ்டில் இருந்த அரவிந்த் சாமி,…
Read More
பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

பாலுமகேந்திரா – மறக்க முடியாத படைப்பாளி!

இலங்கையில் பிறந்தவருக்கு இயக்குநர்கள் டேவிட் லீன், சத்யஜித்ரே ஆகியோர்தான் மானசீக குரு. இருந்தாலும் போட்டோகிராபியே முதல்காதல் என்பதால் பயணம் அப்படி துவங்கியது.. எழுபதுகளின் துவக்கத்தில் மலையாள படங்களை ஒளிப்பதிவு செய்தவருக்கு, மிகப்பெரிய அளவில் பேசவைத்தது சட்டக்காரி என்ற படம்.. நடிகை லட்சுமிக்கு செமபிரேக்.. முதல் கணவர் மோகன் சர்மா உடன் நடித்த படம். இயக்குனர் கே எஸ் சேதுமாதவன். 1962- ல் கமலை மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய ஜாம்பவான். தமிழில் எம்ஜிஆரை வைத்து நாளை நமதே கமலை வைத்து நம்மவர் போன்ற படங்களை பின்னாளில் இயக்கியவர். இப்பேர்ப்பட்ட ஜாம்பவானின் படத்தில் பணியாற்றிய பாலுமகேந்திராவுக்கு அதற்குப் பிறகு ஏறுமுகம்தான்..சட்டக்காரி படம்பின்னர் இந்தியில் ஜூலியாக எடுக்கப்பட்டு அதிலும் லட்சுமி கிளாமராக கலக்கியதில் அகில இந்திய அளவில் தாறுமாறாக ஓடியது தனிக்கதை.. போட்டோகிராபியுடன் ஏழு முகத்தைக் கண்ட பாலுமகேந்திராவுக்கு டைரக்சன் செய்யும் ஆசையும் வந்துவிட்டது. 1977-ல் டைரக்டராய் கச்சிதமாய் கன்னடத்தில் செதுக்கியபடம் கோகிலா. கமலின்…
Read More
“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்!

“சைக்கோ” முதல் வருட கொண்டாட்டம்!

Double Meaning Productions, ஒரு தயாரிப்பு நிறுவனம் தனது படைப்புகளின் அடையாளமாக நிறுவனத்தின் சார்பில் “சைக்கோ” திரைப்படத்தை தந்து, விமர்சக ரீதியிலும் பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றியை குவித்த இந்நன்நாளில் ஒரு வருட நிறைவை பெருமிதத்துடன் “சைக்கோ” படத்தின் முதலாமாண்டை கொண்டாடுகிறது. Double Meaning Productions தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியது... விநியோக தளத்தில் வெற்றிக்கு (Double Meaning) இரட்டை அர்த்தம் உண்டு. படைப்பின் முழுமையை அடைந்த திருப்தி மற்றும் வியாபார ரீதியில் விநியோக தளத்தில் அடையும் வெற்றி என இரண்டும் வெற்றியின் அடையாளமாக பார்க்கப் படுகிறது. அந்த வகையில் “சைக்கோ” படத்தின் வெற்றியில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். திரையரங்குள் முழுதும் பயமும் இருளும் பரவியிருந்தாலும் அதனை மீறி அன்பின் ஆன்மா அனைவருடத்திலும் பரவியிருந்தது. சில காட்சிகள் இமை மூட மறுத்து மலர்ந்து விரிய, அதற்கு மாறாக சில காட்சிகள் கண்கள் இறுக மூடிக் கொள்ளும் இரண்டு தன்மைகளும் இப்படத்தில் நடந்தது. கண்…
Read More
விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

விஜய்மில்டனின் ’கோலி சோடா’! – கொஞ்சம் பிளாஷ் பேக் ரிப்போர்ட்!

