14
Jan
தி ராஜா சாப் இயக்கம்: மாருதி நடிகர்கள்: பிரபாஸ், சஞ்சய் தத், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் இசை: தமன் தயாரிப்பு: People Media Factory பாகுபலி மூலம் பான்-இந்திய சினிமாவின் உச்சத்தில் நின்ற பிரபாஸ், அதன்பிறகு ஒவ்வொரு படத்திலும் முற்றிலும் வித்யாசமான கதை தேர்வுகளைச் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த வரிசையில், “தி ராஜா சாப்” அவருடைய திரைப் பயணத்தில் இன்னொரு புதுமையான முயற்சி. ஆனால் அவரின் ஆவி கலந்த ஹாரர் காமெடி ரசிகர்களைக் கவர்ந்ததா? கதை மிக எளிமையானது தான் அல்சைமர் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டி, மர்மமான முறையில் காணாமல் போன தாத்தா, நர்சாபூர் காட்டுக்குள் அமைந்துள்ள அச்சம் நிறைந்த பழமையான கோட்டை—இந்த மூன்று கூறுகளையும் மையமாக வைத்து, ஹாரர் + காமெடி ஜானரில் கதை நகர்கிறது. பயமுறுத்தும் தருணங்களும், அதே நேரத்தில் சிரிப்பை வரவழைக்கும் காமெடி காட்சிகளும் சரியான அளவில் கலந்திருக்கின்றன.…
