பேய் அனுபவத்தை தருகிறதா அரண்மனை 3- திரைவிமர்சனம்

0
79

அரண்மனை 3

இயக்கம் – சுந்தர் சி

நடிப்பு – ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி, ஆண்ட்ரியா, விவேக்.

கதை – வழக்கம்போல் ஒரு அரண்மனை அங்கு ஒரு குடும்பம், சதியால் சாகடிக்கப்பட்டு பழிவாங்க துடிக்கும் பேய். அதிலிருந்து நல்லவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.

அரண்மனை 1,2 பாகங்கள் பம்பர் ஹிட்டடிக்க, அந்த தைரியத்தில் மூன்றாம் பாகத்தை பெரும் பட்ஜெட்டில் உருவாக்கியிருக்கிறார். ஆனால் எதை எடுத்தாலும் ரசிகர்கள் பார்பார்கள் என்கிற ஏளனம் திரைக்கதையில் தெரிவது சோகம்.

சுந்தர் சி படங்கள் எப்போதும் மக்களை சிரிக்க வைத்து மகிழ்வித்துவிடும். பேய் படமாகவே இருந்தாலும் படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். ஆனால் இந்தப்படத்தின் திரைக்கதையிலோ, காமெடி சுத்தமகா இல்லை, வெறும் நடிகர்கள் கோணங்கித்தனம் செய்து கொண்டு அங்காங்கே படம் முழுதும் அலைந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் நமக்கு சிரிப்பு மட்டும் வரவே இல்லை.

அரண்மனை படங்களில் காமெடியும் திரில்லும், சரிபாதையில் கலந்திருக்கும். ஆனால் இந்தப்படத்தில் இரண்டுமே இல்லை. இந்தப்படத்திற்கு ஏன் ஆர்யா. ஆரம்பத்தில் இரண்டு காட்சிகள் வருகிறார் அதற்கப்புறம் க்ளைமாக்ஸில் தான் அவர் தலை தெரிகிறது. இப்படத்தில் கெஸ்ட் ரோல் செய்திருக்கிறார். ராஷிக்கண்ணா கவர்ச்சியில் கலக்கலாக இருப்பவர் நடிப்பில் சுமார் தான். விவேக் அந்தோ பரிதாபம். அவருக்கு இது கடைசிப்படம் வேறு படத்தில் அவர் காமெடியை தேட வேண்டியிருக்கிறது. அவரும் யோகிபாபுவும் பேயிடம் அடி வாங்கும் இடத்தில் மட்டும் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்கள்.

ஆண்ட்ரியாவிற்கு மட்டும் நடிக்க கொஞ்சம் வாய்ப்பு தந்திருக்கிறார்கள் அதை அவர் ஓவராகவே செய்திருக்கிறார். சுந்தர் சி தான் படத்தின் ஒரிஜினல் நாயகன் அவர் தான் கதையின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறார். அதோடு ரசிகர்கள் படம் பார்க்க ஏதாவது செய்திருக்கலாம்.

இசை பேய் வரும் இடங்களில் பயமுறுத்துவதாக இருக்கிறது ஆனால் அது பாடல்களிலும் தொடர்கிறது. அபாரமான ஒளிப்பதிவு. இறுதி காட்சிகள், பேய் காட்சிகளை அட்டகாசமாக படமாக்கியிருக்கிறது. மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. அரண்மனை 3 அரண்மனை பட தீவிர ரசிகர்களுக்கு மட்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here