‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

 ‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு

  இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப்பட விநியோக நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸுடன் இணைந்து, இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் 'தங்கலான்' படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌ படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட 'தங்கலான்' திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர். இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை... பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், '' தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை…
Read More
‘சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர “சூரன்”!

‘சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர “சூரன்”!

'சியான்' விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர "சூரன்" என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள். இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர "சூரன்" எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார். சியான் விக்ரம்…
Read More
‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது! படத்தில் விக்ரம் பெயரையும் அறிவித்துள்ளனர்!

‘துருவ நட்சத்திரம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது! படத்தில் விக்ரம் பெயரையும் அறிவித்துள்ளனர்!

  இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்தின் கதையை நடிகர் சூரியாவிற்கு தான் கூறினார், ஆனால் அப்போது அவர் அதை மறுத்துவிட்டார், அதன் பிறகுதான் நடிகர் விக்ரம் இந்தப்படத்தில் ஒப்பந்தமானார், இந்தப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படத்தின் டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘ஒரு மனம்’ பாடல் வெளியாகி ரசிகர்களைக பெரிதாக கவர்ந்தது. ஆனால் அதற்கு பிறகு  இப்படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தெரியாமல் இருந்தது. இதனிடையே, கடந்த பிப்ரவரி மாதம் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்ட பதிவில், “துருவ நட்சத்திரம் படத்துக்கான பின்னணி இசைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டால்பி 9.1.4 தரத்தில் விரைவில் திரையரங்கில் சந்திக்கலாம்” எனத் தெரிவிச்சிருந்தார். இந்த நிலையில் ’ஹிஸ் நேம் இஸ்…
Read More
மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

மீண்டும் தொடங்கியது தங்கலான் படப்பிடிப்பு! அடையாளம் தெரியாமல் மறிப்போன விக்ரம்!

விக்ரம் நடிப்பில் கோலார் தங்க வயலில் தொடங்கப்பட்ட தங்கலான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள evp ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்த தங்கலான் படத்திற்காக தனது உடல் எடையை குறைத்துள்ளார் நடிகர் சியான் விக்ரம். இப்படம் கேஜிஎப் பட பாணியில் தங்கம் எடுக்கும் தொழிலாளர்கள் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையில் நடிகர் விக்ரமின் காட்சிகள் எடுக்கப்பட்டபோது, அவர் கீழே விழுந்ததில் பலத்த காயங்கள் ஏற்பட்டதோடு, விலா எலும்பும் முறிந்தது. இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் தற்போது உடல் நலம் தேறியுள்ள…
Read More
வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

வீட்டில் பணியாற்றும் ஊழியரின் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்ட சீயான் விக்ரம்

** சீயான் விக்ரம் வீட்டில் நாற்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றி வரும் பணிப்பெண் மேரியின் இல்லத் திருமணத்தில், சீயான் விக்ரம் கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்தினார். ரசிகர்களின் அன்பிற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்கும் நட்சத்திரங்களில் முன்னிலையில் இருப்பவர் சீயான் விக்ரம். ரசிகர்களையே குடும்ப உறவாக கருதும் சீயான் விக்ரம், அவருடன் பணியாற்றும் சக ஊழியர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப வைபங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். இந்நிலையில் சீயான் விக்ரமின் வீட்டில் பல ஆண்டுகளாக பணியாற்றி மறைந்தவர் ஒளிமாறன். அவரது மனைவியான மேரி என்பவரும் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது வீட்டில் பணியாற்றி வருகிறார். இவர்களது வாரிசான தீபக் என்பவருக்கும், மணமகள் வர்ஷினி என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திருப்போரூர் கந்தசாமி ஆலயத்தில் நடைபெற்ற தீபக் =வர்ஷினியின் திருமணத்தில் சீயான் விக்ரம் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார். இதன் போது சீயான் விக்ரமின் ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடனிருந்து…
Read More
சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

சியானின் கோப்ரா எப்படி இருக்கு?

கோப்ரா இயக்கம் - அஜய் ஞானமுத்து நடிகர்கள் - விக்ரம் , ஶ்ரீனிதி ஶ்ரீஷெட்டி, மிருணாளினி, இர்ஃபான் பதான். சர்வதேசமாக கூலிக்கொலையாளியாக செயல் படும் மேத் ஜீனியஸ் அவனை தேடும் போலீஸுக்கு ஒருவன் துப்பு கொடுக்கிறான். நிஜ வாழ்வில் அநாதை இல்ல வாத்தியாராக இருக்கும் நாயகனின் அடையாளம் கல்யாண நாளுக்கு முதல் நாள் உடைந்து விட, உடைத்தது யார் என நாயகன் தேட ஆரம்பிக்கிறான் அவன் கண்டுபிடித்தானா ? இதற்கிடையில் போலீஸ் அவனை பிடித்ததா ? வில்லன் இவர்களை பிடித்தானா என்பதே கதை. ஆளவந்தான், வில்லன் என இரு படங்களில் வந்த கதையை கொஞ்சம் மசாலா தூவி பிரமாண்டம் சேர்த்து சமைத்திருக்கிறார்கள். ஆனால் படத்தின் நீளமும் குழப்பமான திரைக்கதையும் படத்திம் பெரு மைனஸாக அமைந்திருக்கிறது. படத்தின் பிரமாண்டம் மலைக்க வைக்கிறது ஆனால் இது தேவையா என யோசித்திருந்தால் பல காட்சிகள் வெட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் காட்டும் பிரமாண்டமான கொலை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில்…
Read More
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  'சீயான் 61' பட தொடக்க விழா சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர்…
Read More