கடந்த 2002 ஆம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெனிமி. படம் வெற்றி என்பதைவிட இந்த படத்தில் வந்த ஓ போடு பாடல் மாபெரும் வெற்றிபெற்று பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிபெற்றுச்சு. எங்கு பார்த்தாலும் ஓ போடு, ஓ போடு என இந்த படத்தின் பாடல்தான் ஒலிச்சுது.
கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான படம்தான் ஜெமினி. விக்ரம் படத்தில் நாயகனாக நடிச்சார்.
வட சென்னை ரவுடிகளை களமாகக் கொண்டு வந்தது. நாயகிக்கு சௌகார் பேட்டை பிண்ணனி. தில், காசி ஆகிய படங்களின் வெற்றியோடு இருந்த விக்ரம், ஹைப் ஏற்றிய ஓ போடு பாடல், ஏவிஎம்மின் விளம்பர உத்தி என பல அட்வாண்டேஜ்களோடு திரைக்கு வந்து பெரிய வெற்றியைப் பெற்றது இந்தப் படம். விக்ரமுக்கு, தில் கொடுத்திருந்த ஆக்சன் ஹீரோ இடத்தை இந்தப் படம் உறுதி செய்தது. அதிலும் தேவர் ஃபிலிம்ஸ் பாணியில் பட பூஜை அன்றே பட வெளியீட்டுத் தேதியை அறிவித்து களத்தில் இறங்கியது ஏவிஎம் நிறுவனம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு எல்லா சென்டர்களிலும் தியேட்டர் நிரம்பியது இந்தப்படத்திற்குத்தான்
இந்நிலையில் இந்த படம் குறித்து இன்னிக்கு ட்விட் போட்டிருந்த ஆக்டர் விக்ரம் குறித்து பேசிக் கொண்டிருந்த போது நம்ம கட்டிங் கண்ணையா சொன்ன தகவல் இதோ :
இந்த இந்த ஜெமினி படத்தில் முதலில் நாயகனான நடிச்சது தல அஜித்-தாக்கும். அதாவது காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’ இரண்டும் அஜித்தை ஒரு நடிகன் என்பதைத் தாண்டி ஒரு நாயகனாக செதுக்கிய, உருவாக்கிய முக்கியமான படங்கள். அந்தப் படங்களை இயக்கிய சரண் மீண்டும் அஜித்திற்காக ஒரு கதையை தயார் செஞ்சார்.
அஜித்தின் 25ஆவது படமான அமர்க்களம் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணைய இருந்த அந்தக் கதையை அஜித்திற்காகவே செதுக்கினார் சரண். அஜித்தின் மாஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் விதமாக உருவாகியிருந்தது அந்தக் கதை. இன்னொரு புறம் அஜித்தும் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகியிருந்தார்.
அப்போ அஜித்தின் முன் இரண்டு கதைகள் இருந்தன. ஒன்று, நடிகர் சிங்கம்புலி (அப்போது ராம்சத்யா என்ற பெயரில்) சொன்ன ‘ரெட்’ படத்தின் கதை. இன்னொன்று சரண் உருவாக்கிய ‘ஜெமினி’ கதை. ‘ஜெமினி’ கதையைவிட ‘ரெட்’ கதை நன்றாக இருப்பதாக எண்ணிய அஜித் ‘ஜெமினி’யை அவாய்ட் செஞ்சுட்டு ‘ரெட்’ படத்தில் நடித்தார்.
ஆக ஏறுமுகம் என்ற பட தலைப்பில் அஜித் ஹீரோவாக ஒப்பந்தமாகி சில நாட்கள் நடிச்ச படத்தைதான் விக்ரமை வைத்து ‘ஜெமினி’ யாக முடிச்சாராம் சரண்..
ஒரு படத்தில் ஹீரோவுக்கான மாஸ் எப்படி இருக்குமோ அதற்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைக்கப்பட்டிருக்கும். வில்லனாக மோலொவுட் ஆக்டர் கலாபவன் மணி தமிழில் அறிமுகமானார். மாஸ் படஙகளுக்கே உரித்தான வில்லானபோல் சவுண்டு விடாமல் தனது பாடி லாங்குவேஜில் விலங்குகள் போல் மிமிக்ரி எல்லாம் செய்து அசத்தியிருப்பார் இந்த புதுமையான யுக்தி ரசிகர்களை, குறிப்பாக குழந்தைகள் பெரிதாக கவர்ந்திழுந்துச்சு. இந்த படத்துக்கு பிறகு தமிழில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் ஒரு ரவுண்டு வந்தார் கலாபவன் மணி.
படத்துக்கு பரத்வாஜ் இசையமைத்திருப்பார். எஃப்எம் என்கிற ரேடியோ பொழுதுபோக்கு அம்சம் அப்போது பிரபலமாகி இருந்த வேலையில், படத்தின் அனைத்து பாடல்களும் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாகின. அந்த காலகட்டத்தில் எந்தவொரு மாஸ் படமாக இருந்தாலும் அதில் இடம்பெறும் ஒரு பாடல் ஒட்டு மொத்த தமிழகத்திலும் ஒலிக்கும் பாடலாக உருவெடுத்தால் படம் சூப்பர் ஹிட் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
அந்த வகையில் ஜெமினி படத்தில் இடம்பெறும் ஓ போடு என்கிற பாடல் பட்டி தொட்டியெங்கும் படம் வெளியீட்டுக்கு முன்னரே ஒலித்து ஹிட்டானது. இதனால் அந்தப் பாடலுக்கென்று விஷேசமாக அனைவரையும் கவரும் விதமாக நடனம் அமைத்து, ஓ போடு என்ற வார்த்தையை சொல்வதற்கு என தனி ஸ்டைலும் அமைஞ்சாய்ங்க..இடது கையில் இரண்டு விரல்களை முன்னே வைத்து அதன் வழியே விக்ரம் பார்ப்பது போல் அமைந்திருந்த அந்த ஸ்டைல் அப்போது மிகவும் பிரபலமாச்சு.சிறந்த பொழுதுபோக்கு படமாக இருந்த ஜெமினி 50வது பிலிம் ஃபேர் விருதுகளில் சிறந்த வில்லனா கலாபவன் மணி, சிறந்த இசையமைப்பாளராக பரத்வாஜ், சிறந்த பின்னணி பாடகியா அனுராத ஸ்ரீராம் அப்படீன்னு மூன்று விருதுகளை அள்ளிச்சாக்கும்