“காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் ரிஷப் ஷெட்டியின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் “காந்தாரா”. இதில் கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது. இது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரூ.16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், ரூ.400 கோடி மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து அதன் 2ம் பாகம் வெளியாகும் என தகவல் கூறப்பட்டது. இந்நிலையில் காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளை ரிஷப் ஷெட்டி விரைவில் முடிக்க உள்ளதாகவும் மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

కాంతార ప్రీక్వెల్ పై బిగ్ అప్డేట్ - Telugu70MM.com

பான் இந்தியா முறையில் உருவாகும் “காந்தாரா 2” படம் 2024ம் ஆண்டு மே மாதத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. இப்படம் மழைக்காலத்தில் நடக்கும் கதை என்பதால் படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்குவதாக  முடிவெடுத்துள்ளனர்.

மேலும், இது இயக்குனர் ரிஷப் ஷெட்டி சொன்னது போல் “காந்தாரா” படத்தின் முன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது. பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.