10
Aug
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான 'வாரணாசி' படக்குழு - 'ருத்ரா'வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார். இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத - அதிகார தோரணையில் பின்னோக்கி பார்க்கிறார். இந்த இரண்டு புகைப்படங்களும் வாரணாசி- #VARANASI படத்தின் ஆன்மாவை நமக்கு உணர்த்துகின்றன. இது உலகம் முழுவதும் பயணிக்கும்... ஒரு நூற்றாண்டு காலத்தை உள்ளடக்கிய காவியமாகும். இதில் ஒரு மனிதனின் அசாதாரணமான பயணம்…
