11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபு திலக் தயாரிச்சிருக்கிற திரைப்படம் வால்டர்.
அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் ஷ்ரின் கான்ஞ்வாலா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் பெரும் ஆதரவைப் பெற்று பத்து லட்சம் பார்வையாளர்களைக் கடந்துடுச்சு.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் குற்ற விசாரணைத் திரைப்படமாக அமைந்துள்ள இதில் கும்பகோணம் ஏ.எஸ்.பி. வால்டராக சிபிராஜ் நடிச்சிருக்கார்.
அதிலும் இந்தியாவில் தற்போது பெரும் அச்சத்தை ஏற்படுத்திவரும் குழந்தைக் கடத்தல் சம்பவங்களை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கு . ட்ரெயிலர் ஆரம்பமாகும்போதே, “ஒவ்வொரு 24 மணி நேரத்துக்கும் இந்தியாவில் நான்கு குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு 16 மணி நேரத்துக்கும் தமிழ் நாட்டில் ஒரு குழந்தை காணாமல் போகிறது.” என்ற புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது நெனவிருக்கா.

இந்த படம் குறிச்சு சிபியிடம் கேட்டப் போது .முதன் முறையாக என்னோட கெட் அப் மக்களுக்குப் பிடிச்சு இணையதளத்தில் ட்ரண்டிங்கில் ரொம்ப நேரம் தாக்குப் பிடிச்சது ரொம்ப சந்தோசம். இது வழக்கமான போலீஸ் படம், ஆக்ஷன் த்ரில்லர்னு இதை ஒரு வரியில் சொல்லிட முடியாது. ரொம்பப் புதுசா கதறடிக்கிற ஆக்ஷனுக்குள்ளே நிறைய உணர்வு பூர்வமான விஷயங்களையும் வெச்சிருக்கார் டைரக்டர் அன்பு. எனக்கும், அன்புக்கும் என்ன ஐடியான்னா… டெக்னிக்கலாவும், ஸ்கிரிப்ட் ஸ்டைல்லேயும் அடுத்த கட்டத்திற்குப் போகிற மாதிரி ஒரு படம் பண்ணணும்கிறதுதான். ‘வால்டர்’ அப்படி வந்திருக்கு.
ஒரு போலீஸ் ஆபீஸரை சுற்றி நடக்கிற கதைதான். கும்பகோணம் மாதிரி இடத்தில் நடக்கிற கதை. ஆனால் இதுவரைக்கும் பார்க்காத கலர்ல படம் இருக்கும். அப்பாவுக்கு ‘வால்டர் வெற்றிவேல்’, சூர்யாவுக்கு ‘காக்க காக்க’, விக்ரமுக்கு ‘சாமி’ மாதிரி எனக்கு ஒரு நல்ல அடையாளமும், வெற்றியும் கொடுக்கும்னு நிச்சயமாக நம்புகிறேன். என்ன ஆச்சரியம்னா ‘வால்டர் வெற்றிவேல்’ பண்ணும்போது அப்பாவுக்கு 38 வயது. நான் 37 வயதில் இந்தப் படம் பண்றேன். எனக்கு டைம் முக்கியமில்லை… இனிமேல் ஒவ்வொண்ணும் பெஸ்ட்டா வரணும்னு நினைக்கிறேன். “ அப்படீன்னார்
இப்படியாப் பட்ட படத்தில் ரித்விகா, நட்டி நட்ராஜ், சனம் ஷெட்டி, சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடிச்சிருக்காங்க,,
பக்காவான கதை. பக்கபலமாக புரொடியூசர் பிரபு திலக். இபர் தமிழக முதல் வும்ன் ஐ பி எஸ்- ஸான திலகவதி -யின் மகன். இந்த படம் நல்ல வரணுமுங்கரதுக்காக ஒரு போலீஸ் அதிகாரியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும், செயல்முறைகள், அவர்கள் எப்படி பொது வெளியில் நடந்துக்கணும்னு இருக்கிற விதிமுறைகளை எல்லாம் சில போலீஸ் அதிகாரிகள் கிட்டே சிபிராஜை அழைச்சிட்டு போய் தெரிஞ்சிக்க வைச்சாராம்..
அடடே.. வரும் மார்ச் 6ம் தேதி இந்த வால்டர் ரிலீஸாக போகுதாமில்லே.. பார்த்துபுடுவோம்