டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!

டாக்டர் ஆபரேஷன் சக்ஸஸ்!

  இயக்கம் - நெல்சன் நடிப்பு - சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, டோனி, கதை - வாழ்க்கையில் பிராக்டிகலாக ஃபர்ஃபெக்டாக இருக்கும் ராணுவ டாக்டரை அவருக்கு பார்த்த பெண் பிடிக்கவில்லை என நிராக்கரித்து விடுகிறார். அந்தப்பெண் வீட்டில் ஒரு பெண் குழந்தை கடத்தப்பட, அந்த குழந்தையை கண்டுபிடிக்க அந்த குடும்பத்துடன் இணைந்து நம்பமுடியாத ஆக்சன் ஆபரேஷன் நடத்துகிறார் டாகடர். வெகு நாட்கள் கழித்து தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறக்க, என்ஞாய் செய்து பார்க்கும் படமாக வந்திருக்கிறது டாக்டர். டார்க் காமெடியில், க்ரைமை சரிவிகிதத்தில் கலந்து, படத்தின் திரக்கதையில் ஒவ்வொரு காட்சியிலும் ஆச்சர்யப்படுத்துகிறார் நெல்சன். தன் முதல் படத்தில் அங்கங்கே தடுமாறியவர், இந்தப்படத்தில் நிதானமாக சிக்ஸர் விளாசியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதை அமைத்த விதமும், நம்ப முடியாததாக இருந்தாலும் ரசித்து சிரிக்கும்படி இருக்கிறது. படத்தின் காட்சிகளில் நம்மையும் ஒன்ற வைத்து விடும் மேஜிக் அவரிடம் இருக்கிறது. படம்…
Read More
பயமுறுத்தும் படி இருக்கிறதா The Quiet Place 2

பயமுறுத்தும் படி இருக்கிறதா The Quiet Place 2

  இயக்கம் - John Krasinski நடிகர்கள் - Cillian Murphy, Emily Blunt, Noa Juph கதை - The quiet Place படத்தின் முதல் பாகத்தின் இறுதியில், தந்தை இறந்து தனது குடும்பத்தையும் குழந்தையையும் ஏலியனிடமிருந்து காப்பாற்றுகிறார். அந்த குடும்பத்திற்கு என்ன நடக்கிறது எப்படி தப்பிக்கிறது. ஏலியன் அழிந்ததா என்பது தான் இப்படத்தின் கதை. சத்தம் போட்ட செத்த, எனும் சிம்பிள் கான்செப்டில் ஏலியனை புகுத்தி குறைந்த பட்ஜெட்டில் ரசிகர்களை தெறிக்க விட்ட படம் தான் The quiet Place. அதன் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம் தான் இது. அதில் இயக்குநரும் நாயகனுமான, John Krasinski தன் குடும்பத்தை காக்க இறந்து போக அந்த இடத்திலிருந்து இந்தப்படம் ஆரம்பிக்கிறது. படத்தின் முதல் காட்சியில் அந்த ஏலியன் எப்படி அவ்ரகள் ஊருக்கு வந்தது என்பதில் ஆரம்பிக்கிறது அந்த ஆரம்பமே அதகளமாக இருக்கிறது. அதன் பிறகு தான் பாதுகாப்பாக இருந்த…
Read More
நாகரீக மனிதனை பின்னுக்கு இழுக்கு சினிமா ருத்ர தாண்டவம்

