உரு – திரை விமர்சனம்!

உரு – திரை விமர்சனம்!

சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜானர் என்றால் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்களை சொல்லலாம்.  சமீபகாலமாக சைக்காலஜிக்கல் த்ரில்லர் படங்கள் தமிழிலும் வரத் தொடங்கி யுள்ளன. உரு படமும் ஒரு சைக்காலஜிகல் த்ரில்லர் படம் தான். கலையரசன் பிரபலமாக இருந்து சரிவில் சிக்கித் தவிக்கும் ஓர் எழுத்தாளர். அவரது மனைவி தன்ஷிகா. ரீ எண்ட்ரிக்காக ஒரு தனி வீட்டில் தங்கி புது நாவல் எழுதத் தொடங்குகிறார் கலை. நாவலில் அவர் எழுதுவதெல்லாம் நிஜத்தில் நடக்கத் தொடங்குகிறது. அதனால் விளையும் ஆபத்துகள் தான் கதை. க்ளைமாக்ஸில் முக்கியமான இரண்டு ட்விஸ்ட்கள் இருக்கின்றன. இரண்டுமே எதிர்பாராதவை. இரண்டே இரண்டு முக்கிய கேரக்டர்கள். இன்னும் நாலைந்து துணை கேரக்டர்கள்.இரண்டு, மூன்று லொகேஷன்கள் இவை தான் படம் முழுக்க. நல்ல திரைக்கதை அமைத்தால் மினிமம் பட்ஜெட்டில் ஒரு சைகாலஜிகல் த்ரில்லர் தரலாம் என்று நிரூபித்த இயக்குநர் விக்கி ஆனந்துக்கு பாராட்டுகள். கலையரசன் த்ரில்லர் படத்துக்கே உண்டான முகபாவனைகளை அசாத்தியமாக…
Read More
சிவலிங்கா – விமர்சனம்!

சிவலிங்கா – விமர்சனம்!

எழுத்து இயக்கம் - P. வாசு ராகவா லாரண்ஸ், ரித்திகா சிங், சக்தி வாசு, வடிவேலு சந்திரமுகி இயக்குநர், காஞ்சனா நடிகர் இணைந்தால் என்ன நடக்கும் அது அப்படியே அச்சு பிசகாமல் நடந்திருக்கிறது. ஒரு கொலை, பழிவாங்க காத்திருக்கும் பேய். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் ஆபிசரின் மனைவி உடம்புக்குள் புகுந்து கொள்ளும் பேய். இவ்வளவுதான் கதை. லாரன்ஸ்க்கு பழக்கப்பட்ட ஏரியா. புகுந்து விளையாடுகிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை விட இதில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார். பேய்க்கு இன்னும் எத்தனை படத்தில் பயப்படப்போகிறார் என தெரியவில்லை. நடிப்பை விட அவருக்கு டான்ஸ் அட்டகாசாமாக வருகிறது. அவரிடம் யாரவது பஞ்ச் டயலாக்கை குறைக்க சொன்னால் நன்றாக இருக்கும். போன படத்தில் மக்கள் சூப்பர் ஸ்டார். இந்த்ப்படத்தில் சின்ன கபாலி. வாழ்த்துக்கள் ரித்திகா சிங் தான் படத்தின் தூண். அடக்கமான குறும்பு பெண், அன்பான மனைவி, பேய்பிடித்து ஆடும் வில்லி என…
Read More
ப. பாண்டி – திரை விமர்சனம்!

ப. பாண்டி – திரை விமர்சனம்!

