’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநருக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!

’பார்க்கிங்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இயக்குநருக்கு தங்க வளையம் அணிவித்து மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஹரிஷ் கல்யாண்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் சக்சஸ் மீட் நடந்தது. இந்த நிகழ்வில், நடிகை இந்துஜா, “’பார்க்கிங்’ படம் வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் நுழைந்திருக்கிறது. இதற்கு முதலில் நான் மீடியாவுக்கு நன்றி சொல்கிறேன். நீங்கள்தான் பெரிய ஓப்பனிங் கொடுத்தீர்கள். பார்வையாளர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. படம் பண்ணும்போது நல்ல படம் செய்கிறோம் என்ற நம்பிக்கை இருந்தது. நீங்கள் கொடுத்த அன்பு இன்னும் நல்ல படங்கள் அடுத்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் கொடுத்திருக்கிறது. இயக்குநர் ராமுக்கும் படக்குழுவுக்கும் நன்றி. மழை என்பதையும் தாண்டி மக்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். நன்றி” இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன், “மீடியா கொடுத்த பாசிடிவ் ரிவியூவால்தான் மக்கள் நிறைய பேரிடம் இந்தப் படம் போய்…
Read More
பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

பார்க்கிங் திரைப்பட விமர்சனம் !!

ஹரீஷ் கல்யாண் எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் அறிமுக இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில், வந்திருக்கும் படம் பார்க்கிங். ஒரு பார்க்கிங் பிரச்சனை இரண்டு எளிய மனிதர்களின் ஈகோவை தூண்டி விட்டால் அந்த பிரச்சனை எந்த எல்லை வரை செல்லும் என்பது தான் படம். பொதுவாக நாம் தினசரி வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் பிரச்சனைகள் மனிதனின் ஈகோ இதுவெல்லாம் மலையாள சினிமா போல் இங்கு வருவதில்லை என்ற ஏக்கம் இருந்து வருகிறது. அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், வந்திருக்கிறது பார்க்கிங். கல்யாண தம்பதியாக மனைவி கர்ப்பமாக இருக்க புது வீடுக்கு குடியேறுகிறார்கள் ஹரீஷ் கல்யாண் இந்துஜா தம்பதி. அந்த வீட்டில் கீழ் போர்ஷனில் ஏற்கனவே எம் எஸ் பாஸ்கர் குடும்பம் இருக்கிறது. இருவரும் நன்றாகவே பழகுகிறார்கள். ஆனால் ஹரீஷ் கல்யாண் கார் வாங்க, அதைப் பார்க்கிங் செய்வதில் ஹரீஷ் கல்யாணுக்கும் எம் எஸ் பாஸ்கருக்கும் இடையில் பிரச்சனையாக வெடிக்கிறது. அந்தப் பிரச்சனையால்…
Read More
படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

  ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்த நிகழ்வில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”. நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற…
Read More
உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’ – பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சார்லி பேச்சு

உலக அரங்கில் முதல் தமிழ்ச் சினிமா ‘எறும்பு’ – பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் சார்லி பேச்சு

  தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகர்களான சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், குழந்தை நட்சத்திரங்களான மாஸ்டர் சக்தி ரித்விக் மற்றும் மோனிகா ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘எறும்பு’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இயக்குநர் சுரேஷ் குணசேகரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘எறும்பு’. இதில் சார்லி, எம். எஸ். பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. எஸ். காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். கிராமிய பின்னணியில் எளிய மக்களின் வாழ்வியலை முன்னிறுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா…
Read More