15
Apr
திருவின் குரல் விமர்சனம் ! இயக்குநர் - ஹரிஸ் பிரபு நடிகர்கள் - அருள்நிதி , பாரதிராஜா , ஆத்மிகா ஒளிப்பதிவு - சின்டோ பொடுதாஸ் இசை - சாம் சி எஸ் தயாரிப்பு - லைகா சுபாஸ்கரன் இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி நடித்துள்ள படம் தான் “திருவின் குரல். கோபக்கார இளைஞன் அவன் குடும்பத்திற்கு ரௌடிகளால் வரும் பிரச்சனை அதை முறியடித்து அவன் ஜெயிக்கும் ஆதி காலத்து கதை. இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்திருக்கிறார். அதோடு ராபர்ட், மோனிகா சிவா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு அழகான குடும்பம் திடீரென நடக்கும் ஒரு விபத்து, அரசு மருத்துவமனையில் அருள் நிதிக்கும் அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் பாரதிராஜாவுக்கு போலியான மருந்து போடப்படுகிறது. அதே போல அந்த மருத்துவமனையில் நடக்கும் சில கொலைகளை அவரது குடும்பத்தில் இருக்கும்…