19
Jan
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' ஏஸ் ' (ACE) எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' ஏஸ்' (ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி. எஸ். அவினாஷ் , திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்த தருணத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் பிறந்த…