மை டியர் டாலி பட  வருமானத்தின் ஒரு பகுதி புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு  வழங்கப்படவுள்ளது!

மை டியர் டாலி பட வருமானத்தின் ஒரு பகுதி புற்றுநோய் குழந்தைகளின் சிகிச்சைக்கு வழங்கப்படவுள்ளது!

வி.ஜே.பப்பு மற்றும் அனுபமா இணைந்து நடித்துள்ள திரைப்படம் "மை டியர் டாலி". அரவிந்த் ராஜ் எழுதி, இயக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ளனர். இந்தப் படத்தில் கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் மற்றும் பலர் நடித்துள்ளனர். காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் மை டியர் டாலி திரைப்படம் உலகளவில் இன்று வெளியானது. இந்தப் படத்தில் இரத்த புற்றுநோய் பாதிப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர் சிவராமகிருஷ்ணா படத்தின் வெளியீட்டை ஒட்டி புது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மை டியர் டாலி திரைப்படத்தின் மொத்த வசூலில் ஒரு பகுதி இரத்த புற்றுநோய் பாதித்து சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு வழங்குவதாக சிவராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிவிப்புக்கு திரைத்துறை கடந்து வரவேற்பும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.…
Read More
‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு !

‘டாக்ஸிக்’ டீசர் வெளியீட்டு தேதி போஸ்டருடன்  அறிவிப்பு !

'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்'  படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். தனித்துவமான போஸ்டர், படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில்  வன்முறையும் இருண்மையும் நிறைந்த உலகத்தை காட்டுகிறது. ரத்தம் கசிந்த பனிப்புயல் போன்ற சூழலில், நடுவில் ராயாவாக யாஷ் நிற்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. முகம் தெளிவாக தெரியாத நிலையில், நேரடியாக பாட்டிலிலிருந்து குடிக்கும் அவர், இரத்தம் தோய்ந்த தரையில்,  கண்களுக்கு எட்டாத வன்முறையின் சிதைவுகளால் சூழப்பட்ட நிலையில், ஆபத்தான ஒரு பிரபஞ்சத்தில் நிற்பதாக அந்த போஸ்டர் காட்டுகிறது. இந்த டீசர் அறிவிப்பு, “டாக்ஸிக்” திரைப்படம் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக தொடர்ந்து இருப்பதற்கான மற்றொரு காரணமாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களை ஒவ்வொரு கட்டமாக வெளியிடும் உத்தியும், திட்டமிட்ட மார்க்கெட்டிங் உத்திகளும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இதுவரை கதையைப் பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே வெளியிடப்பட்டுள்ளதால், படத்தின்…
Read More
‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  பூஜையுடன் தொடங்கியது!

‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது!

கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்ற ‘மரகத நாணயம்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. சிவராத்திரியை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 16, 2026) சென்னையில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்‌ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, 'மரகத…
Read More
இரா.முத்தரசன் நடித்திருக்கும் ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா!

இரா.முத்தரசன் நடித்திருக்கும் ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா!

மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் - இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் - மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் திரு. முத்தரசன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'அரிசி ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் எஸ். ஏ. விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அரிசி' எனும் திரைப்படத்தில் இரா .முத்தரசன், சமுத்திரக்கனி, சுப்பிரமணிய சிவா, ரஷ்யமாயன் உள்ளிட்ட பலர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜான்ஸ் வி ஜெரின் ஒளிப்பதிவு செய்ய கே எஸ் நதிஸ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். விவசாயத்தையும் , விவசாயிகளையும் மையப்படுத்திய உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை…
Read More
“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!

  Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் கடந்த 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இன்றைய இளைஞர்களின் உலகத்தை காதலை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன் விமர்சகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தது. அரங்கம் நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். எடிட்டர் சுரேஷ் பேசியதாவது.., இந்த திரைப்படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி படக்குழுவுக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர் மோகன்ராஜன் பேசியதாவது.., மகேஷ் ஐயாவோட பல படங்களாக இந்தப் பயணமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும், இது நல்ல படம்…
Read More
‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

  'நேச்சுரல் ஸ்டார்' நானி - ஸ்ரீகாந்த் ஓடெலா - சுதாகர் செருகுரி - SLV சினிமாஸ் - கூட்டணியில் தயாராகும் 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. 'தசரா' புகழ் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கிய 'தி பாரடைஸ்' திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக 'தி பாரடைஸ்' உருவாகி வருகிறது. படக் குழுவினர் ஹைதராபாத்தில் படத்தின் பணிகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில்.. தயாரிப்பாளர்கள் நன்மைகள் அதிகம் தரும் வகையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.‌ அந்த வகையில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி நடித்த 'தி பாரடைஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் வெளியீடு -…
Read More
‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியானது !!

‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியானது !!

நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிய தோற்றமும், அவரது திறமையான நடிப்பும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் நடிகர் நிகில் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறார். பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கும் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்‌ஷன் கதையாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் பன்மொழிகளில் வெளியான குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரின் பிரம்மாண்ட காட்சிகளும், நிகிலின் திரை ஆளுமையும் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மிகப்பெரிய அளவில் வரலாற்று படமாக…
Read More
“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது.., நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும் பெருமை. உங்கள் உழைப்பு திரையில் தெளிவாக தெரிகிறது.  மீடியா, ரசிகர்கள் எல்லாரும் கண்டிப்பாக பாராட்டுவார்கள்.…
Read More
‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

‘பெத்தி’ (peddi) படம் ஏப்ரல் 30 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது. வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி…
Read More
மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் ‘அமைதிப்படை’!!

மீண்டும் வெளியாகிறது சத்யராஜ்‍-மணிவண்ணனின் ‘அமைதிப்படை’!!

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும், புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 'கேப்டன் பிரபாகரன்' படத்தை அவரது பிறந்தநாளை முன்னிட்டும் அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்து பெரும் வெற்றி கண்ட ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன், புரட்சி தமிழன் சத்யராஜ்‍-மணிவண்ணன் வெற்றிக் கூட்டணியின் சூப்பர் ஹிட் 'அமைதிப்படை' படத்தை மீண்டும் வெளியிடுகிறார். சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இக்கால அரசியலுக்கும் பொருந்தும் வகையில் 32 ஆண்டுகளுக்கு முன்பே வெளியான 'அமைதிப்படை' திரைப்படத்தை 4கே தொழில்நுட்பத்தில் டால்பி ஒலியுடன் ஸ்பேரோ சினிமாஸ் பேனரில் கார்த்திக் வெங்கடேசன் வெகு விரைவில் வெளியிடவுள்ளார். இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இக்கதை பொருந்தும் என்பதால் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 'அமைதிப்படை' படத்தை கார்த்திக் வெங்கடேசன் பிரம்மாண்டமான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார். இது…
Read More