கடமான் பாறை படத்தில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா

நடிகர் மன்சூரலிகான்  தனது ராஜ் கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் ‘கடமான் பாறை’.

இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக அனு ராகவி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல்கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல்ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல்சுரேஷ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  மகேஷ்.T, இசை  – ரவிவர்மா, பாடல்கள்  –  விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான், கலை  –  ஜெயகுமார், நடனம் –  டாக்டர் சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்துரு, சிவா,. சண்டை பயிற்சி – ராக்கி ராஜேஷ், தயாரிப்பு நிர்வாகம் – J.அன்வர், ஒருங்கிணைப்பு – ஜே,ஜெயகுமார், ஆக்கம், இயக்கம்  – மன்சூரலிகான்.

இந்த படத்தில் மன்சூரலிகானின் ஜோடியாக ருக்க்ஷா  என்ற கேரள பெண் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நடித்திருக்கிறார்.

அது பற்றி இயக்குநர் மன்சூரலிகான் பேசும்போது, “இந்தப் படத்தில் ஒரு கண்ணியமான அம்மா வேடம் ஒன்று இருந்தது. அந்த வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது, கே.ஆர்.விஜயா நினைவுக்கு வந்தார். ஏற்கனவே நான் தயாரித்த ‘வாழ்க ஜனநாயகம்’ படத்தின்போது நான் வளந்து வரும் நடிகன்.  அப்போது அந்தப் படத்தி்ல நடிக்க கேட்டபோது உடனேயே  கே.ஆர்.விஜயாம்மா எந்த யோசனையும் செய்யாமல் எனக்காக நடித்துக் கொடுத்தார்.

இப்போதும் இந்த ‘கடமான் பாறை’ படத்தின் திருப்புமுனை கதாபாத்திரத்திற்காக அவரிடம் கேட்டேன். உடனேயே ஒத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார். பெரிய நடிகை என்ற எந்த ஒரு கர்வமும் இல்லாமல் அப்போது போலவே இப்போதும் இருக்கிறார் கே.ஆர்.விஜயாம்மா.  படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது…” என்றார் மன்சூரலிகான்.