சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

திண்டுக்கல் நகரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.வி.பி.ஜி., திரையரங்கம் இடிக்கப்பட்டக் காட்சியை இன்னிக்கு ஒரு ரிப்போர்ட்டர் நேரில் பார்த்து நொந்து போயிருக்கிறார். எனது சின்ன வயது சினிமா கனவுகளை மிக எளிய கட்டணத்தில் நிஜமாக்கிய திண்டுக்கல் என்.வி.ஜி.பி. திரையரங்கம் சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்ததாம் என்று குறிப்பிட்டு காலி இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அண்மையில் சைக்கோ டைரக்டர் மிஷ்கின் கூட இந்த தியேட்டருக்கு போய் வந்து என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர்’ இது. என்றெல்லாம் சொல்லி இருந்து நினைவிருக்கும். இதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா பகிர்ந்திருக்கும் ரிப்போர்ட் இதோ:

திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 1160 இருக்கைகளை கொண்ட பெரிய திரையரங்கம் என்பதால் இந்த தியேட்டரில் படம் பார்ப்பதே ஒரு திருவிழா போல் இருக்கும்.

தியேட்டர் தொடங்கிய முதல்நாள் பொன்னப்ப பாகவதர் நடித்த ‘பவளக்கொடி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.20 பைசா முதல் அதிகபட்ச கட்டணமாக 1 ரூபாய் வரை தொடக்கத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

எம்.ஜி.ஆர்., சிவாஜி காலகட்டங்களில் இவர்களது படங்கள் அதிகம் திரை யிடப்பட்ட தியேட்டர் இதுதான். திண்டுக்கல் மாவட்ட பகுதிகளில் இருந்து பல திரைப்பட கலைஞர்கள் உருவாக இந்த திரையரங்கம் காரணமாக இருந்துருக்குது.

1990-களுக்கு முன்பு வரை புதிய படங்களை திரையிட்டு வந்த இந்த திரையரங்கம், அதன்பின்பு பழைய படங்களை தொடர்ந்து திரையிட்டு வந்துச்சு. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற பெரும் நட்சத்திரங்களின் எவர்க்ரீன் படங்களை அடிக்கடி திரையிட்டதால் கணிசமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்து சென்றனர். இதனால் போதிய வருமானம் கிடைத்து வந்துச்சு இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த எட்டு மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வருமானம் முற்றிலும் இல்லை. இதனால் மாற்று வழியை யோசிக்க தொடங்கிய திரையரங்கு உரிமையாளர்கள் இத்தியேட்டரைத்தான் இப்போ முழுசா இடிச்சுப் புட்டாய்ங்க .(கட்டிங் கண்ணையா)

அது குறிச்சு தியேட்டர் உரிமையாளர் பி.ஆர்.மனோகர்-கிட்டே பேசினப்போது: எனது தாத்தா 71 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய தியேட்டர் இது. மூன்று தலைமுறைகளாக பொன்னப்ப பாகவதர், தியாகராஜ பாகவதர் காலம் முதல் தற்போது விஜய், அஜித் காலம் வரை திரைப்படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டு வந்துருக்குது. இனி தியேட்டர்கள் என்பது 100 இருக்கைகளுக்குள் இருந்தால்தான் நிரம்பும் என்ற நிலை ஏற்பட்டு வருது. எனவே இதுபோன்ற பழைய பெரிய தியேட்டர்களை நடத்துவது சிரமம். இதுதவிர ஆன்லைனில் புதிய படங்கள் வெளியாவதும் ஒரு காரணம். இனி படிப்படியாக தியேட்டர்கள் எண்ணிக்கை குறையத்தான் வாய்ப்புள்ளது. இதனால் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டு இடிக்கத் தொடங்கிவிட்டோம். -அப்படீன்னு சொல்லி இருந்தார்.