ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் இதே அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53. சில முகங்களை பார்த்தவுடன் விரும்பத் தோன்றி விடும்.. அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்து கிடந்தது. ஒரு கதா பாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா…
Read More
தங்கரின் அழகி-க்கு வயது 20

தங்கரின் அழகி-க்கு வயது 20

அழகி! தமிழில் ஏகப்பட்ட நபர்களை பாதித்த திரைப்படம். அந்த படத்தின் மூலம் காண்போர் ஒவ்வொருவரையும் நமது சொந்த ஊரின் நினைவுகளோடு ஒட்டி உறவாட வைத்தார் தங்கர்பச்சான். உணமையைச் சொல்லப் போனால் இன்றும் கூட எத்தனை தனம்....சண்முகம்..நம்மை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?. அதனாலேயே அப்படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் நூற்றில் தொண்ணூறு பேருக்கு தன் முதல் காதலை நினைவுபடுத்தியது அதிலும் காதல், நட்பு, பிரிவு, பொறாமை, சந்தேகம், பரிதவிப்பு, பாசம், மனிதாபிமானம், குழந்தைத்தனம், விட்டுக்கொடுத்தல், போன்ற எல்லா குணாதிசியங்களையும் ஒருங்கே காட்ட எப்படி முடிந்தது இந்த தங்கர்பச்சானால்? "என இந்த ஒற்றை படத்தை கண்டுவிட்டு வியந்தனர் ரசிகர்கள். சிம்பிளாக சொல்வதானால் மயிலிறகை கொண்டு கைகளில் வருடுவது போன்ற மென்மையான கதை. அறியாப் பருவத்தில் தெரியாமலே நம் மனதுக்குள் குடிகொண்டுவிடுகிற காதலும் காலாகாலத்துக்கும் அது பண்ணுகிற அவஸ்தை களும்தான் இந்த 'அழகி'யின் ஒன்லைன். பொதுவாக பெண்கள்தான் திரையில் துக்கமான காட்சிகள் வந்தால் உடனே…
Read More
சூர்யா & ஜோ காதல் கதை By கட்டிங் கண்ணையா!

சூர்யா & ஜோ காதல் கதை By கட்டிங் கண்ணையா!

இன்னிக்கு சூர்யா & ஜோ மேரேஜ் டே-வை ஒட்டி கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்.. 1999-ம் ஆண்டு... சூர்யா -ன்னு இப்போ அழைக்கப் படுறவர் அப்போ சரவணன். ஒரு ஆக்சிடெண்ட் மாதிரி நடிக்கவந்து சூர்யாவா ஆக போராடிக்கிட்டிருந்தார் . அப்போ இங்குள்ள மீடியா பையன`அழகாத்தான் இருக்கார்... ஆனா, ஆக்சனோ, டேன்சோ சரியா வரவில்லை..! காணாமல் போய்டுவார்’ -ன்னு ஆரூடம் எழுதிக்கிட்டிருந்தாய்ங்க.. ஆனா . 5-வது படமா வந்ததுதான் `பூவெல்லாம் கேட்டுப் பார்’. இந்தப் படத்திலேதான் இந்த ஜோடி மொத மொதலா இணைஞ்சிது. ஜோதிகா இந்தப் படத்துக்கு முன்னாடி ஹிந்தியில் சில படங்கள் நடிச்சிருந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் நம்பி சென்னையில் ஹால்ட் அடிச்சிருந்தார். இச் சூழலில் ஒரு டிசம்பர் மாசம். சென்னைத் திரைப்பட நகரில் `டெஸ்ட் ஷூட்' எனப்படும் பரிசோதனைக் காட்சிகளை இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கிறார். அப்போ சூர்யாவிடம், ``சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா…
Read More
உலகம் சுற்றும் வாலிபன் !💥   ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

உலகம் சுற்றும் வாலிபன் !💥 ஸ்பெஷல் ரிப்போர்ட் By கட்டிங் கண்ணையா!

முன்னொருக் காலத்தில் -அதாவது 48 வருஷங்களுக்கு முன்னாடி எம்.ஜி.ஆர் தயாரித்து டைரக்ட் செய்த 'உலகம் சுற்றும் வாலிபன்' இன்றைக்கு ரி ரிலீஸ் ஆகப் போகுது.. தியேட்டர்கள் திறந்து பது நாட்களுக்கு மேல் ஆன நிலையில் பல நாளிதழ்களில் இப்பட வெளியீடுக் குறித்த விளம்பரம் மட்டுமே இடம் பெற்ரு வருவதைக் கண்டு கோலிவுட்டே மிரண்டு போயிருக்கிறதாம்.. இனி நம்ம கட்டிங் கண்ணையா ரிப்போர்ட் , தமிழகத்தில் அதிமுக கூட்டம் எங்கேனும் நடந்தால், கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சில பாடல்கள் ஒலிபரப்புவார்கள். அந்தப் பாடல்களில், ‘வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்கிற பாடல் நிச்சயம் இடம்பெறும். இதுதான், ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் டைட்டில் பாடல். இந்தத் திரைப்பட ஷூட்டிங்குகள் உலகின் பல நாடுகளில் நடைபெற்றன. அந்தப் படப்பிடிப்புகளுக்கு மத்திய அரசு அனுமதித்த அன்னிய செலாவணியைக் காட்டிலும் கூடுதலாக செலவான விவரம் வருமானவரித்துறையிடம் இருந்துச்சாம். அது அப்போது தேசவிரோத குற்றத்திற்கு…
Read More
குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

குஞ்சுமோன் & ஷங்கர் உருவாக்கிய ‘ஜென்டில்மேன்’ – கொஞ்சம் பிளாஷ் பேக்!