பெரிய நட்சத்திரங்கள், நம்பர் ஒன் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாருமில்லாத கோலி சோடா படத்தின் பட்ஜெட் ரூ 2.5 கோடிதான். விஜய் மில்டன் இயக்கிய இந்தப் படம் ரூ 15 கோடி வரை சம்பாதித்துக் கொடுத்தது. புதிய கதை, சொன்ன விதம் என இயக்கு நரின் திறமையால் ஜெயித்த படம் இது. அந்த கோலி சோடா ரிலீஸாகி 6 வருஷம் ஆகுது. அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா ஷேர் செய்திருக்கும் சேதியிதோ பிரியமுடன் , ஆட்டோகிராப், காதல் மற்றும் வழக்கு எண் 18/9 போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படத்தில் இயக்குனராக மாறினார். கோலி சோடா அவரது இரண்டாவது முயற்சி ஆகும். கோயம்பேடு சந்தைக்கு ஒரு அதிகாலை பயணத்தின் போது கதைக்கான உத்வேகம் அவருக்கு வந்தது. "ஒரு நாள் காலையில் நான் கோயம்பேடு சந்தை வழியாகச் சென்று கொண்டிருந்தேன், யத்தேச்சையா கடைகளுக்கு மேலே…
Read More
எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

எம்.ஜி.ஆரையே அசர வைத்த ‘அன்பே வா’ தயாரான சுவையான கதை!

வெள்ளித்திரையில் கொடிகட்டிப் பறந்தவர்களை வைத்துப் படமெடுத்த பிரமாண்ட நிறுவனம் ஏவிஎம் தயாரிச்ச படம் ‘அன்பே வா’. பொதுவாக இந்த நிறுவனத்தில் நடித்தாலே, அவர்கள் கொடி இன்னும் உயர ஆரம்பித்துவிடும். சிவாஜியை வைத்தும் ஜெமினியை வைத்தும் ஜெய்சங்கரை வைத்தும் எஸ்.எஸ்.ஆரை வைத்தும் ரவிச்சந்திரனை வைத்தும் என படங்கள் எடுத்த ஏவிஎம்... முதன் முறையாக எம்ஜிஆரைக் கொண்டு எடுத்த படம்தான் அன்பே வா. இதன் கதை உருவானதே அலாதியாக்கும்.. அதாவ்து 1961 ஆம் வருசம் வெளியான அமெரிக்க காதல் நகைச்சுவைத் திரைப்படமான கம் செப்டம்பர் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் குறிப்பாக மெட்ராஸில் சூப்பர் ஹிட் ஆனது. இதன் உள்ளாக்கத்தை ஏ.வி.எம் புரொடக்ஷன்ஸில் இருந்த ஏ.சி.திருலோக்சந்தர், தழுவி தனி ஒரு கதை பிடித்தார், ஆனால் ஏ.வி.எம் அப்படத்தைத் தழுவுவதற்கான உரிமையை வாங்கவில்லை என்பது தனிக் கதை. இந்த படத்துக்காக திருலோக்சந்தரின் சம்பளம் 70,000 ஆகும். ஆரூர் தாஸ் படத்தின் வசனங்களை எழுதினார், மற்றும் எஸ்.பி.முத்துராமன் உதவி…
Read More
நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

நடிகர் திலகம் சிவாஜிக்கே ஸ்பெஷலான படம் ’வியட்நாம் வீடு’ ! ஏன் தெரியுமா?

