உதயநிதி நடிக்கும் புதுப்படம் தொடங்கிடுச்சு – மகிழ் திருமேனி டைரக்ஷன்!

உதயநிதி நடிக்கும் புதுப்படம் தொடங்கிடுச்சு – மகிழ் திருமேனி டைரக்ஷன்!

பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தற்போது பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படமொன்றை பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றது. ஆம்.. ரெட் ஜெயன்ட் மூவிஸ் ‘Production No 14’ படத்தின் பணிகள் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ‘தடம்’ வெற்றிப் படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, ‘சைக்கோ’ வெற்றிப் படத்தில் நடித்த உதயநிதி ஸ்டாலின், இவர்கள் இருவரும் முதன் முறையாக இணையும் இப்படம் பலரின் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. இப்படத்தின் நாயகியாக நிதி அகர்வால் நடிக்கின்றார். தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் தயாரிப்பு - ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பு - M. செண்பகமூர்த்தி, R.அர்ஜீன் துரை இயக்கம் - மகிழ் திருமேனி இசை - அரோல் கரோலி ஒளிப்பதிவு - K.தில்ராஜ் கலை - T.ராமலிங்கம் படத்தொகுப்பு - ஶ்ரீகாந்த் NB பாடல்கள் - மதன் கார்க்கி தயாரிப்பு நிர்வாகம்…
Read More
தமிழில் வெளியான முதல் திரைப்படம் காளிதாஸ்! – எக்ஸ்க்ளூசிவ் By கட்டிங் கண்ணையா!

தமிழில் வெளியான முதல் திரைப்படம் காளிதாஸ்! – எக்ஸ்க்ளூசிவ் By கட்டிங் கண்ணையா!

1931-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஜி. வெங்கடேசன், டி. பி. ராஜலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது சம்ஸ்கிருத கவிஞர் காளிதாசாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டது. இப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் முக்கிய வேடத்திலும், டி.பி.ராஜலக்ஷ்மி முக்கிய பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். எல்.வி.பிரசாத், தேவாரம் ராஜாம்பாள், டி.சுஷீலா தேவி, ஜே.சுஷீலா மற்றும் எம்.எஸ்.சந்தானலட்சுமி ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம்தான் தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமாகும். இந்தப் படத்தின் பாடல்கள் மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதி, நாடக மேடைகளில் பாடப்பட்டு வந்தவை. முதல் தமிழ்ப் படத்தின் பாடலாசிரியர் எனும் பெயர் பாஸ்கரதாசுக்கு கிடைத்தது. அதுவரை ஊமைப்படம் என்று சொல்லப்பட்ட மவுனப்படங்களையே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு திரையில் பேசும் பாத்திரங்களைக் கண்டதுமே, படத்திலிருந்த சிறுசிறு குறைகளையும் தாண்டி கொண்டாடித் தள்ளிவிட்டார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ‘ஆலம் ஆரா’ (1931) தயாரித்த…
Read More
இருமொழியில் தயாராகும் அடுத்த படத்தை அறிவித்தார் கிரண் கே தலசீலா!

இருமொழியில் தயாராகும் அடுத்த படத்தை அறிவித்தார் கிரண் கே தலசீலா!

தெலுங்கு திரையுலகின் தற்போதைய தலைசிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவராக உலா வருபவர் இளம் தயாரிப்பாளர் கிரண் கே. தலசீலா. இவர், தெலுங்கு திரைப்படம் 'பலே மஞ்சி சவுகா பேரம்' (2018) படத்தின் வாயிலாக இணை தயாரிப்பாளராக தடம் பதித்தார். சினிமா துறையில் கால்பதித்த மிகக் குறுகிய காலகட்டத்தில், 'பிரதி ரோஜு பண்டகே' போன்ற வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பை உறுதிப்படுத்தியுள்ளார். 2019-ல் கிரண் தெலுங்கு மற்றும் கன்னட திரைத்துறையில் ஒரே வேளையில் கால் பதித்தார். ஜீவாவின் 'கொரில்லா' படத்தில் கிரண் அசோசியேட் தயாரிபாளராக இருந்தார். கன்னட திரைப்படமான 'நன்ன பிரகாரா'-வில் அவர் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்தாண்டு தொடக்கத்தில் பாலிவுட்டையும் தொட்டுவிட்டார். 'ஏ காஷ் கே ஹம்' (Ae Kaash Ke Hum) அவரின் பாலிவுட் அறிமுகப்படம். விஷால் மிஸ்ரா இப்படத்தை இயக்கி இருந்தார். விவான் ஷா, பிரியா சிங், சோஃபியா சங் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தற்போது கிரண், முழு நேர…
Read More
கோலிவுட் பீ.ஆர்.ஓ. ஆனந்த் தயாரிப்பாளராகும் படத்துக்குப் பூஜை போட்டாச்சு!

