தமிழ் சினிமாவின் பொன் மகுடம்  ஜெய்பீம் !

தமிழ் சினிமாவின் பொன் மகுடம் ஜெய்பீம் !

இயக்கம் - த.செ.ஞானவேல் நடிகர்கள் - சூர்யா, மணிகண்டன், லியோ மோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் கதை - மனிதனின் அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும், கள்ளர் இனக்குழுவில் ஒரு சிலரை, ஒரு கொள்ளைவழக்கில் போலீஸ் தவறுதலாக கைது செய்து போகிறது.  அவர்களை சித்தரவதைக்கு உள்ளாக்கி குற்றத்தைஒப்புக்கொள்ள சொல்கிறது. அதில் அவர்கள் தப்பி விட்டதாக அவர்களின் குடும்பத்திடம் சொல்ல, கணவனைகாணாத மனைவி, தன் கணவனை மீட்டு கொடுக்க சொல்லி வக்கீல் சந்த்ருவை அணுகுகிறார். அவர்களைநீதிமன்றம் மூலம் கண்டுபிடிக்கிறாரார சந்த்ரு என்பது தான் கதை. தமிழ் சினிமாவுக்கு மிக நீண்ட காலம் கழித்து ஒரு அற்புதமான படைப்பாக பலரது மனதையும் கலங்கடிக்கும்படைப்பாக உருவாகி, வந்திருக்கிறது ஜெய் பீம். ஒரு இனக்குழு மொத்தமாக அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட வரலாற்றை, அவர்களின் உரிமைகள்மறுக்கப்பட்டதை, அவர்களின் வாழ்வியலோடு நெருங்கி, அச்சு அசலாக இரத்தமும் சதையுமாக  ஒருஅற்புதமான படைப்பாக உருவாக்கியதற்கு மொத்த குழுவிற்கும் பூங்கொத்துக்கள். ஒரு படம் என்ன செய்ய வேண்டும்…
Read More
என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம்

என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம்

என்னங்க சார் உங்க சட்டம் திரை விமர்சனம் கதை இயக்கம் - பிரபு ஜெயராம் நடிகர்கள் - R.S கார்த்திக், ரோகினி மொலேட்டி, பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா, நக்கலைட்ஸ் தனம், ராகுல் தாத்தா மற்றும் மெட்ராஸ் கோபா,   கதை - ஒரு உதவி இயக்குநர் சாதி அடுக்குகளை வைத்து இரண்டு கதைகளை எழுதி வைத்துள்ளார் முழுக்க முழுக்க நகைச்சுவையாக ஒன்றும், தீவிரமான கதை சொல்லலில் ஒன்றும் என தயாரிப்பு தரப்பு அதை முடிவு செய்கிறது எனபது தான் கதை. ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் என்று முடிவு செய்து எடுத்திருக்கிறார்கள். எதையும் சட்டை செய்யாத போக்கிரி இளைஞனின் காதல் வாழ்க்கை தான் முதல் பாதி அடுத்த பாதி முற்றிலும் தீவிரமான வேறு கதை என இரண்டு படமாக நகர்கிறது படம் மிக சிக்கலான திரைக்கதை ஆனால் நமக்கு போரடிக்காமல், சுவாரச்யத்துடன் தந்துள்ளார்கள். ஆனால் இரண்டாம் பகுதி பார்த்த பிறகு…
Read More
Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune திரைப்படம் மிரட்டலாக இருக்கிறதா ?

Dune விமர்சனம் இயக்கம் - Denis Villeneuve நடிகர்கள் - Timothée Chalamet, Rebecca Fergusson, Oscar Isaac, Josh Brolin, Stellan Skarsgård   கதை - Arrakis என்கிற ஒரு கிரகத்தில் Melange என்கிற ஓர் பொருள் உற்பத்தியாகிறது. முழுக்க லாபம் தங்க துகள்களை சலித்து எடுத்து லாபம் பார்க்க மொத்த உலகமும் ஆசைப்படுகிறது. Atreides அரசனுக்கு Arrakis அங்கு அந்த புதையலை எடுக்கும் பொறுப்பை தருகிறது. இப்பகுதியில் வாழும் பழங்குடியினருக்கும் அப்பகுதியை தங்களது ஆளுகையின் கீழ் கொண்டு வர முற்படும் Arrakisக்கும் பிரச்சனை இருக்கிறது இதில்  Atreides அரச குடும்பம் பலியிடப்பட்டுகிறது அதிலிருந்து இளவரசன் எப்படி தப்பிகிறான் என்பது தான் இந்த முதல் பாகத்தின் கதை Dune க்கு பெரிய வரலாறு உண்டு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்திற்கு இணையான வரலாறாக அதை சொல்லலாம். 1965 ல் Frank Herbert என்கிற நாவலாசிரியர்,எழுதிய நாவல் தான் இது.…
Read More
ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

ஃபில்டர் கோல்ட் திரை விமர்சனம் !

