அருள்தேவ் மியூசிக்’கில் உருவான ’மிருகா’ சிங்கிள் ரிலீஸாகப் போகுது!

அருள் தேவ் தாத்தா சந்தானம் ஆர்மோனியம் பிளேயர். அருள்தேவ் அப்பா அக்கார்டின் சுவாமிநாதன். இவர் ஒய்ஃப்பின் தாத்தா தன்ராஜ் மாஸ்டர். அவர்கிட்டதான் ஏ.ஆர்.ரஹ்மான்ல இருந்து விஜய் வரை பல பிரபலங்கள் இசை கத்துக்கிட்டாங்க.

இந்த அருள்தேவ் குறித்து சுருக்கமான அறிமுகம் வேண்டுமென்றால் பாகுபலி-2, நடிகையர் திலகம் போன்ற ஆல் இந்தியா ஹிட்ப் படங்களின் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை மிரட்டியவை, மனதை மயக்கியவை. அத்தகைய இசையில் இந்த சென்னைக் காரரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக்கும்.

தமிழில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் ஹீரோவாக நடித்த ‘போட்டா போட்டி’ மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இவர். ‘‘பூர்வீகம் மதுரை..அப்புறம் ‘பூவரசம் பீப்பீ’, ‘கத்துக்குட்டி’ ‘மோகினி’ படங்கள்ல இவரின் இசை கவனிக்கப்பட்டது. தெலுங்கில் நேஷனல் அவார்டு வாங்கின ‘சதமானம் பவதி’யில ஒர்க் பண்ணியிருக்கிறார்.

இப்படியாப்பட்டவர் இசையில் உருவாக்கி இருக்கும் படம்தான் ‘மிருகா’.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா பாதிப்பால் 144 தடை உத்தரவு போடும் முன்பே முடிந்துவிட்டது. தற்போது, அனைத்து பணிகளும் முடிந்து வெளியாக தயாராகவுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு வாழ்க்கை திரும்பியதும், திரையரங்குகள் திறக்கப்படும். அப்போது வெளியாகும் முதல் படமாக ‘மிருகா’ இருக்குமாம். இப்படத்தை J.பார்த்திபன் இயக்க, அருள் தேவ் இசையமைக்கிறார். B.வினோத் ஜெயின் தயாரிக்கிறார். ராய் லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம் பெறும் ஐ எம் எ பேட் பேய் பாடலின் சிங்கிள் ட்ராக் நாளை மறுநாள் தனுஷ் ரிலீஸ் செய்கிறாராம்..

வாழ்த்துகள் அருள்தேவ்