13
Nov
ரெய்டு விமர்சனம் !! இயக்கம் - கார்த்தி விக்ரம் பிரபு, ஶ்ரீதிவ்யா சமீபத்தில் இறுகப்பற்று மூலம் பாரட்டுக்களை குவித்த பிறகு வெளியாகியிருக்கும் விக்ரம் பிரபு படம். ரௌடி போலீஸ் ஆடுபுலி ஆட்டம் தான் கதை. கன்னடத்தில் ஹிட்டடித்த டகரு படத்தை கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து ரெய்டாக ஆக்கியிருக்கிறார்கள். ஆனால் சோதனை எலிகளாக ரசிகர்கள் மாறியது தான் சோகம். கோயம்பேடு மார்க்கெட்டை ஆண்டுகொண்டிருக்கக்கூடிய இரண்டு ரௌடிகள் சௌந்தர்ராஜன் & ரிஷி. இவர்கள் இருவரும் கதையின் நாயகி ஸ்ரீ வித்யாவுக்கு தொடர்ந்து பிரச்சனை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனை அறிந்த கதையின் நாயகன் விக்ரம் பிரபு அந்த இருவரையும் எச்சரிக்கிறார். திடீரென்று ஒருநாள் அந்த இரண்டு பேரும் மர்மமான முறையில் இறந்துவிடுகின்றனர். அதே சமயம் காவல் அதிகாரியான விக்ரம் பிரபு- வும் மர்மமான நபர்களால் தாக்கப்பட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுகிறார், அந்த இரண்டுபேரின் மர்மமான…