ஓ மணப்பெண்ணே திரை விமர்சனம்
இயக்கம் – கார்த்திக் சுந்தர்
நடிகர்கள் – ஹரீஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர்
கதை – சமையல் மட்டும் விரும்பும் வாழ்க்கையில் எதையும் ஒழுங்காக செய்யத் தெரியாத இளைஞன், பிஸின்ஸ்MPA முடித்து காதல் தோல்வியில் இருக்கும், food டிரக் ஆரம்பிக்க நினைக்கும் ஒரு பெண், இருவரும் பெண்பார்க்கும் படலத்தில் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். பின் இருவரும் இணைந்து பிஸினஸ் செய்யமுடிவெடுக்கிறார்கள் அவர்கள் பிஸினஸ் வென்றதா அவர்கள் காதல் வாழ்வு என்ன ஆனது என்பதே கதை.
தெலுங்கில் சக்கை போடு போட்ட பெல்லி சூப்புலு பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல் தமிழுக்குவந்திருக்கிறது. ஒரு படத்தின் ஆன்மா அந்தந்த மொழி பின்ன்ணியுடனும் கலாச்சார பின்னணியுடனும்இருக்கும். அதை சரியாக மீட்டெடுக்காவிட்டால் ரீமேக் சரியாக வராது. ஆனால் இப்படத்தில் அதை ஓரளவுநேர்த்தியாகவே கையாண்டு ஜெயித்திருக்கிறார்கள்
படத்தின் முதல் பாதி படு கலகலப்பாக இருக்கிறது. ஹரீஷ் கல்யாண் கதை அதில் வரும் சம்பவங்கள், அவர்நண்பர்களுடன் செய்யும் லூட்டிகள் எல்லாமே நன்றாக ரசிக்கும்படி எடுக்கப்பட்டிருக்கிறது. கார்பரேட்ஆபீஸில் அவர் வெடிக்கும் தியேட்டரும் சேர்ந்து அதிர்கிறது. அதே போல் ப்ரியா பவானி சங்கர் கதையும், குக்வித் கோமாளி அஷ்வினுடனான அவரது காதல் கதை க்யூட்டாகவே இருக்கிறது. அஷ்வின் சிறிது நேரமேவந்தாலும் மனதை ஈர்க்கிறார். ஹரீஷை விட அவர் அழகாக இருக்கிறார். ஹரீஷ் அப்பா இன்னும் நாடக உலகைவிட்டு வெளிவரவில்லை. சின்ன சின்ன தருணங்களை கொஞ்சம் அழகாகவே கோர்த்திருக்கிறார்கள்
படத்தின் பிரச்சனை முழுக்கவும் இரண்டாம் பாதியில் தான் இருக்கிறது. பின்பாதியில் வரும் காட்சிகளில்லாஜிக் கேள்விகள் நம் முன்னால் வந்து தொல்லை செய்கிறது. குடித்து விட்டு சொதப்பிய ஒருவனுக்கு மீண்டும்எப்படி வாய்ப்பு தருவார் ப்ரியா. ப்ரியா அப்பாவிடம் பேசும் தைரியம் உள்ள ஹரீஷ் தனக்கு பார்க்கப்படும்பெண்ணிற்கு மட்டும் தலையாட்வது ஏன். ப்ரியாவுக்கும் ஹரீஷ்க்கும் உருவாகும் காதல் எந்த காட்சிகளும்இல்லாமல் ஒரு பாடலில் மட்டுமே சொல்லப்படுகிறது. உண்மையிலேயே அவர்கள் காதலிக்கிறார்களா என்பதேசந்தேகம் தான். படத்தில் ஷெப்பாக வரும் ஹரீஷ் ஒரு முறை கூட கரண்டி பிடித்து சமைக்கும் காட்சி முழுதாகஇல்லை. முதல் பாதியில் இருந்த உயிர் இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங்.
ஹரீஷ் நண்பர்களாக வரும் இருவருமே அங்கங்கே அடிக்கும் காமெடி ஒன்லைனர்கள் நன்றாக வந்திருக்கிறது. விஷால் சந்திரசேகர் இசை படத்திற்கு பெரும் பலம், பின்னணி இசை தான் படத்தை தாங்கிப்பிடிக்கிறது. ஒளிப்பதிவு எந்த வித்தியாசமும் காட்டவில்லை எல்லா காட்சியும் மிட் வைட் க்ளோசப் ஷாட்களால் மட்டுமேசொல்லப்பட்டிருக்கிறது. ஹரீஷ் கல்யாணுக்கு பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இது இளைஞர்களுக்கானபடம், அதை மனதில் வைத்து, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் முயன்று வித்தியாசப்படுத்தி ரசிக்கவைத்திருக்கலாம்.
ஓ மணப்பெண்ணே முதல் பாதி கலகலப்பு, இரண்டாம் பாதி இழுவை.