மேரி கிறிஸ்துமஸ் திரையில் ஒரு நாவல் !!

மேரி கிறிஸ்துமஸ் திரையில் ஒரு நாவல் !!

  இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி காத்ரினா கைஃப் நடிச்சிருக்குற இந்தி படம். தமிழ் மொழி மாற்றத்தில வெளிவந்திருக்கு.. தமிழுக்காக நிறைய மெனக்கெட்டிருக்காங்க.. பொங்கலுக்கு வெளிவந்திருக்க இந்த படம் விஜய் சேதுபதி ரசிகர்கள் திருப்தி படுத்துமா?? ஸ்ரீராம் ராகவன் இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், ஆனா பாலிவுட்ல படம் பண்றவரு! உலகம் ஃபுல்லா இவர் படங்களுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமிருக்கு. பொதுவா திரைப்பட விழாக்களில் பங்கு பெறக்கூடிய படங்கள் தான் இவர் அதிகமா பண்ணுவாரு. இவரோட படங்கள் டார்க் தீமை வச்சு, நியோ நாயர் பாணில தான் தான் இதுவரை வந்திருக்கு, இவரோட கடைசி படமான அந்தாதுன், இந்தியால கிட்டத்தட்ட அஞ்சு ஆறு மொழிகளுக்கு மேல ரீமேக் செய்யப்பட்டது மிகப்பெரிய ஹிட், அதனால இப்ப விஜய் சேதுபதி நடிப்பில் வந்திருக்கு இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கு !! ஸ்ரீராம் ராகவன் எப்போதும் மெயின் ஸ்க்ரீன் ரசிகர்களுக்கு படம் பண்றவர்…
Read More
கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் ஆச்சரியம் ! ‘மெரி கிறிஸ்மஸ்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி!

கத்ரீனா கைஃப்பை நேரில் பார்த்ததும் எனக்குள் ஆச்சரியம் ! ‘மெரி கிறிஸ்மஸ்’ பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி!

  பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முகராஜன், கவின் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரமேஷ் தௌராணி, சஞ்சய் ரௌத்ரே, ஜெயா தௌராணி, கேவல் கர்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.  இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.  இதை முன்னிட்டு சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், பட தொகுப்பாளர் பூஜா லதா ஸ்ருதி, நடிகை கத்ரீனா கைஃப், நடிகர் சண்முகராஜன், நடிகர்…
Read More
கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

கதாநாயகிகளை முக்கியமாகக் கொண்டு உருவாகி இந்த ஆண்டு வெளியாகவுள்ள படங்கள்!

  2023 ஆம் ஆண்டு, பெண்கள் செயலில் ஈடுபடும் ஆண்டாகும். இந்த முன்னணிப் பெண்கள் சினிமாவில் செயல்பாட்டின் எல்லைகளை மறுவரையறை செய்வது மட்டுமல்லாமல், முன்மாதிரிகளாகவும், ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்து, உலகெங்கிலும் உள்ள பெண்களை ஊக்குவிக்கவும் செய்கிறார்கள். இந்த ஆண்டு, திரையுலகில் புயலைக் கிளப்பிய ஆற்றல்மிக்க மற்றும் திறமையான நடிகைகளின் நட்சத்திர வரிசையுடன் பெரிய திரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், கத்ரீனா கைஃப் மற்றும் ப்ரி லார்சன் ஆகியோர் ஆக்‌ஷன்-பேக் செய்யப்பட்ட காட்சிகள் முதல் சக்திவாய்ந்த நடிப்பு வரை, அவர்களின் நகர்வுகளால் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில், அதிரடி-நிரம்பிய நடிப்பால் வசீகரிக்கிறார்கள். நயன்தாரா நயன்தாரா தென் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய திரைப்படங்களில் தனது தாக்கமான நடிப்பிற்காக அறியப்பட்டவர். நடிகை சமீபத்தில் அட்லீயின் ‘ஜவான்’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார், SRK உடன் இணைந்து ஒரு திடமான குத்துகளை பேக் செய்தார். நடிகை தனது…
Read More
ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் கதாநாயகி தற்போது விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது கைவசம் பல படங்கள் வைத்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக கத்ரீனா கைப் உடன் அவர் நடித்து வரும் மெரி கிறிஸ்துமஸ் படம் மீது பெரிய எதிர்பார்த்து இருந்து வருகிறது. தனது திரைப்பயணத்தில் இது அவருக்கு ஒரு முக்கிய படமாக இருக்கும். ஸ்ரீராம் ராகவன் இயக்கி வரும் அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு செல்லும் இளைஞனாக நடித்து இருக்கிறார். தனது ஏதார்த்தமான நடிப்பினால் இயக்குனரை வெகுவாக கவர்ந்துள்ளாரம். மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா ஆப்தேவும் ஒரு சின்ன ரோலில் நடித்து இருக்கிறார். அது சின்ன கெஸ்ட் ரோல் மட்டும் தான் என கூறப்படுகிறது. ஏற்கனவே ராதிகா ஆப்தே தமிழில் ரஜினி ஜோடியாக கபாலி படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
Read More