தீபாவளிக்கு வெளியாகும் சூர்யா படம்

சூரரை போற்று திரைப்படத்திற்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் ‘ஜெய் பீம்’. இந்த திரைப்படத்தை தா.செ.ஞானவேல் இயக்கி வருகிறார்.  சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது .இந்தப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. தீபாவளிக்கு அமேஷான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள ஜெய்பீம் திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் இப்போது வெளியாகி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும்படியான, வன்முறை  காட்சிகள் படத்தில் இருக்கிறது. இது மிகப்பெரிய கவனத்தை ஈர்க்கும் படமாக இருக்கும் என படக்குழு நம்பிவருகீறார்கள்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘ஜெய் பீம்’ படத்தில் சூர்யா ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.