‘மனுசனா நீ’ படத்தை நெட்டில் வலையேற்றிட்டாங்க! – இயக்குநர் அப்செட்!

கஸாலி இயக்கத்தில் ஹெச்-3 சினிமாஸ் தயாரிப்பில் கடந்த  வெளியாகியுள்ள ‘மனுசனா நீ’ திரைப்படம் டாக்டர்களை கேவலமாக சித்தரித்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில்  தன் படத்தை திருட்டு தனமாகச் சுட்டு நெட்டில் போட்டு விட்டார்கள் என்று ஆவேசப்படுகிறார்..

இது குறித்து கஸாலி வெளியிட்ட ஒரு ஸ்டேட்மெண்டில், “  எனது படம் ‘மனுசனா நீ’ கடந்த வாரம் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது.  என் படம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காக வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிட உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் வெளியிட்டேன்ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வலையேற்றி விட்டனர்.

ஃபாரன்சிக் வாட்டர்மார்க் கொண்டு எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்ற விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும். கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.
இந்த திருட்டு தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் ஆண்டிற்கு 500  முதல் 600 கோடி வரை தமிழ் சினிமாவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இந்த எங்கள் நடவடிக்கைக்கு ஊடக நண்பர்கள் ஒத்துழைத்து செய்தியை அனைத்து மட்டங்களுக்கும் கொண்டு சென்று நீதி கிடைக்க உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எக்ஸ்ட்ரா நியூஸ்:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் கடத்தப்படுகின்றனர். இதுகுறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, நாயகன் ஆதர்ஷும், நாயகி அனு கிருஷ்ணாவும் காதலிக்கிறார்கள். ஆதர்ஷின் அப்பா நடத்தி வரும் ரைஸ் மில் நிலத்தை அந்த ஊர் ரவுடியான சுப்பு பஞ்சு கைப்பற்ற நினைக்கிறார்.

அந்த இடத்தை அடைவதற்காக பல்வேறு சூழ்ச்சிகளையும் செய்கிறார். தனத அப்பாவுக்கு தொல்லை கொடுக்கும் சுப்பு பஞ்சுவை அடிக்க நினைக்கும் ஆதர்ஷை, சுப்பு பஞ்சுவின் ஆட்கள் அடித்து விடுகின்றனர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

அங்கு, எழுந்து நடக்கவே முடியாத நிலையில் இருக்கும் ஆதர்ஷின் உடலில் அந்த மருத்துவமனையின் டீனான கஸாலி ஒரு மருந்தை செலுத்தி அனுப்புகிறார். அந்த மருந்து செய்யும் வேலையால் ஆதர்ஷ் திடீரென சக்தி வாய்ந்தவனாக மாறி, சுப்பு பஞ்சு மற்றும் அவனது ஆட்களை அடித்து நொறுக்குகிறார்.

சில நாட்களில் அவர் முகத்தில் ஏதோ மாற்றம் வர, அதற்கு காரணம் கஸாலி செலுத்திய மருந்துதான் என்பதை போலீஸார் கண்டுபிடிக்கின்றனர். முடிவில் கஸாலி ஏன் அந்த மருந்தை ஆதர்ஷின் உடலில் செலுத்தினார்? அதில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? இளைஞர்கள் காணாமல் போவதன் காரணம் என்ன? ஆதர்ஷ் தனது காதலியுடன் சேர்ந்தாரா? என்பதே மனுசனா நீ  படத்தின் கதை.