பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

ஹரீஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், வந்திருக்கும் படம் பார்க்கிங்.

ஒரு பார்க்கிங் பிரச்சனை இரண்டு எளிய மனிதர்களின் ஈகோவை தூண்டி விட்டால் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்லும் என்பது தான் படம்.

பொதுவாக நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள் மனிதனின் ஈகோ இதுவெல்லாம் மலையாள சினிமா போல் இங்கு வருவதில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், வந்திருக்கிறது பார்க்கிங்.

கல்யாண தம்பதியாக மனைவி கர்ப்பமாக இருக்க புது வீடுக்கு குடியேறுகிறார்கள் ஹரீஷ் கல்யாண் இந்துஜா தம்பதி. அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் குடும்பம் இருக்கிறது. இருவரும் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் ஹரீஷ் கல்யாண் கார் வாங்க, அதைப் பார்க்கிங் செய்வதில் ஹரீஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனையாக வெடிக்கிறது. அந்தப் பிரச்சனையால் இருவரும் கொலைவெறி ஆகிறார்கள் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்கிறது என்பதே படம்.

இரு மனிதர்களுக்கு இடையிலான ஈகோ எமோஷனல், சமூக கருத்து, கேட் அண்ட் மவுஸ் கேம் என படத்தின் ஒவ்வொரு விநாடியையும் பரபரப்பாக காட்டி அசத்தி விட்டார்கள்.

எம் எஸ் பாஸ்கர் மீண்டுமொருமுறை தன்னை நடிகனாக நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கிறார். லஞ்சம் வாங்கியதற்கு மாட்டுவோமோ என நினைக்கும் காட்சி, இறுதிக் காட்சிகளில் எல்லாம் மிரட்டி விட்டார்.

ஹரீஷ் கல்யாணுக்கு கனமான பாத்திரம் ஆனால் எம் எஸ் பாஸ்கருக்கு ஈடு கொடுத்த விதத்தில் நடிகனாக அசத்திவிட்டார்.

Harish Kalyan starrer 'Parking' postponed | Tamil Movie News - Times of  India

கர்பவதியாக இந்துஜா எளிதான பாத்திரம் அல்ல ஆனால் அதை அழகாக செய்து மனதில் இடம் பிடித்திருக்கிறார். எம் எஸ் பாஸ்கர் மனைவி மகள், அவர்கள் வீட்டை சுற்றி வசிப்பவர்கள் என ஒவ்வொருவருமே தங்கள் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சாம் சி எஸ் இசை ஒவ்வொரு காட்சியையும் ஒரு திரில்லர் பட ரேஞ்சுக்கு எடுத்து செல்கிறது. ஜிஜு கேமரா நம் வாழ்க்கையை படம் பிடித்த மாதிரி சினிமாவை சினிமாவாக இல்லாமல் காட்டுகிறது.

முதல் படத்திலியே தான் தரமான இயக்குநர் என அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஒரு நல்ல படம் பார்த்ததிருப்தி வருகிறது.
கண்டிப்பாக பார்த்து ரசிக்கலாம்.