கோலிவுட் பீ.ஆர்.ஓ. ஆனந்த் தயாரிப்பாளராகும் படத்துக்குப் பூஜை போட்டாச்சு!

ரா கிரியேஷன்ஸ் மற்றும் ஃப்ரைடே பிலிம் பேக்டரி சார்பில் பிரகாஷ் மற்றும் கேப்டன் எம்.பி.ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படம் நேற்று துவங்கியது. இப்படத்தை இதுவரை கோலிவுட்  பீ ஆர் ஓ-வாக வலம் வந்த ஆனந்த் என்பவர் புரொடியூஸ் செய்கிறார். அத்துடன்   தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரகாஷ் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மியா யுக்தா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் கலை இயக்குநர் கிரண், போஸ் வெங்கட், K.P.Y. பாலா, அமுதவாணன், வில்லனாக அஜய் கண்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு – சிவ சாரதி, இசை – விக்கி மற்றும் ஹரி, படத் தொகுப்பு – ராம்நாத், கலை இயக்கம் – பழனி குமார், சண்டை இயக்கம் – ரக்கர் ராம். சைக்கோ திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கிஷன் ராஜ். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கி  சென்னை, கோவை, மேட்டுப்பாளையம் போன்ற…
Read More
கோலிவுட்-டில் ரியல் சாக்லேட் பாய் பிரசாந்த் நடிக்கும் ‘அந்தாதூன்’ ரீ மேக்!

கோலிவுட்-டில் ரியல் சாக்லேட் பாய் பிரசாந்த் நடிக்கும் ‘அந்தாதூன்’ ரீ மேக்!

சில வேற்று மொழி படங்களைப் பார்க்கும் போது, இந்தப் படம் எப்போது தமிழ் ரீமேக்கில் செய்வார்கள் என்ற ஆர்வம் எழும். ஏனென்றால் அந்தளவுக்கு அந்தப் படத்தின் கதாபாத்திரங் களில் தாக்கம் நம்மை பாதித்திருக்கும். அப்படியொரு படம் தான் ‘அந்தாதூன்’. அனைத்து மொழிகளிலும் ஏற்றவாறு கலகலப்புடன் கூடிய த்ரில்லராக அமைத்திருப்பார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். 450 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது மட்டுமன்றி சிறந்த இந்திப் படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் வென்றது. அதில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கினை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் தியாகராஜன். ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு பணிகளைத் தொடங்கினார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடலிழைத்து முழுமையாக மாறியுள்ளார் பிரசாந்த். இந்தப் படத்தை ‘பொன்மகள் வந்தாள்’ படத்தின் மூலம்…
Read More
தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

தமிழ் சினிமாவின் பெண் சிவாஜி கின்னஸ் சாதனை நாயகி ஆச்சி மனோரமா!

நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு திரையில் பல சிகரங்களை தொட்டவர் மனோரமா.. எந்த மொழியாகட்டும், இந்தியத் திரையுலகில் இப்படியொரு திறமைசாலி நடிகை கிடையவே கிடையாது அடித்துச்சொல்லலாம்.. அப்படிப்பட்ட நடிப்பாற்றல் அவருடையது. ராஜமன்னார் குடியில் 1937 மே 26ல் பிறந்த ஆச்சி மனோரமாவின் ஒரிஜினல் பெயர் கோபி சாந்தா. டைரக்டர் மஸ்தான் புண்ணியத்தில் முதன் முதலில் தலைகாட்டியது சென்னையில் தயாரான ஒரு சிங்கள படத்தில் என்பதுதான் ஆச்சர்யமான தகவல்.. அதன் பிறகு எம்ஜிஆரின் இன்ப வாழ்வு, ஊமையன் கோட்டை படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இரண்டுமே முழுவதுமாக உருவாகாததால் வெளியாகவேயில்லை. கடைசியில் திருப்புமுனையை தந்தது 1958-ல் கண்ணதாசன் தயாரித்து வெளியிட்ட மாலையிட்ட மங்கை திரைப்படம்.. தொடர்ந்து துண்டு ரோல்களே ... இருந்தாலும் வெற்றிகரமாகவே அனைத்தையும் செய்துவந்தார்.. கதாநாயகிகள் அளவுக்கு பேரழகு கொண்டவரை சரியாக அடையாளம் கண்டவர் மாடர்ன் தியேட்டர்ஸ…
Read More
எம்.ஜி.ஆர். பார்முலாவை கண்டுப் பிடித்த ப. நீலகண்டன்!

எம்.ஜி.ஆர். பார்முலாவை கண்டுப் பிடித்த ப. நீலகண்டன்!

பழம்பெரும் இயக்குனர் ப.நீலகண்டனுக்கு இன்னிக்கு பிறந்த நாள்…! அதை ஒட்டி நம் கட்டிங் கண்ணையா கலெக்ட் செய்து கொடுக்கும் சிறப்பு சேதி இதோ: இப்போ கோலிவு அப்படீன்னு சொல்லப்படும் தமிழ் சினிமாவின் தனி சாதனைப்படைத்த நாயகர் எம் ஜி ஆர்.. பின்னாளில் தலைவராக உருமாறிப் போன எம் ஜி ஆர் நடிகர் மட்டுமல்ல. தயாரிப்பாளரும் கூட. தயாரிப்பாளர் மட்டுமா? இயக்குநரும் கூட. ஒரு படத்தின் வெற்றிக்கு என்னென்ன தேவை என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுபவர். அப்படி அவர், கதைக்கு எவையெல்லாம் தேவை என்று சேர்த்தாரோ… வெகுஜன மக்களை எந்தந்த விஷயங்கள் ஈர்க்கும் என்று கணக்கிட்டுக் கணித்தாரோ… அந்த விஷயங்கள்தான் ஒரு சினிமாவுக்கான வெற்றி ஃபார்முலா என்று உருவானது. அவைதான்… ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்று கொண்டாடப்பட்டது. அங்ஙனம் எம்ஜிஆரையும் எம்ஜிஆர் ஃபார்முலாவையும் மிக இயல்பாக உள்வாங்கி ரசிகர்களிடம் கொண்டு போய்ட் சேர்த்து பல வெற்றிப் படங்களை எம்.ஜி.ஆர் மூலம் கொடுத்தவர். ப.நீலகண்டன். விழுப்புரத்தில்…
Read More
பாரதிராஜாவின் 16 வயதினிலே பட அனுபவம்!

பாரதிராஜாவின் 16 வயதினிலே பட அனுபவம்!

16 வயதினிலே படம் ரிலீஸாகி 43 வருசமாச்சாம் இதையொட்டி பாரதிராஜா-வுக்கு வாழ்த்து சொல்லி விட்டு அப்படத்தின் அனுபவம் குறித்து விசாரித்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி இதோ: “என்னுடைய கிராமத்து வாழ்க்கையிலே நான் சந்திச்ச சிலபல அனுபவங்களை ஒட்டி உருவான கதைக்கு பேர் ‘மயிலு. ஒரு கிராமத்து மனுஷியின் ஏக்கத்தைச் சொல்கிற திரைக்கதையைத் தயார் செய்து, பிலிம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுக்கு அப்போது அனுப்பினேன். பல சினிமா முக்கியஸ்தர்கள் கதைத் தேர்வுக் குழுவில் இருந்தும்கூட என்னுடைய திரைக்கதை ஏற்கப்படலை. இவ்வளவுக்கும், ‘16 வயதினிலே’ படத்தின் வடிவத்திலிருந்து மாறுபட்ட திரைக்கதை அது. முழுக்க வறட்சியான காட்டுப் பிரதேசம். அந்த வாழ்க்கை. அந்த ஏக்கம். இடைவேளைக்குப் பிறகு மயிலு பேசுவது ஒரேயொரு வசனம்தான். இப்படித்தானிருந்துச்சு என்னுடைய திரைக்கதை. நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டு வருஷங்கள் அப்படியேக் கிடந்துச்சு. பிறகு தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவைப் பார்த்தபோது நான் சொன்னது கூட ‘சிகப்பு ரோஜாக்கள்’ கதைதான். அடுத்து…
Read More
குரல் வசிய தேவதை ஸ்வர்ணலதா!

குரல் வசிய தேவதை ஸ்வர்ணலதா!

🎬பாடகி ஸ்வர்ணலதாவின் நினைவுநாள் இன்று. 😢 அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் நினைவஞ்சலி ரிப்போர்ட் தனித்துவமான குரல் வளத்தை பெற்ற பாடகி ஸ்வர்ணலதா. இப்போதெல்லாம் பின்னணி பாடல்களை பாடினால், யாரிந்த பாடலை பாடியது -ன்னு கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமாகி விட்டது. ஆனால் சொர்ணலதா அப்படி ஒரு வாய்ப்பையே ரசிகர்களுக்கு வைக்கவில்லை. அட்டே இந்த பாட்டு பாடியது ஸ்வர்ணலதாவே தான் என்று உறுதியாகவே தெரிந்துவிடும். அந்த அளவுக்கு ஒரு பரிச்சயம் வாய்ந்த குரல். ஸ்வர்ணலதாவுக்கு ஹிட்டாகும் பாடலாகவே கிடைக்குதே என்று ஒரு சிலரும், ஸ்வர்ணலதா பாடினால், அந்தப் பாட்டு நிச்சயம் ஹிட் அப்படீன்னு பல பேரும் பேசத் தொடங்கினார்கள். ரிலீஸாகும் அம்புட்டு படத்துலேயும் ஒரு பாடலாவது ஸ்வர்ணலதா பாட்டு இடம் பிடிப்பதும் மாதத்துக்கு ரெண்டு பாட்டாவது மெகா ஹிட்டாகி விடுவதும் வாடிக்கை. உச்ச ஸ்தாயியில் இவர் குரல் போகும் போதெல்லாம் கலங்கடித்து விடுவார். ‘அலைபாயுதே’வில், ‘எவனோ ஒருவன்’ பாடலலைக் கேட்கும் போது,…
Read More
நேருக்கு நேர்  ரிலீஸாகி 23 வருசமாச்சு!

நேருக்கு நேர் ரிலீஸாகி 23 வருசமாச்சு!

நேருக்கு நேர் 1997ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை நிறைந்த அதிரடி படம். இப்படத்தை மணி ரத்னம் தயாரிப்பில் எழுதி இயக்கியவர் இயக்குனர் வசந்த். இப்படத்தில் விஜய், சூர்யா, சிம்ரன் மற்றும் கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடத்திலும், ரகுவரன், சாந்தி கிருஷ்ணா,பேபி ஜெனிபர், கரண், விவேக், மணிவண்ணன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் பொதுவான வேடத்திலும் நடிச்சாங்க. இசையை தேவாவும், ஒளிப்பதிவை கே வி ஆனந்தும் செய்துள்ளனர். இது தெலுங்கில் முக முகி என மொழி பெயர்க்கப்பட்டது. இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. இது கமர்சியல் வெற்றியாக அறிவித்ததோடு, 1997 ஆம் ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்ற பெயரும் எடுத்துச்சு (தகவல் உதவி : கட்டிங் கண்ணையா) ஆரம்பத்தில் வசந்த் தனது பிரிய நாயகனான ஆசை அஜீத் மற்றும் விஜய்யை முக்கிய வேடத்தில் நடிக்கக் கேட்டார். ஆனால், ஷூட்டிங் ஆரம்பிச்ச 18 நாட்களிலேயே கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக அஜீத்…
Read More