“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்

“லப்பர் பந்து வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம்” ; ஹரிஷ் கல்யாண்

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய வேடங்களில் பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார். கிராமத்து கிரிக்கெட்டை பின்னணியாக கொண்டு அதன் ஊடாக அழகான ஒரு காதல் கதையை இதில் சொல்லி இருந்தார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இந்த இரண்டும் சேர்ந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்று இது ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட படம் தொடர்பான அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நேற்று மாலை சென்னை கிரீன் பார்க்…
Read More
’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநருக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநருக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்வில், நடிகை இந்துஜா, “’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள். பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி” இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய்…
Read More
பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

ஹரீஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், வந்திருக்கும் படம் பார்க்கிங். ஒரு பார்க்கிங் பிரச்சனை இரண்டு எளிய மனிதர்களின் ஈகோவை தூண்டி விட்டால் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்லும் என்பது தான் படம். பொதுவாக நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள் மனிதனின் ஈகோ இதுவெல்லாம் மலையாள சினிமா போல் இங்கு வருவதில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், வந்திருக்கிறது பார்க்கிங். கல்யாண தம்பதியாக மனைவி கர்ப்பமாக இருக்க புது வீடுக்கு குடியேறுகிறார்கள் ஹரீஷ் கல்யாண் இந்துஜா தம்பதி. அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் குடும்பம் இருக்கிறது. இருவரும் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் ஹரீஷ் கல்யாண் கார் வாங்க, அதைப் பார்க்கிங் செய்வதில் ஹரீஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனையாக வெடிக்கிறது. அந்தப் பிரச்சனையால்…
Read More
படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”. நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற…
Read More
ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !

ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ் !

  நடிகர் ஹரிஷ் கல்யாண் கமர்ஷியல் மற்றும் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தினை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி இருக்க படத்தினை பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான் ‘பிளாக்பஸ்டர் இயக்குநரான’ லோகேஷ் கனகராஜ் படம் வெற்றிப் பெற தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ’’பார்க்கிங்’ படம் பற்றி நிறைய நேர்மறையான விஷயங்களை கேள்விப்படுகிறேன். மேலும், படத்தின் ஒன்லைனும் சுவாரஸ்யமாக உள்ளது. சினிஷ், சுதன் சுந்தரம்,…
Read More
தோனி தயாரித்த முதல் படம் வெற்றியா ? தோல்வியா ?

தோனி தயாரித்த முதல் படம் வெற்றியா ? தோல்வியா ?

  இயக்கம் - ரமேஷ் தமிழ்மணி நடிப்பு - ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா, ஆர் ஜே விஜய்.   காதலுனுக்காக வருங்கால மாமியாருடன் பழக ஒரு டிரிப் போகிறாள் காதலி. மாமியாரும் மருமகளும் போகும் டிரிப் வெற்றி பெற்றதா இல்லையா என்பது தான் இந்தப்படம். கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் வந்துள்ள முதல் படம் என்பது சிறப்பு. எல்லாம் ஓகே படம் எப்படி? கதை ஹரீஷ் இவானா இருவரும் காதலர்கள் இருவர் கல்யாணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். ஹரீஷின் அம்மாவுடன் வாழ வேண்டுமா என தயங்குகிறார் இவானா, கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார். ஹரீஷை மறக்க முடியாததால் நதியாவுடன் குடும்பமாக ஒரு டிரிப் போய் பழகலாம் என ஐடியா தருகிறார் இந்த விபரீத ஐடியா ஒர்க் அவுட் ஆனதா என்பதே படம். படத்தின் ப்ளஸ் உலகம் முழுக்க இருக்கும் மாமியார் மருமகள் பிரச்சனையை தொட்டது ப்ளஸ். ரசிகர்கள் எளிதாக படத்தோடு ஒன்றி விடுகிறார்கள். அட…
Read More
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தயாரிக்கும் LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா!

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தயாரிக்கும் LGM படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா!

  முதன்மை கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் LGM (LET”S GET MARRIED) திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திங்கள்கிழமை அன்று கோலாகலத்துடன் ஆரவாரமாக நடைபெற்றது. தல தோனி அவர்கள், தன் மனைவி சாக்ஷி தோனியுடன் சேர்ந்து தயாரித்திருக்கும் LGM திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலரை திரை பிரபலங்கள், ஊடக, பத்திரிக்கை, இணைய நிருபர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். LGM திரைப்படம் காமெடிக் காட்சிகள் நிறைந்த குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நாயகன் நாயகியாக ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்க, பிற முக்கிய கதாபாத்திரத்தில் நதியா, யோகி பாபு மற்றும் ”மிர்ச்சி” விஜய் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் தமிழ்மணி…
Read More
ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

ரசிகர்களிடையே மாபெரும் வரவெற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் ‘எல் ஜி எம்’ பட டீசர்

  தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பேசுகையில், '' நகைச்சுவையையும், குடும்பத்தையும் ஒன்றாக இணைத்து குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக 'எல் ஜி எம்' தயாராகி…
Read More
தோனியின் முதல் தமிழ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

தோனியின் முதல் தமிழ் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது

  தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. தோனி மனைவி சாக்‌ஷியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் முதல் படம் L.G.M. இது, முற்றிலும் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. எல்.ஜி.எம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது,இந்த செகண்ட் லுக் நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. செகண்ட் லுக் போஸ்டரில் ஹரிஷ் கல்யாண் ஒரு பேருந்தின் நடுவில் அமர்ந்திருக்க பிரதான பாத்திரங்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருப்பதைக் காண முடிகிறது. இப்படம் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனியின் தோனி என்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதாலேயே இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இதில் ஹரிஷ் கல்யாண்,…
Read More
பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் “லப்பர் பந்து” என்ற புதிய படத்தின் பூஜை

பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்க்ஷ்மன் குமார் தயாரிப்பில் "லப்பர் பந்து" என்ற புதிய படத்தின் பூஜை மார்ச்-3 நடைபெற்றது. இதில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எஃப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார். லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ரன் பேபி ரன் படத்தில் பணியாற்றிய படத்தொகுப்பாளர் G.மதன் எடிட்டிங்கை மேற்கொள்ள, ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . தயாரிப்பு மேற்பார்வையை பால்பாண்டி கவனிக்க, நிர்வாகத் தயாரிப்பு பணியை மேற்கொள்கிறார் ஷ்ரவந்தி சாய்நாத். இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது.
Read More