20
Oct
முன்னொருக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெருமைப்படுத்தப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிந்தைய காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். அப்படி இருந்த நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்... டைரக்டர் ஸ்ரீதர். ஆம்.. நம் தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம்…