நாகரீக மனிதனை பின்னுக்கு இழுக்கு சினிமா ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம் எழுத்து , இயக்கம் - மோகன் ஜி நடிப்பு - ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, ராதாரவி, கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கதை : தர்மபுரியை சேர்ந்த நல்ல குளத்தை சார்ந்த நல்ல போலீஸ், இளைஞர்களுக்கு போதை பொருளை விற்கும் கும்பலை பிடிக்க முயல்கிறார் அந்த முயற்சியில் ஒருவன் இறந்து விட, இறந்த இளைஞன் தாழ்த்தப்பட்டவன் என்பதால் அவர் மீது நடவடிக்கை பாய்கிறது. அவரது வாழ்க்கை தடம்புரள்கிறது. அந்த வழக்கில் இருந்து எவ்வாறு அவர் வெளிவருகிறார் என்பதே ஒரு தரப்புக்கான நியாயத்தை மட்டுமே முடிவெடுத்து இயங்கும் மோகன் ஜி மூன்றாவதாக இயக்கியுள்ள படம். எளிய மக்கள் மீது நடக்கும் வன்கொடுமையை தடுக்க உருவான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது, அச்சட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்பன இப்படத்தில் பேசுகிறார். வரலாறும் தெரியவில்லை, புவியலும் தெரியவில்லை. ஆதிக்க சாதிகளுக்கு ஆதரவாக இருக்கிறோம், மதங்களை காப்பற்ற…
Read More
லிப்ட் ஒர்க் ஆயிருக்கா- லிப்ட் திரைப்பட விமர்சனம்

லிப்ட் ஒர்க் ஆயிருக்கா- லிப்ட் திரைப்பட விமர்சனம்

லிஃப்ட் விமர்சனம் எழுத்து , இயக்கம் - வினீத் வரபிரசாத் நடிப்பு - கவின், அம்ருதா கதை - ஒரு ஐடி புதிதாக வரும் டீம் லீடர் முதல் நாள் இரவில் லிஃப்டில் தனியாக மாட்டிக்கொள்கிறான். அங்கு பேய் இருப்பது தெரிய வர அதனிடமிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதே கதை. மிக மிக எளிமையான கதை, ஒரு ஐடி அலுவலக பில்டிங், நாயகன், நாயகி இதை வைத்து கொண்டு, தமிழ் சினிமா அடித்து துவைத்த பேய்க்கதையில் வித்தியாசம் காட்டி அசத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமா பேயே வேண்டாம் என அலறும் அளவு பேய்கதைகளை சொல்லி தீர்த்து விட்டது. ஆனால் அதிலும் ஒரு வித்தியாசத்தை ஹாலிவுட் பாணி கதையாக சொல்லி அசத்தியிருக்கிறார்கள். மொத்த கதையுமே ஒரு ஐடி பில்டிங்கிற்குள் நடக்கிறது அதுவும் நாயகன் நாயகி மட்டும் தான் ஆனால் எந்த இடத்திலும் படம் போர் அடிக்கவில்லை. ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தில் அழகாக ஒரு…
Read More
ஜெயித்திருக்கிறதா சிவகுமாரின் சபதம் !

ஜெயித்திருக்கிறதா சிவகுமாரின் சபதம் !

சிவகுமாரின் சபதம் கதை திரைக்கதை இயக்கம் இசை - ஹிப் ஹாப் ஆதி நடிப்பு - ஹிப் ஹாப் ஆதி, மாதுரி கதை : பணத்திற்காக காஞ்சிபுரத்தின் பழம்பெருமை மிக்க தறிநெய்யும் குடும்பத்தை ஏமாற்றும் ஒருவனுக்கும், தறி நெய்யும் குடும்பத்திற்கும், உள்ள உறவு சிக்கல்கள் தான் கதையின் மையம், தறி நெய்யும் குடும்பம் தறியின் பெருமையை எப்படி காப்பாற்றி, ஜெயிக்கிறது என்பது தான் கதை. தறிநெய்பவர்களின் பெருமையை கஷ்டத்தை சொல்ல கிளம்பியிருக்கிறார் ஆதி. வழக்கமாக அவரது படங்கள் கல்லூரி இளைஞர்களை குறி வைத்ததாகவே இருக்கும். ஆனால் இம்முறை காலேஜ், நண்பர்கள், காதல் எனும் அவரது வழக்கமான ரூட்டை மாற்றி குடும்பத்திற்குள் போயிருக்கிறார் ஆனால் அது ஏனோ ஒர்க் அவுட் ஆகவில்லை. தறிநெய் தொழில் தான் படத்தின் மையம், ஆனால் அது கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது. அதுவும் விக்ரமன் பட லாலா லாலா போல எந்த டீடெயிலுங்கும் இல்லாமல் பாடுகிறார்கள்.…
Read More
“சின்னஞ்சிறு கிளியே”  இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