இயக்கம் - விஜய பாஸ்கர் நடிகர்கள் - விஜய பாஸ்கர், டோரா ஶ்ரீ, சுகுமார் சண்முகம் கதை - ஒரு குழுவாக சமூகத்தின் அழுக்குகளோடு அரவாணிகள் வாழ, அவர்களின் வாழ்க்கையில், ரௌடியின் சிறு பையன் செய்யும் பிரச்சனையால், அவர்கள் வாழ்வு எப்படி மாறுகிறது என்பதே கதை தமிழ் சினிமா கேலியும் கிண்டலும் மட்டுமே செய்த மூன்றாம் பாலினத்தவரான அரவாணிகள் வாழ்வையும், அவர்களின் வலிகளையும், ரத்தமும் சதையுமுமாக சொல்ல முயன்றிருக்கிறது இந்த ஃபில்டர் கோல்ட். அதற்காகவே இப்படத்தை பாராட்டலாம். நம் சமூகத்தில் பெண்கள், குழந்தைகள், தனி மனித உரிமைகளுக்கே இன்னும் சரியான தீர்வுகளே கிடைக்கவில்லை. இதில் அரவாணிகள் பிரச்சனைகள் எல்லாம் சமூகத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற உலகில், அவர்கள் வாழ்க்கையை கொஞ்சம் நெருங்கி பதிவு செய்துள்ளது இந்த சினிமா. அரவாணிகள் பற்றி சமூக வலைதளங்களில், அரசியல் மேடைகளில் பொது வெளிகளில் மாரியாதையும் மதிப்பும் பாராட்டுகள் கிடைத்தாலும், நிஜத்தில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும்.…
Read More
ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம் !

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம் !

ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்  இயக்கம் - கார்த்திக் சுந்தர் நடிகர்கள் - ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் கதை - சமையல் மட்டும் விரும்பும் வாழ்க்கையில் எதையும் ஒழுங்காக செய்யத் தெரியாத இளைஞன், பிஸின்ஸ்MPA முடித்து காதல் தோல்வியில் இருக்கும், food டிரக் ஆரம்பிக்க நினைக்கும் ஒரு பெண், இருவரும் பெண்பார்க்கும் படலத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். பின் இருவரும் இணைந்து பிஸினஸ் செய்யமுடிவெடுக்கிறார்கள் அவர்கள் பிஸினஸ் வென்றதா அவர்கள் காதல் வாழ்வு என்ன ஆனது என்பதே கதை. தெலுங்கில் சக்கை போடு போட்ட பெல்லி சூப்புலு பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல் தமிழுக்குவந்திருக்கிறது. ஒரு படத்தின் ஆன்மா அந்தந்த மொழி பின்ன்ணியுடனும் கலாச்சார பின்னணியுடனும்இருக்கும். அதை சரியாக மீட்டெடுக்காவிட்டால் ரீமேக் சரியாக வராது. ஆனால் இப்படத்தில் அதை ஓரளவுநேர்த்தியாகவே கையாண்டு ஜெயித்திருக்கிறார்கள் படத்தின் முதல் பாதி படு கலகலப்பாக இருக்கிறது. ஹரீஷ் கல்யாண் கதை அதில் வரும் சம்பவங்கள்,…
Read More
கட்டம் சொல்லுது திரை விமர்சனம் !

கட்டம் சொல்லுது திரை விமர்சனம் !

கட்டம் சொல்லுது திரை விமர்சனம் இயக்கம் - s.g.எழிலன் நடிகர்கள் - தீபா, எழிலன் கதை - தன் பொண்ணுக்கு திருமண தேதியை நிச்சயித்து விட்டு மாப்பிள்ளை பார்க்க ஜோசியக்காரரிடம் செல்கிறார் ஒரு தாய், அங்கு சந்திக்கும் ஒரு இளைஞன் தன் நண்பர்களின் கதையை சொல்கிறார். அந்தக்கதை இவருக்கு என்ன பாதிப்பு தருகிறது, இவர் பெண்ணுக்கு கல்யாணம் நடந்ததா ? என்பதே கதை. முற்றிலும் புதுமுகங்கள் தீபா மட்டுமெ கொஞ்சம் அறிமுகமான முகம். முற்றிலும் ஒரு புதிதான திரைக்கதையில் சிரிக்க சிரிக்க கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள் அதில் பாதிக்கிணறு தாண்டியிருக்கிறார்கள். நான்கு இளைஞர்களும் அவர்களின் வாழ்க்கையும் தான் கதை. அந்த நான்கு இளைஞர்களும் நம் வாழும் எளிய வாழ்க்கையுடன் தொடர்பு படுத்தி கொள்ளும்படி இருப்பது அழகு. நம் வாழ்வில் நாம் தினமும் நடக்கும் சம்பவங்களை, இளைஞர்களை திரையில் பார்ப்பது போன்று இருப்பது படத்திற்கு மிகப்பெரும் பலம். திரைக்கதை ஒரு வித்தியாசமான உணர்வை…
Read More
அகடு திரை விமர்சனம்