கவிதையோ, கதையோ அல்லது நகைச்சுவை என்றால் கூட மறக்க முடியாத கேரக்டர் கள் இருப்பது போல் சினிமாவிலும் நிறையவே உண்டு. பல சினிமாக்களில் சம்பந்தப் பட்ட நடிகர் - நடிகைகள், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்து நம்மை பிரமிக்க வைத்திருப் பார்கள். அப்படி, திரையுலகில் நம் கண்முன்னே ஆதர்ஷ தம்பதியாக வாழ்ந்து காட்டியவர்கள் சிவாஜியும் பத்மினியும். அந்தப் படத்தில் சிவாஜி தெரியமாட்டார். பத்மினியைப் பார்க்கமுடியாது. பிரஸ்டீஜ் பத்மநாபனும் சாவித்திரியும்தான் தெரிவார்கள்; ஒளிர்வார்கள். அந்தப் படம்... 'வியட்நாம் வீடு’. சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இப்படம், நடிகர் திலகத்தின் உணர்ச்சிபூர்வமான நடிப்பைக்கொண்ட படங்களில் கண்டிப்பாக இடம் பெறுவது. ஏற்கெனவே விடிவெள்ளி (பிரபுராம் பிக்சர்ஸ்), பாசமலர், குங்குமம் (ராஜாமணி பிக்சர்ஸ்), புதிய பறவை (சிவாஜி பிலிம்ஸ்), அன்னை இல்லம் (கமலா பிக்சர்ஸ்), தெய்வமகன் (சாந்தி பிலிம்ஸ்) போன்ற படங்கள் சொந்தப்படமாக இருந்தபோதிலும் 'சிவாஜி புரொடக்ஷன்ஸ்' என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் படமாக தயாரிக்கப் பட்டது.…
Read More
The greatest show man of India – ராஜ்கபூர்!

The greatest show man of India – ராஜ்கபூர்!

தற்போது இந்தி தெலுங்கு தமிழ் என இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் திரையிடப் பட்டு வசூலில் கொடிகட்டி பறக்கலாம்..சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முதன்முதலாய் விதை போட்டவர் நடிகர் ராஜ்கபூர்.. ரஷ்யாவில் ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட இந்தியர் ராஜ்கபூர்தான் என்பார்கள்.. அந்த அளவுக்கு அவரின் படங்கள் ரஷ்யாவில் அமோகமாக ஓடின..! நடிப்பு தயாரிப்பு இயக்கம் மட்டுமின்றி சினிமா பற்றிய தொழில்நுட்பங்களும் ஜாம்பவானாக விளங்கியவர் ராஜ்கபூர். அதனால்தான் அவரை தி கிரேட்டஸ்ட் ஷோ மேன் ஃப் இந்தியா என்று பெருமையோடு பேசுவார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த பிரிதிவிராஜ் கபூர் அவர்களின் மூத்த மகன்தான் ராஜ்கபூர்.. ! இன்றளவும் இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்று பேசப்படுகிற mughal-e-azam (1960) படத்தில் அக்பர் ஆக வருவார் பிரிதிவிராஜ் கபூர்.. கம்பீரமான குரல் வளத்தோடு படம் முழுவதும் துவம்சம் செய்யும் அவரின் நடிப்பை காண…
Read More
விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் ‘சீயான்’ ஆக மாற உதவிய சேது படத்தின் போராட்டக் கதை!

விக்ரம் நடிச்ச சேது இதே டிசம்பர் 10ல்தான் ரிலீஸாச்சு அதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேது பட தயாரிப்பின் ஃபிளாஷ் பேக் ஸ்டோரி சேது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி காதல் நாடகத் திரைப்படமாகும், நீண்ட காலமாக திரையுலகில் தன்னை நிரூபிக்க கடினமாக போராடிக் கொண்டிருந்த விக்ரமுக்கு தமிழ் சினிமாவுலகில் ஒரு தனி அடையாளத்தைக் பெற்றுத் தந்த திரைப் படம் இந்த சேது.அதேபோல் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த பாலா இயக்கிய முதல் திரைப்படமும் சேது தான். தன்னை எந்தளவுக்கும் வருத்திக்கொள்ளக் கூடிய இன்னொரு நடிகனாகவே இருந்த விக்ரம் தனது சினிமா வாழ்க்கையின் முதல் வெற்றியை ருசித்த படமிது . இந்த ஒரு வெற்றிக்காக விக்ரமின் காத்திருப்பு என்பது பெரிய பகீரத பிராயத்தனம். தன்னுடைய முதல் படத்தில் இருந்து பல தோல்விகளைச் சந்தித்த விக்ரம், கடைசி வாய்ப்பாக தன் கையில் எடுத்தது ‘சேது’ படத்தைதான்…!…
Read More