இயக்குநர் – jon watts
நடிகர்கள் – Tom Holland, Zendaya, Jacob, Benedict Cumberbatch
கதை – Spiderman அடையாளம் உலகுக்கு தெரிந்துவிட, அதனால் அவனது நண்பர்களுக்கும் சிக்கல் உண்டாகிறது, அவர்கள் வாழ்க்கை பாதிக்க ஆரம்பிக்க, அதனை தீர்க்க டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உதவியை ஸ்பைடர்மேன் நாடுகிறார். அவர் ஒரு மந்திரத்தை ஏவ அதில் ஏற்படும் சிக்கல்களால் மல்டிவெர்ஸ் உலகம் திறந்து, பல வில்லன்கள் வருகிறார்கள், அவர்களை ஸ்பைடர்மேன் எப்படி, யாரின் உதவி கொண்டு ஜெயித்தான் என்பது தான் கதை
மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers: Endgame திரைப்படத்திற்கு பிறகு, உலகம் முழுக்க திரைப்பட ரசிகர்கர்களை பித்துப்பிடித்த நிலைக்கு கொண்டு சென்ற படம் என்றால் அது இந்த ஸ்பைடர் மேன் படம் தான் எனலாம் அதற்கு முக்கிய காரணம் படத்தின் கதை மல்டிவெர்ஸ் சம்பந்தமானது என்பதும், தமிழகம் முதல் உலகமெங்கும் முதன் முதலில் அறிமுகமான 2000 ஆம் ஆண்டு ஸ்பைடர்மேன் மீண்டும் இப்படத்தில் வருவதாக வந்த வதந்தியும் தான். படத்தின் டிரெய்லரிலேயே டாக்டர் ஆக்டேவிஸ், கிரீன் கோப்ளின், எலக்ட் ரோ வருவது உறுதி செய்யப்பட்ட நிலையில் படத்திற்கு உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
‘Spiderman: No Way Home அந்த அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, ரசிகர்களுக்கு ஒரு பரவச அனுபவத்தை தந்திருக்கிறது. படத்தை பற்றி எது சொன்னாலும் அது ஸ்பாய்லராக மாறலாம் அதனால் படம் பார்த்தவர்கள் மட்டும் படியுங்கள். பார்க்காதவர்கள் உடனே திரையரங்கு செல்லலாம்.
மார்வல் உருவாக்கி வைத்துள்ள திரையுலகம் முடிவே இல்லாத அளவில் சாத்தியங்களை திறந்து வைத்திருக்கிறது. அவர்கள் நமக்கு தரும் ஒவ்வொரு படத்திலும், தரும் நாஸ்டாலஜியா அனுபவங்கள் விலைமதிப்பில்லாதது எனலாம். இதுவரையிலும் மூன்று ஸ்பைடர் மேன் படங்கள் வந்திருக்கிறது. அதில் முதலில் வந்த ஸ்பைடர்மேனை குழந்தையில் பார்த்தவர்கள் இப்போது இளைஞர்களாக இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சியை தந்துள்ளது இப்படம். மூன்று ஸ்பைடர்மேன்களும் திரையில் தோன்றும் போது திரையரங்கு அதிர்கிறது.
படம் மெதுவாக டாம் ஹாலந்து ஸ்பைடர்மேனுடன் ஆரம்பமாகிறது, டாக்டர் ஸ்ட்ரேண்ஞ்ச் மந்திரத்தை ஏவி, அது தவறாக மாறியவுடன் டாக்டர் ஆக்டேவியஸ் வந்தவுடன் ஆரம்பிக்கும் ஆராவரம் படம் முடியும் வரை நிற்கவில்லை.
கதை ரொம்ப சிம்பிளானது தான் ஆனால் அதை ரசிகர்கள் குதூகலிக்க வேண்டும் என்று சொல்லி அடித்திருக்கிறார்கள். அதிலும் டோபி ஸ்பைடர் மேன் வரும் காட்சி அதளகளம். மூன்று ஸ்படைர் மேன் ஒன்று சேர்வதும் அவர்கள் இணைந்து வில்லனை எதிர்ப்பதும் கண்கொள்ளா காட்சி.
மூன்று ஸ்படைர்மேன்கள் படத்தின் இறுதியில் தான் வருவார்கள் என நாம் எதிர்பார்க்க படத்தில் இடைவேளையில் ஆரம்பித்து, அவர்கள் படத்தின் இறுதி வரையிலும் வருவது ஆச்சர்யம். அதிலும் அவர்களுக்கிடையேயான வசனமும், வாழ்க்கை பற்றி அவர்கள் பகிர்ந்துகொள்வதும் அட்டகாசம்.
படத்தின் ஒவ்வொரு சண்டை காட்சியும் அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இறுதி சண்டைக்காட்சி மார்வல் ரசிகர்களுக்கு தீனி போட்டிருக்கிறது.
இந்தப்படத்தில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஸ்பைடர்மேன் கதாப்பாத்திர வடிவமைப்பு தான். பீட்டர் மனதளவில் யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு இயல்பான நல்ல மனம் படைத்த இளைஞன். அவன் அதிகபிரசங்கிதனம் சிக்கலில் விட்டாலும், அவன் மீண்டும் மீண்டும் வில்லனையும் காப்பாற்றவே முயற்சிப்பான். அவனது பர்சனல் இழப்பு அவனை வாழ்க்கையில் மாற்றும், வாழ்வை கற்றுக்கொடுக்கும் இது அனைத்தும் படத்தில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது.
உண்மையை சொலவதானால் இதுவரை வந்த அத்தனை ஸ்பைடர்மேன் பாத்திரங்களின் குணங்களையும் மொத்தமாக மாற்றி நமக்கு புது அனுபவத்தை தந்துள்ளார்கள். தனியாககுறிப்பிட்டு சொல்ல முடியாத அளவில் அத்தனை நடிகர்களும் அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
முக்கியமாக டாம் ஸ்பைடர்மேன் இந்தப்படத்தில் தான் வயதுக்கு வந்திருக்கிறார். அவருடைய இழப்பு அவரை ஒரு முழுமையான ஸ்பைடர்மேனாக மாற்றி இருக்கிறது.
படத்தின் ஒரே மைனஸ் இடைவேளைக்கு பிறகு வரும் கொஞ்ச காட்சிகள் இழுவையாக இருப்பதும் டாக்டர் ஸ்ட்ரேண்ஞ்ச் போன்ற அதிபுத்திசாலி முட்டாள்தனமாக மந்திரத்தை ஏவுவதும், நம்பும்படியாக இல்லை. மல்டிவெர்ஸ் இல்லை என்றால் இந்தப்படம் தாங்கியிருக்காது. அதே போல் மல்டிவெர்ஸ் போன்ற கான்செப்டில் இன்னும் எத்தனையோ ஆச்சர்யங்கள் தந்திருக்கலாம் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு குழந்தை தனமாக நகர்கிறது திரைக்கதை. ஆனாலும் ஸ்பைடர் மேன் ரசிகர்களுக்கு இப்படம் விருந்து தான்.