29
Sep
இயக்கம் - ஐ அஹமத் நடிகர் - ஜெயம் ரவி, நயன் தாரா இசை - யுவன் சங்கர் ராஜா சைக்கோ கில்லர் படங்கள் அதிகம் இங்கே வருவதில்லை, அதற்கான தேவையோ, அல்லது அப்படியான சூழ்நிலையோ இங்கு இல்லை. ஆனாலும் இங்கே மிகச்சிறந்த சைக்கோ கில்லர் படங்கள் வந்திருக்கின்றன. சமீபத்திய போர்தொழில் நல்ல உதாரணம். அந்த வகையில் இறைவனும் வந்திருக்க வேண்டும்.. ஆனால்.. பொதுவாக சைக்கோ கில்லர் படங்களில் வரிசையாக கொலை நடக்கும், அதிலுள்ள பேட்டர்னை துழாவி போலீஸ் அதைக் கண்டுபிடிக்கும். ஆனால் இந்தப்படம் முதலிலிருந்தே அந்த வகையில் கொஞ்சம் கூட வரவில்லை. கதை எளிதுதான் யாருக்கும் தலை வணங்காத போலீஸ் அதிகாரி, அவனை டார்கெட் செய்யும் ஒரு சைக்கோ கொலையாளி இருவரில் யார் வெல்வார்? ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி தன் நண்பன் இறப்புக்குப்பின் அவன் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேலையை விடுகிறான். அவன் பிடித்த கொலையாளி சிறையிலிருந்து தப்பி…