ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்.. இச்சூழலில் நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு ப்ரண்ட்சுக்கு ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுக்கலின்னா தெய்வகுத்தமாயிடுமாமில்லே..

இதோ நம் கட்டிங் கண்ணையாவி சிறப்பு கட்டுரை

கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார்.

இவர் இயக்கிய படையப்பா திரைப்படம் வெளிவந்தது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இன்றும் இந்த படத்தின் வெற்றியை #Padayappa24 என்ற ஹேஷ்டாக் உடன் சமூக வலைதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூலித்த படமாகவும் இப்படம் இருந்தது. படையப்பா திரைப்படம் அப்போதே உலகம் எங்கும் 210 பிரிண்ட்டுகளையும், ஏழு லட்சம் ஆடியோ கேசட்டுகளையும் வெளியிட்டு இருந்தனர்.

சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, போன்ற பலர் நடித்திருந்த இந்தப் படத்தை எழுதி, இயக்கியவர் கே எஸ் ரவிக்குமார். இந்த படத்திற்கு இசையமைத்தவர் ஏ ஆர் ரகுமான்.படையப்பா படத்தில் சிவாஜி சாருக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தார். சிவாஜி சார் ஷாக் ஆகிட்டு ‘இவ்ளே சம்பளம் எனக்கு யாரும் கொடுத்ததில்லையே’ என்றார்

இதில் நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன் இன்றளவும் கொண்டாடப்படுறார் இதில் முதலில் வில்லியாக மீனாதான் நடிக்க இருந்தாராம். ஆனால் மீனா மற்றும் ரஜினி அப்போது பெஸ்ட் ஜோடி என்று ரசிகர்கள் கூறி வந்ததால் ரஜினிக்கு வில்லனாக தான் நடித்தால் தன்னுடைய மார்க்கெட் சரிந்து விடும் என்று கூறி மீனா படையப்பா படத்தில் இருந்து விலகிட்டாராம். அதன்பிறகு நடிகை நக்மாவை நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அப்போது நக்மா வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் அவராலும் படையப்பா திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனையடுத்து தான் ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் பட குழு முடிவு செஞ்சுதாம். ஆனால் படையப்பா வெளியான 1999 ஆம் ஆண்டு ரம்யா கிருஷ்ணன் வேறு நாட்டிற்கு சென்றுவிட்டாராம். அந்த அளவிற்கு ரஜினியை வேறு யாரும் ஆன் ஸ்கிரீனில் மிரட்டியதில்லை என்பதால் , ரசிகர்கள் சில இடங்களில் திரையரங்கின் ஸ்கீரினையே கிழித்துவிட்டார்கள் .. இதனால் ரம்யா கிருஷ்ணன் பயந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றதாக நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார்.

ஹீரோயினை நெகட்டிவ் ரோலில் வைத்து ஒரு கதையை உருவாக்க வேண்டும் என்ற ஐடியாவை நடிகர் ரஜினிகாந்த் தான் சொன்னாராம். கே,எஸ்.ரவிக்குமார் மற்றும் இரண்டு இயக்குநர்களிடமும் இதைப் பற்றி கூறி கதை ரெடி பண்ண சொன்னாராம் ரஜினி. அம்மூவர் சொன்ன கதையில், கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதைதான் ரஜினிக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இப்படத்தில் இடம்பெறும் செம மாஸான பன்ச் வசனங்கள் அனைத்தும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தே எழுதினாராம். உதாரணத்திற்கு “என் வழி தனி வழி”, “போடா அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கான்”, “அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமா கோவப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல” போன்ற பன்ச் வசனங்களை எழுதியது ரஜினிதானாம்.

இந்த படத்தின் வெற்றி குறித்து கே எஸ் ரவிக்குமாரிடம் கேட்டப் போது, ” படையப்பா இந்த அளவிற்கு ஹிட் அடிக்கும் -மின்னு நாங்கள் எதிர்பார்க்க, நான் சாதாரணமாகத்தான் படத்தை டைரக்ட் பண்ணினேன்.

முத்து, வரலாறு, போன்ற படங்களை இயக்கும் போது நான் எப்படி இருப்பேனோ, அதேபோல் தான் படையப்பா படத்தை இயக்கும் போதும் நான் இருந்தேன். ஆனால் இந்த அளவிற்கு படம் ஹிட்டாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் முத்து படத்தை விட படையப்பா திரைப்படம் பெரிய ஹிட்டாகிடுச்சு.