எழுத்து, இயக்கம்- தனுஷ் இசை - ஷாம் ரொல்டன் ராஜ்கிரண், பிரசன்னா, ரேவதி 50 பிறகும் வாழ்க்கை இருக்கிறது. வயதான பிறகும் துணை அவசியம் என்பதை சொல்ல வந்திருக்கும் படம். வீட்டில் மரியாதை இல்லாமல் பேரக்குழந்தைகள் வாழும் ஸ்டண்ட் மாஸ்டர் பவர் பாண்டி. ஒரு நாள் தனக்கான வாழ்வை, தன் பழைய காதலைத் தேடு பயணம் போகிறார் ராஜ்கிரண். இது தான் படம். ராஜ்கிரண் பவர் பாண்டியாக கலக்கியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக பாராட்டுக்கு ஏங்குவது, தண்ணி அடித்து விட்டு ரகளை செய்வது, ரேவதியுடன் ரொமாண்ஸ் என மனிதர் பின்னுகிறார். முழு ஹிரோவாகா கலக்கியிருக்கிறார். பிரசன்னா எவ்வளவு அருமையான நடிகர். சின்ன சின்ன பாவனைகளிலும் கலக்குகிறார். தனுஷ் பிளாஷ்பேக் போர்ஷனில் மாஸாக காதலிக்கிறார். காதல் போர்ஷனில் எதற்கு மாஸ் எனப் புரியவில்லை. சமுகத்தில் தற்காலத்துக்கு தேவையான விஷயத்தை சொல்ல வந்திருக்கும் படம் ஆனால் அதை தெளிவாகச் சொல்லாமல் மாஸ், கமர்ஷியல் என வேறுவேறு…
Read More
கவண் ஒரு பாதி கவர்கிறது!

கவண் ஒரு பாதி கவர்கிறது!

கவண் கதை - சுரேஷ் பாலா இயக்கம் - கே வீ ஆனந்த் விஜய் சேதுபதி, டி.ஆர்,மடோனா செபாஸ்டியன் சின்னத்திரையின் உள்ளடி வேலைகள், செய்தியை தரும் ஊடகங்கள் டி ஆர் பி க்காக விளையடும் வில்லங்க விளையாட்டுக்கள். மக்களிடம் உண்மையை சொல்வதை விட சுவராஸ்யத்தை கூட்டி கார்பேரேட்டுக்கும், அரசியல்வாதிக்கும் சொம்பு தூக்குவது என தற்கால ஊடக தீவிரவாதம் தான் கதை. இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டதற்காகவும், அதை சமரசமின்றி சொன்னதற்கும் பாராட்டுக்கள்.செய்தியை பிரேக்கிங்காக எப்படி மாற்றுகிறார்கள், டாக் ஷோவில் அரசியல் வாதிக்கு எப்படி பாலிஷாக சொம்படிக்கிறார்கள், மியூசிக் புரோக்ராமில் எப்படி திறமையான வர்களை விட்டுவிட்டு வியாபரத்தை முன்னுறுத்துகிறார்கள் என்பது மிக விரிவாக முன் பாதியில் வருகிறது. அத்தனையும் மக்களிடம் சேர்க்க வேண்டிய விஷயம் தான். அட்டகாசம். திரைக்கதையாக படம் முதல் பாதியில் பரபரவென இருக்கிறது இரண்டாம் பாதி ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு படத்தில் எந்த சுவாரஸ்யங்களும் இல்லை.…
Read More
டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை!

டோரா சிரிப்பும் இல்லை, பயமும் இல்லை!

கதை, இயக்கம் - தாஸ் ராமசாமி நயன்தாரா, தம்பி ராமையா, கார் நயன்தாராவை முழுதாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம். நயன்தாரா அப்பா தம்பி ராமையாவுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு கால் டாக்ஸி நடத்த திட்டமிட்டு ஒரு கார் வாங்குகிறார்கள். அந்தக் காரில் ஒரு ஆவி இருக்கிறது. அது ஏன் நயன்தாராவை தேடி வந்திருக்கிறது. அந்த ஆவி யாரை எதனால் பழி வாங்குகிறது என்பது தான் படம். மாயாவிற்கு பிறகு வந்திருக்கும் நயன்தாராவின் பேய்ப்படம். நயந்தாரா நடித்தாலே ஹிட் எனும் மந்திரத்தை தோற்கடிக்க வந்தது போல் இருக்கிறது. காட்சிகளில் பாத்திரங்களில் எந்தத் தெளிவும் இல்லை. ஏனோ தானோவென்று இருக்கிறது. கார் வந்து ஒரு கொலை நடக்கும் வரை படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ஒரு பக்கம் கொலை விசாரனை மறுபக்கம் பேய்க்கதை என ஒன்லைன் பிடித்தவர்கள் திரைக்கதையில் கோட்டைவிட்டுவிட்டாரகள். ஆரம்பத்தில் இது காமெடிப்படமா பேய்ப்படமா என்றே தெரியாமல் நகர்கிறது. நயன்தாரா சொந்தக்குரல். பேசிக்…
Read More