அகடு திரை விமர்சனம்

அகடு திரை விமர்சனம் இயக்குநர் - S சுரேஷ் குமார் நடிகர்கள் - ஜான் விஜய், சித்தார்த், ஶ்ரீராம், அஞ்சலி நாயர் கதை - சுற்றுலாவிற்கு செல்லும் இடத்தில் ஒரு குடும்பம் அங்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் பழகுகிறது. மறுநாள் அவர்களின் பெண்குழந்தையும் ஒரு இளைஞனையும் காணவில்லை அந்த பெண் குழந்தைக்கு என்னவானது என்பதே கதை. ஒரு கதையை சொல்லும் போது எதை சொல்கிறோம் அது திரையில் எவ்வாறு வரும் அதன் அறம் என்ன என்கிற நோக்கம் மிக முக்கியம். அல்லது இந்தப்படம் ரசிகர்களை மகிழ்விக்க என்றால், அதற்கான கதையாவது படத்தில் இருக்க வேண்டும். இந்தப்படத்தில் படம் என்ன சொல்ல வருகிறது என்கிற நோக்கம் சரியாக அமையவில்லை இது ஒரு திரில்லர் திரைப்படம், ஒரு கொலை நிகழ அதனை சுற்றி என்ன நடந்தது என்பதை சுவாரஷ்யமாக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த சுவாரஷ்யம் ரசிகர்களிடம் சுத்தமாக கடத்தப்படவில்லை, திரைப்படத்திற்கென்றே ஒரு மிகப்பெரும் பரப்பு இருக்கிறது,…
Read More
Venom: Let There Be Carnage part 2 விமர்சனம் !

Venom: Let There Be Carnage part 2 விமர்சனம் !

Venom: Let There Be Carnage part 2 இயக்கம் - ஆண்டி செர்கீஸ் நடிகர் - டாம் ஹார்டி ம், வூடி ஹாரெல்சன், மிச்செலெ வில்லியம்ஸ் கதை : வெனோம் தன்னுள்ளேயே வாழ ஆரம்பிக்க அதன் உதவியில் துப்பறிந்து கதைகளை கட்டுரைகளாக எழுதி புகழ் பெற ஆரம்பிக்கிறான் எட்டி ப்ரோக். ஒரு சைக்கோ கொலையாளி எதேச்சையாக இவனது ரத்தத்தை ருசித்து விட, அவன் மான்ஸ்டராக ஆகிவிடுகிறான். இப்போது வெனோமுக்கும் மான்ஸ்டருக்கும் சண்டையில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதே கதை. வெனோம் மார்வல் காமிக்ஸ் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கே புரிந்த சூப்பர் ஹீரோ சினிமா. மற்றவர்களுக்கு இது குரளி வித்தை தான். காமிக்ஸில் இது ஸ்பைடர்மேன் உலகத்தில் தான் வரும் ஆனால் படத்தில் இதுவரை வெனோமை அவஞ்சர் உலகத்தில் அனுமதிக்கவில்லை. வெனோம் முதல் பாகத்தில் வெறும் கதாப்பாத்திரங்களின் அறிமுகம் மட்டுமே நிகழ்ந்தது. இந்தப்பகுதியில் கொஞ்சம் கதை சொல்ல முயன்றிருக்கிறார்கள் ஆனால் அது சரியாக…
Read More
பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

அரண்மனை 3 இயக்கம் - சுந்தர் சி நடிப்பு - ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக். கதை - வழக்கம்போல் ஒரு அரண்மனை அங்கு ஒரு குடும்பம், சதியால் சாகடிக்கப்பட்டு பழிவாங்க துடிக்கும் பேய். அதிலிருந்து நல்லவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை. அரண்மனை 1,2 பாகங்கள் பம்பர் ஹிட்டடிக்க, அந்த தைரியத்தில் மூன்றாம் பாகத்தை பெரும் பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எதை எடுத்தாலும் ரசிகர்கள் பார்பார்கள் என்கிற ஏளனம் திரைக்கதையில் தெரிவது சோகம். சுந்தர் சி படங்கள் எப்போதும் மக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்துவிடும். பேய் படமாகவே இருந்தாலும் படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையிலோ, காமெடி சுத்தமகா இல்லை, வெறும் நடிகர்கள் கோணங்கித்தனம் செய்து கொண்டு அங்காங்கே படம் முழுதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நமக்கு சிரிப்பு மட்டும் வரவே இல்லை. அரண்மனை படங்களில் காமெடியும் திரில்லும், சரிபாதையில் கலந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில்…
Read More
அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

அண்ணன்-தங்கை பாசம் அழகா இருக்கிறதா?- “உடன்பிறப்பே” விமர்சனம் !

  எழுத்து இயக்கம் - இரா சரவணன் நடிப்பு - ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி கதை - பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை. கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும்…
Read More