“சின்னஞ்சிறு கிளியே” இயற்கை மருத்துவத்தின் பெருமை சொல்லும் படம்

இயக்கம் - சபரிநாதன் முத்துப்பாண்டியன் நடிகர்கள் - செந்தில்நாதன், அர்ச்சனா கதை - பிரசவத்தில் தன் மனைவியை காவு கொடுத்த ஒருவனின் மகள் கடத்தப்படுகிறாள். அதன் பின்னணியில் உள்ள ஆங்கில மருத்துவ கோர முகமூடியை கிழித்து இயற்கை மருத்துவத்தின் பெருமையை அவன் வெளிக்கொண்டுவர முயல்கிறான் “சின்னஞ்சிறு கிளியே” உலகம் முழுக்க 24 திரைவிழாக்களில் கலந்துகொண்டு, விருதுகளை குவித்திருக்கும் படம். வருமுன் காப்போம் எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் நம் இயற்கை மருத்துவத்தின் பெருமையை சொல்ல முயன்றிருக்கிறார்கள். பல விசயங்களை சரியாகவும் பரபரப்பாகவும் சொல்லவும் செய்திருக்கிறார்கள். படத்தின் இடைவேளை வரை கதையில் எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை நாயகன் நாயகி சந்திப்பது, காதலிப்பது கல்யாணம் செய்வது அவர்கள் குழந்தை பிறப்பது என வழவழவென இழுத்து கொண்டிருக்கிறது, குழந்தை கடத்தப்படும் நொடியில் தான் படத்தின் உண்மையான கதை ஆரம்பிக்கிறது. அதன் பிறகு கதை பரபரவென செல்கிறது. இதை திரைக்கதையில் சரி செய்திருந்தால் இன்னுமே…
Read More
தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

தமிழ்நாட்டுல மாட்டை வைத்து, ஒரு அரசியல் படம்- இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம்

இராமே ஆண்டாலும் இராவண ஆண்டாலும் விமர்சனம் இயக்கம் - அரிசில் மூர்த்தி நடிகர்கள் - மிதுன் மாணிக்கம் , வடிவேல், ரம்யா பாண்டியன், வாணி போஜன் கதை கரு : எந்த வசதியும் இல்லாத ஒரு குக்கிராமத்தில், ஒரு ஏழை விவசாயி அன்பாக குழந்தை போல் வளர்க்கும் மாடுகள் திடீரென காணமல் போகிறது. அதனை தேடப்போக அது மீடியா, அரசியல் பிரச்சனை என மாறி, அந்த குக்கிராமமே தமிழ்நாட்டின் கவனத்திற்கு உள்ளாகிறது. இறுதியில் அந்த ஏழைக்கு மாடு கிடைத்ததா என்பதே கதை. ஒரு கிராமம், ஒரு ஏழை விவசாயி அவனது மாடு அதன் பின்னணியில் ஒரு அரசியலையும் தமிழ்நாட்டின் பிரச்சனைகளையும் நையாண்டி வகையில் சாட திட்டமிட்டு உருவாக்கப்பட்ட கதை. அமீர்கானின் peepli live, தமிழில் வந்த ‘காக்கா முட்டை’ போல வந்திருக்க வேண்டிய படம். ஆனால் எந்த ஓர் ஈர்ப்பும் இல்லாத திரைக்கதையாக மாறியதோடல்லாமல், அமெச்சூர்தனமான மேக்கிங்கில் பாதியில் கவிழ்ந்த கப்பலாகி…
Read More
எல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன ? – நடுவன் திரை விமர்சனம்

