ஸ்ரீவித்யா நினைவு நாளின்று!

0
78

ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் இதே அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.

சில முகங்களை பார்த்தவுடன் விரும்பத் தோன்றி விடும்.. அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்து கிடந்தது. ஒரு கதா பாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர். அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள். இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும். சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான, இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?

இத்தனைக்கும் தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார்.
‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரின் தந்தை அகடம் கிருஷ்ணமூர்த்தி தாயார், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி, ஸ்ரீ வித்யாவை நினைக்கும் போதே ‘அதிசய ராகம், அபூர்வ ராகம்’ என்ற பாடலும் அதில் அவர் கண்களின் பேரெழிலும் நடிப்பாற்றலும் நம் கண்முன் தோன்றும். அந்தச் சிறப்புமிகு நடிகை இன்று இல்லை. புற்று நோய் முற்றியதால் அவர் இதே அக். 19 அன்று மறைந்தார். மறையும் போது அவருக்கு வயது 53.

சில முகங்களை பார்த்தவுடன் விரும்பத் தோன்றி விடும்.. அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்து கிடந்தது. ஒரு கதா பாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர். அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள். இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும். சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான, இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?

இத்தனைக்கும் தன்னுடைய 13வது வயதில் ‘திருவருட்செல்வர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரீவித்யா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல், ரஜினி, விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சுமார் 900க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

‘சட்டம்பிக்காவல்’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகுக்கு அறிமுகமான இவர், மலையாளத்தில் மட்டும் 200 படங்களில் நடித்துள்ளார்.
‘இமயம்’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘புன்னகை மன்னன்’, ‘அபூர்வ சகோதரர்கள்’, ‘காதலுக்கு மரியாதை’, ‘தளபதி’, ‘நம்மவர்’ உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவரின் தந்தை அகடம் கிருஷ்ணமூர்த்தி தாயார், புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி எம்.எல். வசந்தகுமாரி, கணவர், மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் ஜார்ஜ், ஸ்ரீவித்யா கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் அவரைப் புற்று நோய் தாக்கியது. ஆயினும் அவர் இடையிடையே தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடித்து வந்தார். பிறகு அந்தத் தொடரிலிருந்து பாதியிலேயே விலகிக் கொண்டார் நடிகை ஸ்ரீவித்யா. பின்னர் உடல் நலக் குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அங்கு அவர் புற்று நோய்க்காக நீண்ட காலம் மருத்துவ சிகிச்சை (கீமோதெரபி) எடுத்துவந்தார்.

அக். 19 அன்று மாலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.கேரளம் அவரை அரசு மரியாதையுடன் தகனம் செய்தது நினைவு கூறத் தக்கது