எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

எம்.ஜி.ஆரின் ராஜாதேசிங்கு பட கலாட்டா!

  இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர். லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய ரசு கண்ணதாசனின் வசனங்களை படித்த…
Read More
எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

எம்.ஜி.ஆர்-கிட்டே இருந்த ரியல் தாய் பாசம் – சிவகுமார் நினைவூட்டிய நிகழ்ச்சி

டிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து 1965-ம் ஆண்டில் வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகர் சிவக்குமார். அதன்பின்னர், 'கந்தன் கருணை', 'உயர்ந்த மனிதன்' உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, பின்னர் கதாநாயகனாக உயர்ந்து இன்றளவும் . தமிழக திரைத்துறையில் நன் மதிப்புடன் இருப்பவர் சிவக்குமார். சூர்யா, கார்த்திக் என்ற இரண்டு நடிகர்களை வீட்டிலேயே வைத்திருப்பவர். சிறந்த பேச்சாளாரான அவர் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்ட பேச்சு இது: ”உலகத்தின் மிக உயர்ந்த குணம் என்னவென்றால், அன்பு காட்டுவது என்கிறார்கள். பிற மனிதனை நேசிப்பதைவிட உயர்ந்த விஷயம் எதுவும் பண்ண முடியாது என்று சொல்கிறார்கள். அதாவது காசு பணம் கொடுப்பது வேறு. துணி மணிகள் அளிப்பது வேறு. ஒருவரை பார்த்தவுடன் உடனடியாகச் செய்வது அன்பு செலுத்துவது. அதை செய்தவர் எம் ஜி ஆர். எல்லோரையும் நேசித்த மிகப் பெரிய…
Read More
எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்”  – ஒரு சுவையான பின்னணி!

எம்.ஜி.ஆர் நடித்த “மலைக்கள்ளன்” – ஒரு சுவையான பின்னணி!

”மலைக்கள்ளன்”, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். “நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார். இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.…
Read More
’எப்படி இருந்த’ சினிமா  “இப்படி ஆயிடுச்சு!” – 1

’எப்படி இருந்த’ சினிமா “இப்படி ஆயிடுச்சு!” – 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள். பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக…
Read More
ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி + ஷங்கரின் கூட்டணியில் உருவாகும் 2.0 மார்ச வரை ஷூட்டிங்!

ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் 350 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வந்தது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணியை மெருகேற்றும் விதமாக, அப்பணிகளுக்கு மேலும் 50 கோடியை ஒதுக்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம். இதன் மூலம் படத்தின் பொருட்செலவு சுமார் 400 கோடிக்கு ஆகியிருக்கிறது. சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒருபுறம் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தாலும், மறுபுறம் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 3டி தொழில்நுட்பக் கேமிராவில் படமாக்கப்பட்டுவருவதால், இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்திவருகின்றனர். அதாவது, ஒரே காட்சியை இரண்டு கேமிராக்களில் ஒரே நேரத்தில் படமாக்குகின்றனராம், அதன்பின்  இரண்டு கேமிராக்களில் பதிவான காட்சிகளையும் தனித்தனியே கிராஃபிக்ஸ் செய்து காட்சியை உருவாக்கிவருகின்றனர். அதுபோல, ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும்…
Read More