அந்த காலத்திலேயே அந்த படத்தின் பட்ஜெட் 4கோடி தான். சிம்பிள் படம் படையப்பா திரைப்படம் 3 கோடி 60 லட்சத்திற்கு உள்ளேயே படம் முடிந்து விட்டது. மீதி இருக்கும் 40 லட்சத்திற்கு படக்குழுவினருக்கு செயினை பரிசாக அளித்தார் ரஜினிகாந்த். தெலுங்கில் நரசிம்மா திரைப்படம் இதை விட சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சீன்ஸ் அனைத்தும் இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்கவேண்டும் என்று ஸ்க்ரீன் பிளேவில் நாங்கள் பேசிக் கொள்வோம். இந்த படத்திற்கு மட்டுமில்லை, எல்லா படத்திருக்கும் சமமாகத்தான் நாங்கள் உழைப்பை போடுகின்றோம். ஆனால் படையப்பா படத்தை இன்றும் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் ” அப்படீன்னார்

மேலும் படையப்பா படம் வெளியாவதற்கு முன்னதாக எடிட் செய்து வந்த பொழுது 19 ரீல்ஸ் இருந்திருக்கிறது. அதாவது படம் மிகவும் நீண்ட படமாக இருந்திருக்குது. படத்தை பார்த்த ரஜினிகாந்த் காட்சிகள் அனைத்தும் செமையா இருக்குது, அதுனாலே காட்சிகளை நீக்க வேண்டாம் , இரண்டு இடைவேளை விட்டு விடலாம். சமீபத்தில் வெளியான இந்தி படத்தில் கூட இதனை செய்திருக்கிறார்கள் என்றாராம்.

ஆனால் தொடர்ந்து ரவிக்குமார் தயங்கவே, கமல்ஹசனை அழைத்து அட்வைஸ் கேட்டிருக்கிறார் ரஜினி. கமல்ஹாசன் உடனே “ பைத்தியமா நீ!.. தமிழ் படத்திற்கெல்லாம் அது தாங்காதுப்பா.. எனக்கு இயக்குநர் குறித்து நல்லா தெரியும் அதை நீ அவர்கிட்டயே விட்டுடுப்பா ..” -ன்னு அறிவுரை கூறியிருக்கிறார்.

உடனே ரஜினிகாந்த் அதை கே.எஸ்,ரவிக்குமாரிடம் சொல்ல உடனே சில காட்சிகளை நீக்கினாராம் . அந்த காலத்தில் நவீன எடிட்டிங் தொழில்நுட்பம் இருந்திருந்தால் நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் டெலிட்டட் சீன்ஸாக விட்டிருப்பேன் என வருந்துகிறார் ரவிக்குமார். நீக்கப்பட்ட காட்சிகள் அனைத்துமே கதைக்கு தேவைப்பட்டலும் ,அதிக தேவை இல்லாத்தால்தான் நீக்கினாராம். செந்தில் மற்றும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “போட்டுருக்க சட்டை என்னுது “ என்னும் காமெடி போல மற்றொரு காமெடியையும் எடுத்திருந்தார்களாம் அதனை நீக்கிவிட்டாராம். சித்தாரா வயதான பிறகு பொண்ணு கேட்கும் சீன் , நீலாம்பரியிடம் முதன் முறையாக படையப்பா அவமானப்படுத்தப்பட்ட பிறகு ரஜிகாந்த் அதனை நினைத்து தனியாக படுத்துக்கொண்டு வேதனையுறுவது போன்றும் , சௌந்தர்யா அவருக்கு ஆறுதல் சொல்வது போன்ற காட்சிகளை கிரேன் செட்டப்பில் இரவில் கோயிலில் எடுத்தார்களாம் . அதனை நீக்கிவிட்டார்களாம்.மணிவண்ணன் மற்றும் அவரது மகன்கள் செய்யும் அட்டூழியங்களையும் அதனை ரஜினி கண்டுபிடிப்பது போன்ற காட்சிகளையும் பெரிய சீனாக எடுத்தார்களாம் அதுவும் வேண்டாம் என நீக்கினாராம் ரவிகுமார்