28 வருசத்துக்கு முன்னாடி ரிலீஸாகி இன்னிக்கும் நினைவில் நிற்கும் ஜென்டில்மேன் - சில நினைவுகள் By கட்டிங் கண்ணையா தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரா இன்னிக்கும் இருக்கும் டைரக்டர் ஷங்கர் இயக்கிய முதல் படம் 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ சூப்பர் ஹிட் திரைப்படம் தான். இந்த படம் உருவானது குறிச்சு ஸ்டில்ஸ் ரவி ஒரு முறை கட்டிங் கண்ணையாவுக்கு அளிச்ச பேட்டியின் போது, “நான் இயக்குநர் பவித்ரனோட 2 படங்களுக்கு ஸ்டில்ஸ் ஒர்க் செஞ்சேன். அப்போது அவரிடத்தில் கோ டைரக்டரா  இருந்த ஷங்கர் எனக்கு நல்ல பழக்கம். நல்ல அறிவாளி. காமெடி சென்ஸ் உள்ளவர். அவர் தனியாக படங்களுக்கு முயற்சி செஞ்சுகிட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஏ.வெங்கடேஷுடன் என் வீட்டுக்கு வந்து ‘ஜென்டில்மேன்’ படத்தின் கதையை என்னிடத்தில் சொன்னார். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்துது. எக்ஸ்ட்ரார்டினரி கதையா தோன்றிச்சு. ஆனால், அதில் அதிகமாக இருந்த பிராமண…
Read More
காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

காதல் கோட்டை படத்துக்கு ஹேப்பி சில்வர் ஜூபிளி இயர்!

கோலிவுட் ரசிகர்களால் மறக்க முடியாத சினிமாக்களில் ஒன்றான காதல் கோட்டை ரிலீஸாகி 25 வருசமாச்சாம்! இதை ஒட்டி டைரக்டர் அகத்தியனுக்கு வாழ்த்து சொல்லி பேசிய நம் கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சிறப்புக் கட்டுரை! இந்த காதல் கோட்டை மூலம்தான் அகத்தியனுக்கு தமிழ் சினிமாவில் இயக்குநருக்கான தேசிய விருது கிடைச்சிது ஆம் 1996-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் ‘சிறந்த படமாக’ தேர்வு செய்யப்பட்ட காதல் கோட்டை, சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது.1954ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகளில், பல தமிழ் படங்களுக்கு சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த பாடலாசிரியர் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்ட போதிலும், 42 ஆண்டு கால காத்திருப்பிற்கு பிறகு முதல்முறையாக ‘சிறந்த இயக்குனர்’ என்ற விருதை, தமிழ் சினிமாவிற்காக பெற்று தமிழகத்தையே பெருமைப்பட வைத்தார் இந்த இயக்குநர் அகத்தியன்… பார்க்காத நட்பு என்பது இன்றையக் காலக்…
Read More
சுப்ரமணியபுரம் பட நினைவுகள் குறித்து சசிகுமார்!

சுப்ரமணியபுரம் பட நினைவுகள் குறித்து சசிகுமார்!

2008-ம் ஆண்டு இதே ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் டைரக்ட் & நடிச்சு, தயாரிச்சு இருந்தார். ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். எண்பதுகளின் மதுரையில் சுப்ரமணிபுரம் என்ற பகுதியில் நடப்பதாக சித்தரிக்கப்பட்ட திரைப்படம் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம்’. அதன் காட்சியாக்கம், கலை இயக்கம், நடிப்பு, இசை ஆகியவற்றுக்காக மட்டுமல்ல; திரைக்கதைக்காகவும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இப்படம் உருவாக்கிய சலனமும் தாக்கமும் தமிழ் சினிமாவைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்க்க வச்சது என்னவோ நிஜம்.இந்தப் படத்தை முடிச்சு வச்சிப்புட்டு ரிலீஸ் செய்ய அவர் பட்டப்பாடை விட சசிகுமாரிம் நண்பனாக இருந்த வீ.கே.சுந்தர் பட்ட மெனக்கெடல் இன்றைக்கும் நினைவில் உள்ளது.. இப்ப கொஞ்சம் பிகு பண்ணும் ஆர்டிஸ்ட் லிஸ்டில் சேர்ந்து விட்ட சசிகுமாரிடம் முன்னொரு காலம் நம்ம கட்டிங் கண்ணையா அடிக்கடி பேசுவது உண்டு. அந்த…
Read More
மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

மறைந்தாலும் மறக்க இயலாதப் படைப்பாளி மணிவண்ணன்!

