29
Jun
தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள்.இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி கொடுக்கின்றன என்றாலும், நாடக அனுபவம் போல வராது. அதேநேரம் சினிமாவிற்கு வந்து புகழ் பெற்றபின் பலர் நாடகங்களை மறந்துவிட்டனர். சிலர் அதனை மறைத்தார்கள்; வெகு சிலரே மறுபடியும் நாடக மேடைக்கு வந்தனர்.அப்படி நாடகத்திலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர்தான் ஆர்.எஸ்.மனோகர். உண்மையில் இந்த சினிமா விசித்திரமானது. யாரை எங்கே எப்போது உயர்த்தும் என்பதும் அறியமுடியாது. யாரை எங்கே எப்போது தாழ்த்தும் என்றும் உணரமுடியாது. சிலர் சில வெற்றிகளை அதிர்ஷ்டம் என்பர். சிலர் அதீத திறமை என்பர். அதிர்ஷ்டமும் திறமையும் கலந்துகட்டி விளையாடும் இந்த வினோத விளையாட்டில் அடையாளம் அழிந்துபோன பல திறமைசாலிகள் உண்டு. இவருக்குப் பின்னால் இப்படி ஒரு வரலாறா என்று ஆச்சர்யப்படும் கதைகள் நிறைய உண்டு. அந்த…
