தயாரிப்பாளரும், ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளருமான ராமோஜி ராவ் மறைவு!

1936 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருபுடி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ராமோஜி ராவ். செருகூரி வெங்கடசுப்பா ராவ் மற்றும் சுப்பம்மா ஆகியோர் இவரின் பெற்றோர்.

உலகின் மிகப்பெரிய தீம் பார்க் மற்றும் திரைப்பட ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியை நிறுவினார். 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி ‘ஈநாடு’ நாளிதழ் தொடங்கினார். மார்கதர்சி சிட் ஃபண்ட், ஈநாடு செய்தித்தாள், ஈடிவி நெட்வொர்க், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, உஷாகிரண் மூவிஸ், மயூரி ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், டால்பின் குரூப் ஆஃப் ஹோட்டல் ஆகிய நிறுவனங்கள் ராமோஜி ராவுக்கு சொந்தமான நிறுவனங்கள்.

ஒரு தயாரிப்பாளராக, அவர் டோலிவுட்டில் பல மறக்க முடியாத திரைப்படங்களைத் தயாரித்தார். தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்தார். இவருடைய படங்கள் சமுதாயத்தை விழிப்படையச் செய்யும்.

Eenadu founder chairman and media baron Ramoji Rao passes away at 87 -  Hindustan Times

ஒரு ஊடகப் பிரமுகராக, தெலுங்கு அரசியலில் ராமோஜி ராவ் மறுக்க முடியாத ஆளுமைடீ கொண்டிருந்தார். பல மாநில மற்றும் தேசிய தலைவர்கள் ராமோஜி ராவுடன் நெருங்கமாக இருந்து இருக்கிறார்கள். பத்திரிக்கை, இலக்கியம், சினிமா மற்றும் கல்வி ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக 2016 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதை இந்திய அரசாங்கம் ராமோஜி ராவுக்கு வழங்கியது.

அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் (தெற்கு), ஐந்து நந்தி விருதுகள் மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தேசிய திரைப்பட விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.