இந்த கோலிவுட் சினிமா எத்துணையோ படைப்பாளிகளைக் கண்டிருக்கிறது.. கண்டு கொண்டுமிருக்கிறது.. அப்படியான படைப்பாளிகளில் சிலரே மறைந்த பின்னரும் நினைவில் கொள்ளத் தக்க சாதனையோ, செயலோ செய்து மனதில் வாழ்கிறார்கள். அப்படியான லிஸ்டில் ஒருவரான மணிவண்ணன் காலமான தினமின்று. அதையொட்டி நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் நினைவஞ்சலி எல்லோருக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கும் என்றபோதும் சிலர் அதைத் தமது தொழில் தொடர்பான விஷயங்களில் வெளிப்படுத்துவதில்லை. ஆனால், வேறு சிலரோ தமது தொழிலும் தமது அரசியல் வெளிப்படும்படி நடந்துகொள்வர். மணிவண்ணன் இரண்டாம் ரகம். அவரைப் பொறுத்தவரை அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கான அரசியல், ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியல். அவை தொடர்பான படங்களை உருவாக்குவதில் மட்டுமே மணிவண்ணனுக்கு நம்பிக்கை இருந்தது. மார்க்சிய சித்தாந்தம், தமிழ்த் தேசியம், தமிழீழ அரசியல் போன்றவற்றில் பிடிப்பு கொண்டிருந்த மணிவண்ணன் 50 படங்களை இயக்கியுள்ள மணிவண்ணனின் படங்களில் முப்பதுக்கும் மேற்பட்டவை வசூலைக் குவித்தவை. என்றபோதும், வெற்றியின்போது தலையில் கொம்பு முளைத்ததும்…
Read More
சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்த தியேட்டரைக் காணோம்!

திண்டுக்கல் நகரில் 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்.வி.பி.ஜி., திரையரங்கம் இடிக்கப்பட்டக் காட்சியை இன்னிக்கு ஒரு ரிப்போர்ட்டர் நேரில் பார்த்து நொந்து போயிருக்கிறார். எனது சின்ன வயது சினிமா கனவுகளை மிக எளிய கட்டணத்தில் நிஜமாக்கிய திண்டுக்கல் என்.வி.ஜி.பி. திரையரங்கம் சென்ற மாதம்வரையிலும் இந்த இடத்தில்தான் இருந்ததாம் என்று குறிப்பிட்டு காலி இடத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அண்மையில் சைக்கோ டைரக்டர் மிஷ்கின் கூட இந்த தியேட்டருக்கு போய் வந்து என் வாழ்க்கையை ஓட வைத்த தியேட்டர்’ இது. என்றெல்லாம் சொல்லி இருந்து நினைவிருக்கும். இதை ஒட்டி நம்ம கட்டிங் கண்ணையா பகிர்ந்திருக்கும் ரிப்போர்ட் இதோ: திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 1160 இருக்கைகளை கொண்ட பெரிய திரையரங்கம் என்பதால் இந்த தியேட்டரில் படம் பார்ப்பதே ஒரு திருவிழா போல் இருக்கும். தியேட்டர் தொடங்கிய முதல்நாள் பொன்னப்ப பாகவதர் நடித்த ‘பவளக்கொடி’ என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. குறைந்தபட்ச டிக்கெட் ரூ.20 பைசா முதல் அதிகபட்ச…
Read More
ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே: ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி 17 வருசமாச்சாம்!

ஆட்டோகிராப் படம் ரிலீஸாகி இன்னியோட ஸ்வீட் 17 இயர்ஸ் ஆனதா வந்த சேதியை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் சேதி: சேரன் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான ஆட்டோகிராப் திரைப்படமானது மாபெரும் வெற்றியை சந்தித்தது. அப்படத்திற்கு சேரனே நடிகராகவும், இயக்குனராக வும் பல விருதுகளை வென்றுள்ளார். அதில் கோபிகா, சினேகா, மல்லிகா என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அந்த ஆட்டோகிராப் படம் ஒவ்வொரு மனுசனோட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பருவத்தை கிளறும் வகையில் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் மத்தியில் மஹா ஹிட் அடிச்சு  3 தேசிய விருதுகளை குவிச்சுது. இதேபோல் பிலிம்ஃபேர் விருது, தமிழக அரசின் விருதுகளையும் அள்ளிச்சு இந்த ஆட்டோகிராஃப். இது குறிச்சு டைரக்டர் சேரன்-கிடே பேசினப்போ ”பல பேரு ‘ஆட்டோகிராஃப்’படத்துலே வந்த சம்பவங்கள் தங்களோட வாழ்க்கை நடந்த சம்பவமா நெனச்சாங்க. ஆனா ஒரு விசயம் தெரியுமா? இதே கதையை அப்போ டாப் லிஸ்டில் இருந்த அரவிந்த் சாமி,…
Read More