ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

 

ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடிப்பில், கிளாடியேட்டர் பட இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில். பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடியான பயோகிராஃபி படம் தான் இது.

மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் போராட்ட பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் காதலித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் விலாவாரியாக சொல்கிறது.

நெப்போலியன் வராலாற்றின் நாயகன் இன்று வரையிலும் அவரின் வரலாற்றை சுற்றி ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கிறது.

நெப்போலியன் பூமியில் செய்த விசயங்களை அத்தனை எளிதில் திரையில் கொண்டு வர முடியாது. கற்பனைக்கெட்டாத பல போர்களை நடத்தியவன். ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தவன். ரஷ்யாவை மாஸ்கோவை விட்டே ஓட வைத்தவன்

அவனின் வாழ்க்கையை திரைகொள்ள பிரமாண்டத்துடன் அழகான கவிதை போல் சொல்கிறது இப்படம்

பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால் பிரிட்டிஷ் துருப்புக்களை விரட்டியடித்து, அதன் மூலம் 1793 இல் தூலொன் முற்றுகையை சமாளிப்பதில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. நெப்போலியனின் தொடர் வெற்றிகளால், 1795 இல், அரசியல் அதிகாரமட்டத்தில் அவரது செல்வாக்கு உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கிடையில், அவர் உயர்குடியைச் சேர்ந்த விதவையான ஜோசஃபின் (வனேசா கிர்பி) உடன் அறிமுகம் ஏற்பட்டு, அவரைத் திருமணம் செய்து கொள்கிறார்.

பிரமிடுகளின் போர், ஆஸ்டர்லிட்ஸ் போர், போரோடினோ போர் முதலிய போர்களின் வாயிலாகத் தனது அதிகாரத்தையும் சக்தியையும் பலப்படுத்துகிறார். 1815 ஆம் ஆண்டு நடந்த வாட்டர்லூ போரில், வெலிங்டன் பிரபுவாலும், மார்ஷல் ப்ளூச்சராலும் அவர் தோற்கடிக்கப்படுகிறார். செயின்ட் ஹெலினா தீவுக்கு நாடு கடத்தப்படும் நெப்போலியனை, 1821 இல் மரணம் தழுவியது.

நெப்போலியனின் காதலும் அதிகாரத்தின் மீதான துரத்துலுமான இந்த மொத்த வாழ்க்கை திரையில் கொண்டுவந்து அந்த காலகட்டத்திற்கே நம்மை கூட்டிச்சென்றிருக்கிறார்கள்.

உங்களுக்கு வரலாற்று காவியங்கள் பிடிக்குமென்றால் கண்டிப்பாக மிஸ் செய்யாதீர்கள்