18
Dec
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்வில், நடிகை இந்துஜா, “’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள். பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி” இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய்…