‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது! படத்தில் விக்ரம் பெயரையும் அறிவித்துள்ளனர்!

 

இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தின் கதையை நடிகர் சூரியாவிற்கு தான் கூறினார், ஆனால் அப்போது அவர் அதை மறுத்துவிட்டார், அதன் பிறகுதான் நடிகர் விக்ரம் இந்தப்படத்தில் ஒப்பந்தமானார், இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக பெரிதாக கவர்ந்தது. ஆனால் அதற்கு பிறகு  இப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது.

இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவிச்சிருந்தார்.

இந்த நிலையில் ’ஹிஸ் நேம் இஸ் ஜான்’ என்று தொடங்கும் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது.