ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி இன்னியோட ஸ்வீட் 17 இயர்ஸ் ஆனதா வந்த சேதியை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி:

சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. அப்படத்திற்கு சேரனே நடிகராகவும், இயக்குனராக வும் பல விருதுகளை வென்றுள்ளார். அதில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை கிளறும் வகையில் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மஹா ஹிட் அடிச்சு  3 தேசிய விருதுகளை குவிச்சுது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிச்சு இந்த ஆட்டோகிராஃப்.

இது குறிச்சு டைரக்டர் சேரன்-கிடே பேசினப்போ ”பல பேரு ‘ஆட்டோகிராஃப்’படத்துலே வந்த சம்பவங்கள் தங்களோட வாழ்க்கை நடந்த சம்பவமா நெனச்சாங்க. ஆனா ஒரு விசயம் தெரியுமா? இதே கதையை அப்போ டாப் லிஸ்டில் இருந்த அரவிந்த் சாமி, விக்ரம் மாதிரி ஆட்கள்-கிட்டே சொன்னேன். கேட்டுபுட்டு ‘‘வாவ்..சப்ஜெக்ட் ரொம்ப  ஃபீலிங்கா இருக்கு சார். ஆனா, இது கொஞ்சம் ரிஸ்க்கா இருக்குமோ?’’ அப்ப்டீன்னு தயங்கினாங்க. அப்படி சொல்லியே கிட்டத்தட்ட ஒரு வருசம் எந்த கமிட்மெண்ட்டும் தராமல் தட்டிக் கழிச்சாங்க. ஏகப்பட்ட தேடலுக்கு அப்புறம் ஆரம்பிக்கப்பட்ட அந்த படம் இதனாலேயே லேட் ஆகிகிட்டிருந்துச்சு. என்ன செய்யல்லாமுன்னு தெரியாம, உடைஞ்சு போனேன். அப்ப் “நீயே இந்த மெயில் ரோலை பண்ணிடு சேரா!” என உறுதி உரமிட்டாங்க என் நண்பர்கள். அவங்க சொன்னதை நம்பி நானே நடிச்சேன், தயாரிச்சேன், இயக்கினேன். அந்த படம் பார்த்தவர்கள் நெகிழ்ந்ததுதான் எனக்கு இப்பவும் உசுரைக் கொடுத்திருக்குது.

இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணுமுன்னா இதில் பள்ளித் தோழி, காதலி, சினேகிதி, மனைவி அப்ப்டீன்னு நாலு பெண்கள் படத்தை தாங்கிப் பிடிப்பதால் அதுக்கான நடிகைகளை தேடும் வேட்டையில் இறங்கியதைச் சொல்லி விவரித்தாலே உங்க ஆந்தை ரேடியோவுக்கு நாலு ஒரு மணி நேர நிகழ்ச்சி தேறிடும் .

எப்படீன்னா அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘நிழல் கூத்து’ படத்தில் தமிழ் லேடி ரோலில் நடிச்ச மல்லிகாவைப் பற்றி மியூசிக் டைரக்டர் இளையராஜா சொல்லி தெரிஞ்சி கேரளா வுக்கு போய் மல்லிகாவை மடக்கிப் பிடித்து பள்ளித் தோழியாக்கினேன்.  அடுத்ததா, காதலியா வரும் கேர்ள் ஒரு மலையாளி ஆனதால் இன்னொரு நாயகியையும் அதே கேரளாவிலேயே தேடினேன் . அங்கே திருச்சூரில் பிளஸ் டூ முடிச்ச்சுட்டு, விளம்பர படங்களில் தலைக் காட்டி, அழகிப் போட்டியில் எல்லாம் பட்டமும் ஜெயிச்சு, அதன் வாயிலா மோலிவுட் டைரக்டர் துளசிதாசின் ‘பிரணய மணித்தூவல்’ படத்தில் கதா நாயகியா நடிச்சிருந்த கோபிகாவின் பேமிலி ஃபேஸ் பிடிச்சு போ கோபிகாவை கோடம்பாக்கம் கோதாவில் குதிக்க வைச்சேன்.

அப்பாலே, கதையோட முதுகெலும்பா இருக்கும் கேரல்டரா இருந்ததால் அந்த கேர்ள் பிரண்ட் ரோலில் நியூ ஃபேஸை தேடாமல் நம்ம ஜனங்களுக்கு பழக்கமான முகத்தை நடிக்க வைக்க முடிவு செஞ்சு சினேகாவை கமிட் செஞ்சோம்.

கடைசியா கிளைமாக்சில் வந்து படத்தில் டேர்னிங் பாயிண்ட்-டா வரும் ஒய்ஃப் ரோலுக்கு, அப்போ ரிலீஸான் ‘பைவ் ஸ்டார்’ படத்துலே நடிச்சிருந்தத கனிகாவை போய் பேசி கன்வின்ஸ் செஞ்சு கமிட் செஞ்சேன்.

கொஞ்சம் எக்ஸ்ட்ரா புதுசா யோசிச்சு நாலு டைமன்ஷனில், நாலு லைப் ஸடைலில் ட்ராவலாகும் ஸ்டோரி அப்ப்டீங்கற்தாலே நான்கு கேமராமேன்களை கமிட் செஞ்சோம். இம்புட்டு தடைகளை தாண்ட பட்ட அவஸ்தையைச் சொன்னா ரெண்டு புக் பேர்-லே இந்த கதை மட்டும்தான் வரும்.. அவ்வளவு சோதனை” அப்ப்டீன்னு சொல்லி பெருமூச்சு விட்டவர் “விரைவில் வர இருக்கும் ஆந்தை ரேடியோ-வில் இன்னும் சில எக்ஸ்க்ளூசிவ் சேதிகளைச் சொல்கிறேன். என் நினைவுகளை என்னை விட ஆழமாக தோண்டும் கட்டிங் கண்ணையா இன்சார்ஜில் வரும் புது மீடியா-வுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துகள்” என்று சொன்னார் (நெசமா-ன்னு கேட்கப்படாது).

எனி வே ஆந்தை ரேடியோ-வின் ஞாபகம் வருதே நிகழ்ச்சிக்கு இப்போதே ஒப்புதல் கொடுத்த அந்த கால ஆட்டோகிராப் நாயகனுக்கு ஆந்தை ரிப்போர்டர் & சினிமா பிரஸ் கிளப் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதில் இக்குழு நண்பர்களுக்கு மகிழ்ச்சிதானே?