24
Dec
கேஜிஎஃப் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நீல் பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் படம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது. நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் வன்முறை மிகுந்த உலகத்திற்குள், அரச நாற்காலிக்கு நடக்கும் போராட்டன் தான் கதை. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வலுவான ஆக்சன் விருந்தாக அமைந்துள்ளது சலார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரைக் கொல்வதற்கு ஒரு கும்பல் அவரைப் பின்தொடர்கிறது. அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது. ஆனால் அந்த தேவா அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது தாயுடன் (ஈஸ்வரி ராவ்) அமைதியாக வசித்து வருகிறார். அதைக் கண்டும் காணாதது போலச் சென்று விடுவார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எல்லா…