எல்லோரும் பச்சோந்தியா, நடுவன் கூறுவது என்ன ? – நடுவன் திரை விமர்சனம்

நடுவன் திரை விமர்சனம் இயக்கம் - சரண் குமார் நடிகர்கள் - பரத், அபர்ணா, கோகுல் ஆனந்த் கதை : ஒரு அன்பான குடும்பம். பிஸினஸ் பிஸின்ஸ் என அலையும் பரத்திற்கு, தன் நண்பனும் மனைவியும் துரோகம் செய்கிறார்கள் என தெரியவர, அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை. எல்லோருக்கும் ஒரு முகமூடி இருக்கிறது அதை கழட்டிவிட்டு பார்த்தால், நாம் அனைவருமே அகோரமாகதான் இருப்போம். இங்கு எவனுமே நல்லவன் இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப மாறிக்கொள்ளும் பச்சோந்தி தான், என சொல்ல வருவது தான் இந்த நடுவன். ஒரு படத்தை பார்க்க, நமக்கு அக்கதை ஒரு ஈர்ப்பை தர வேண்டும், அல்லது நம் உணர்வுகளை அது பாதிக்க வேண்டும். இரண்டுமே இப்படத்தில் இல்லை பின் எதற்காக இந்த படம் ? ஒரு மலை உச்சியின் நகரத்தில் பனிபடலம் சூழும் பின்னணியில் கதை நடக்கிறது. படத்தின் ஒரே ஆறுதல் அது தான். காட்சிகள் பார்க்க…
Read More
சூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்

சூ மந்திரகாளி திரைப்பட விமர்சனம்

சூ மந்திரகாளி விமர்சனம் இயக்கம் - ஈஸ்வர் கொற்றவை தயாரிப்பு - அன்னக்கிளி வேலு நடிகர்கள் - கார்த்திகேயன் வேலு சஞ்சனா புர்ளி கதை - அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த, மந்திரவாதிப்பெண்னை கூட்டி வர மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள், காதலி வேஷமிட்ட தன் நண்பனுடன் நுழைகிறான். மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே கதை. முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் ஒரு ச்வீட் சர்ப்பரைஸாக வந்துள்ளது சூ மந்திரகாளி. வழக்கமாக ஹாலிவுட் படங்களில் தான் ஃபேண்டஸி சிந்தனை அதிகம் இருக்கும். நம் ஊரில் முண்டாசுப்பட்டி மாதிரி சிந்தனைகள் அபூர்வம். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் வந்துள்ளது இந்தப்படம். படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே…
Read More
டிக்கிலோனா –  சந்தானத்தின் ஆவரேஜ்  காமெடி!

டிக்கிலோனா – சந்தானத்தின் ஆவரேஜ் காமெடி!

இயக்கம் - கார்த்திக் யோகி நடிப்பு - சந்தானம், அனாகா, ஷ்ரின் காஞ்ச்வாலா, யோகிபாபு கதை கரு: ஹாக்கி கனவு கொண்ட மணி என்னும் ஒருவன், திருமணத்திற்கு பிறகு தனது கனவை தொடர முடியாமல், வெறுப்பான வாழ்கை வாழுகிறான். அவனுக்கு கால இயந்திரம் பற்றி தெரிந்தவுடன், கடந்த காலத்திற்கு சென்று தன் வாழ்கையை மாற்றலாம் என முடிவு செய்கிறான். அதன் பிறகு அவன் தேர்தெடுக்கும் வாழ்கை, அவனுக்கு இன்பம் தருகிறதா, துன்பம் தருகிறதா என்பதே கதை கால இயந்திரத்தை பற்றி வரும் படங்களின், கால இயந்திரத்தை பற்றிய அடிப்படை தகவல்களை கொடுத்துவிட்டு, அதன் பிறகு கதையின் ஊடே பயணிப்பது என்பது தான் அடிப்படை விதி. டிக்கிலோனாவில் அதிக சிரத்தை எடுத்துகொள்ளாமல், கதைக்கு கால இயந்திரத்தின் தேவை எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு தகவல்களை மட்டும் தெளிவாக கொடுத்தது சிறப்பான ஒன்று. கால இயந்திரம் படத்தில் இடம்பெற்றாலும், படம் அதனை சுற்றி அமையவில்லை. கதாநாயகன்,…
Read More