சூர்யா & ஜோ காதல் கதை By கட்டிங் கண்ணையா!

இன்னிக்கு சூர்யா & ஜோ மேரேஜ் டே-வை ஒட்டி கட்டிங் கண்ணையா அனுப்பி இருக்கும் ஸ்பெஷல் ரிப்போர்ட்.. 1999-ம் ஆண்டு… சூர்யா -ன்னு இப்போ அழைக்கப் படுறவர் அப்போ சரவணன். ஒரு ஆக்சிடெண்ட் மாதிரி நடிக்கவந்து சூர்யாவா ஆக போராடிக்கிட்டிருந்தார் . அப்போ இங்குள்ள மீடியா பையன`அழகாத்தான் இருக்கார்… ஆனா, ஆக்சனோ, டேன்சோ சரியா வரவில்லை..! காணாமல் போய்டுவார்’ -ன்னு ஆரூடம் எழுதிக்கிட்டிருந்தாய்ங்க.. ஆனா . 5-வது படமா வந்ததுதான் `பூவெல்லாம் கேட்டுப் பார்’. இந்தப் படத்திலேதான் இந்த ஜோடி மொத மொதலா இணைஞ்சிது.

ஜோதிகா இந்தப் படத்துக்கு முன்னாடி ஹிந்தியில் சில படங்கள் நடிச்சிருந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் நம்பி சென்னையில் ஹால்ட் அடிச்சிருந்தார். இச் சூழலில் ஒரு டிசம்பர் மாசம். சென்னைத் திரைப்பட நகரில் `டெஸ்ட் ஷூட்’ எனப்படும் பரிசோதனைக் காட்சிகளை இயக்குநர் வஸந்த் இயக்கியிருக்கிறார்.

அப்போ சூர்யாவிடம், “சரவணா, இதுதான் ஜோ. உன்னோட ஹீரோயின். நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிக்கங்க. ஏன்னா இது ரொமான்டிக் மூவி!’’ அப்ப்டீன்னு அறிமுகம் செஞ்சு வைச்சிருக்கார்.

அப்போ பார்த்த ஜோவின் முதல் பார்வையிலும் புன்னகையிலும் சூர்யா வசீகரிக்கப் பட்டிருக்கிறார். `மணிரத்னம் தயாரிப்பில் ஹீரோவாக அறிமுகமான ஆள்’ என்ற தயக்கம் ஜோவுக்கு. `பாலிவுட்ல இருந்து வந்த பொண்ணு’ என்ற பிரமிப்பு சூர்யாவுக்கு.

இப்படி முதல் டெஸ்ட் ஷூட்டில் சூர்யா தயங்கி நிற்க `நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ்!’ எனக் கைகுலுக்கி ஜோவியலாகப் பேசியிருக்கிறார் ஜோ. அச்சம்பவம் குறிச்சு கட்டிங் கண்ணையாவிடம் “ஒரு பெண்ணான கூச்சமும் தயக்கமுமாக அவர் பேசியதை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கிறது. நான் பொதுவா ஆணோ, பெண்ணோ கண்களைப் பார்த்துப் பேசுறவள். அவர் பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பியும் பார்க்காத சின்ஸியர் பையன். இது போதாதா… நானாக வலியச் சென்று பேசுவேன். அக்கறையோடு நலம் விசாரிப்பார். அப்படி குட் ஃப்ரண்ட் ஆயிட்டோம்” என்றார் ஜோதிகா.

தன் காதல் குறிச்சு கட்டிங் கண்ணையாவிடம் ஒரு முறை சூர்யா சொன்னது “ஷூட்டிங் ஸ்பாட்ல காதல் தவிப்புக்கும், கோபத்துக்கும் ஒரே விதமான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குற அளவுக்குத்தான் அப்போ என் சினிமா அறிவு இருந்துச்சு. ஆனா, ஜோ கண்களாலேயே நடிக்கிற ஆளு. `என்ன பொண்ணுடா இது!’னு அவிய்ங்க நடிப்பைப் பார்த்து வாயை பொளந்திருக்கேன். ஆனா, ஜோ எப்போதும் என்னை செமையாப் பாராட்டுவாங்க. அப்பல்லாம் `கான்ஃபிடன்ஸ் லெவல்’ அவ்ளோ ஏறும். அதுக்குப் பிறகு ஒருவரோட வளர்ச்சியில இன்னொருவர் அக்கறை எடுத்துக்க ஆரம்பிச்சோம்.

