யோகிபாபு நடிக்கும் முதல் தமிழ் ஜாம்பி காமெடி படம்!

திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி .திரில்லராகவும் காமெடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்கவைத்தது. பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வ தேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக தமிழில் படத்தை தயாரிக்கிறார்கள். அதற்கு “ஜாம்பி”என்றே பெயரிட்டு உள்ளார்கள். ‘எஸ்3’ பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் , V .முத்துக்குமார் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை புவன் நல்லான்.R இயக்குகிறார் .இவர் “மோ ” என்ற படம் மூலம் ஹாரர்-காமடி படத்தை இயக்கி புகழ் பெற்றவர்.

கதாநாயகன், நாயகி என்றில்லாமல் இந்த படத்தில் கதை தான் நாயகனும்.. நாயகியும்.. வில்லனும் .ஒரே இரவில் நடக்கும் ஹாரர் – காமடியான இப்படத்தில் யோகி பாபு , “பிக்பாஸ்” புகழ் யாஷிகா ஆனந்த் இருவரும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்கள் . யூ ட்யூப் ( you tube) “பரிதாபங்கள்” புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் அவார்ட் படமான “லைஃப் ஆஃப் பை “படத்தில் நடித்த T.M..கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் . இவர் “நண்பன் “,”இன்று நேற்று நாளை” ,”தில்லுக்கு துட்டு”, “செக்க செவந்த வானம் ” போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றவர்.

மேலும் மனோபாலா, “கோலமாவு கோகிலா” அன்பு தாசன் ,பிஜிலி ரமேஷ் , ராமர் ,லொள்ளு சபா மனோகர் , “மியூசிக்கலி” புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் . அவரவர் பாணியில் வெவ்வேறு தளங்களில் காமடிகளில் கலக்கி வரும் இவர்களை இப்படம் மூலம் இணைத்ததில் பெருமை கொள்கிறேன் என்றார் இயக்குனர்,புவன் நல்லான்.R.

வெங்கட் பிரபுவின் “பார்ட்டி “படத்திற்கு பிறகு பிரேம்ஜி இப்படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய ,கண்ணன் கலை அமைக்க ,தினேஷ் எடிட்டிங் செய்ய ,ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்க , இணை தயாரிப்பு : பாலா அன்பு. வருகிற டிசம்பர் 13-ம் தேதி சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும் .