சினிமா சம்பந்தமாப் பேசுவோம். எங்களைப் பத்தி வந்த கிசுகிசுக்களைப் பேசி காமெடி பண்ணிக்குவோம். நடுவுல ஜிவ்வுனு `தெனாலி’ மாதிரி பெரிய படங்கள்லாம் பண்ண ஆரம்பிச்சாங்க. எனக்கு சந்தோஷமாவும் கொஞ்சம் கூச்சமாவும் இருக்கும். ஆனா, ஜோ என்னைப் பார்த்து `சீக்கிரமே நீங்க பெரிய ஸ்டாரா ஆயிடுவீங்க!’ எனச் சொல்லிட்டே இருப்பாங்க”அப்ப்டீனாங்க

காக்க காக்க’ திரைப்படம் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சூர்யா -ஜோதிகா காதல் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படத் தொடங்கிச்சு. ஒருநாள் கலைப்புலி தாணுவின் அலுவலகத்திற்கு `நந்தி சாமியார்’ என்ற பெயர் கொண்ட சாமியாரை காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒரு தியேட்டர் அதிபர் அழைச்சு வந்தார். எல்லோருக்கும் சாமியார் ஆசி வழங்கினார். அதோடு சிலரிடம் அவர்களின் பிரச்சினைகளை 5 நிமிட நேரத்துக்கு குறையாமல் பேசினார்.நடிகர் சூர்யாவும் சாமியாரை சந்தித்து ஆசி பெற்றார். அவரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்த நேரத்தில் சூர்யாவின் மனதில் இருந்த காதல் விஷயங்களை சாமியார் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்த, சூர்யா மிரண்டு போய்விட்டாராம். ‘எப்போது திருமணம் செய்து கொள்ளலாம்?’ என்று சூர்யா கேட்டபோது, ‘இந்தப்படத்தில் நடித்து முடித்ததும் திருமணம் செய்து கொள்’ என்று கூறினாரம். மேலும் தாணுவிடம் விடைபெற்று செல்லும்போது, ‘காதலில் சூர்யா ரொம்பவே தீவிரமாக இருப்பதாகவும், சீக்கிரம் படத்தை எடுத்து முடித்துவிடும்படியும் அறிவுரை கூறினாராம். உண்மையாகவே காதலர்களாக மாறியதால் தான் இந்த படத்தின் காதல் காட்சி மிக இயல்பாக இருந்தது பின்னர் தெரிய வந்துச்சு. ஒரு கட்டத்துல சூர்யா பிஸியானதும் ஜோ கல்யாணத்துக்கு ரெடியாகி, அப்படியே எனக்காகவும் பசங்களுக்காகவும் நடிப்பைவிட்டு ஒதுங்கிட்டாங்க.

இதுக்கிடையிலே சூர்யாவிற்கும் ஜோதிகாவிற்கும் காதல் மற்றும் தன் அபிப்ராயத்தைக் கட்டிங் கண்னையாவிடம் சில வருடங்களுக்கு முன் பகிர்ந்த சிவகுமார் சொன்னது “சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றெல் லாம் செய்திகள் வந்ததே” என்று கேள்வி கேட்டப்போது, சிவகுமார் ” சூர்யா காதல் கல்யாணம் செய்து கொண்டது தப்பில்லை. நானும் மனிதன் தானே எனக்கும் சில ஆசைகள் இருக்காதா ஆனால் நான் வாழ்க்கையில் முன்னேறியே ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சூர்யாவை பொறுத்தவரை சினிமாவில் நல்ல பெயரை சம்பாரித்து விட்டார். அதன் பின் குடும்பத்தையும் வழிநடத்த அப்போதே தொடங்கி விட்டார். முதலில் ஜோதிகாவை காதலிக்கிறேன் என்று சொன்னவுடன் மௌனம் காத்தேன். அதன் பின் நான் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டேன். சில பேர் அண்ணன் காதல் திருமணம் அதனால் தம்பி கார்த்தியை காதலிக்க விடவில்லையா என்றெல்லாம் கேட்டார்கள். ஒருத்தர் காதலித்தால் மற்றொருவரும் காதலிக்க வேண்டுமா. அவனுக்கு காதல் இல்லை அதனால் நங்கள் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தோம்” அப்படீன்னு சொல்லி இருந்தார்

எனிவே ஹேப்பி மேரேஜ் டே சூர்யா& ஜோ