‘எனக்கு என்டே கிடையாது’ திரை விமர்சனம் !

இயக்குனர் – விக்ரம் ரமேஷ்
நடிகர்கள் – விக்ரம் ரமேஷ் , சுயம் சித்தா
ஒளிப்பதிவு – தளபதி ரத்னம்
இசை – கலாசரண்
தயாரிப்பு – கார்த்தில் வெங்கற்றாமன்

ஒரு டாக்ஸி டிரைவர் ஒரு பெண்ணை பாரில் இருந்து பிக்கப் செய்கிறார். இருவரும் காரில் பயணம் செய்யும் பொழுதே பேசி நண்பர்களாக மாறுகின்றனர். அந்தப் பெண்ணை ட்ராப் செய்யும்போது டிரைவரை மது அருந்த தன் வீட்டிற்கு அழைக்கிறார். இருவரும் வீட்டிற்குள் செல்கின்றனர். போன இடத்தில் இருவரும் மது அருந்திவிட்டு மயக்கமாகி மட்டையாகி விடுகின்றனர். சில மணி நேரங்கள் கழித்து கண் விழிக்கும் கதானாயகன் கழிவறை செல்ல முற்படும் நேரத்தில் ஓர் அறையில் ஒரு பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். உடனே அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் நேரத்தில் கதானாயகி அங்கு வந்து விடுகிறார். இவர்களுக்குள் நடக்கும் தள்ளும் முள்ளுவில் கதானாயகி இறந்து விடுகிறார். முழுக்க முழுக்க ஸ்மார்ட் வீடாக இருக்கும் அந்த பங்களாவில் இருக்கும் கதவுகளுக்கு பாஸ்வேர்டு லாக் போட்டு இருப்பதால் விக்ரமால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை. இதை அடுத்து அவர் தப்பிக்க அல்லாடும் நேரத்தில் அங்கு ஒரு திருடன் வீட்டினுள் திருட வருகிறார். அதேபோல் ஒரு அரசியல்வாதியும் அந்த வீட்டிற்குள் ஒரு பணப்பெட்டியுடன் நுழைகிறார், இவர்களில் யார் அங்கிருந்து தப்பிப்பார்கள் என்பதே மீதிக் கதை.

இந்தப் படத்தின் நாயகன் விக்ரம் ரமேஷ் இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஒரு சின்ன கதையை வைத்துக்கொண்டு இரண்டு மணி நேர படமாக மாற்றி அதை ரசிக்கும்படி கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சிக்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்திருக்கிறது. படத்தை முழுக்க முழுக்க ஒரு பங்களாவுக்கு உள்ளேயே எடுத்திருந்தாலும் அதை சற்று அயற்சி இல்லாமல் கொடுத்து இருப்பதே இந்த படத்திற்கு சற்று பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அந்த அளவு ஒரு சிறிய கதையை குழப்பம் இல்லாமல் திரைக்கதை அமைத்திருக்கிறார். அதேபோல் இவர் நடிப்பிலும் ஒரு தேர்ந்த நடிகரைப் போல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் விக்ரமுடன் திருடனாக நடித்திருக்கும் கார்த்தி இப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். அவரும் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அறிமுக நடிகர் என்ற உணர்வைத் தர மறுக்கிறார். இவருக்கும் விக்கிரமுக்குமான கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக அமைந்து படத்தை வேகமாக நகர்த்தி செல்ல உதவி செய்திருக்கிறது. இருவரும் எதார்த்தமான நடிப்பை அசால்டாக வெளிப்படுத்தி கவனம் பெற்றுள்ளனர். அரசியல்வாதியாக வரும் மஸ்தான் பாய் அவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கிறார். நாயகியாக வரும் சுயம் சித்தா எப்போதும் போல் கவர்ச்சி காட்டி பின்பு நடிப்பில் அவருக்கு என்ன வருமோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார்.

Enaku Endey Kidaiyaathu Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters,  News & Videos | eTimes

இந்தப் படத்தில் மற்றொரு பெரிய பிளக்ஸ் ஆக பார்க்கப்படுவது கலை இயக்கமும் ஒளிப்பதிவும் ஆகும். ஒரு ஸ்மார்ட் பங்களாவிற்குள் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமோ அதை எல்லாம் சிறப்பாக அமைத்துக் கொடுத்து கதைக்கு ஒத்துழைப்பு தரும்படியான கலை இயக்கத்தை சிறப்பாக கையாண்டு படத்திற்கு ஒரு ரிச்நெஸ்சை கூட்டி இருக்கிறார் ஆர்ட் டைரக்டர் சூர்யா. அதேபோல் ஒரு பங்களாவுக்குள்ளேயே முழு படமும் எடுக்கப்பட்டு இருப்பதால் சுவாரஸ்யமாக காட்சிகளை கொடுக்க மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். இவரது நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு வேகத்தைக் கூட்டி இருக்கிறது. சூர்யாவின் கலை இயக்கத்தை இன்னமும் நன்றாக மெருகேத்தி காட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம். இவர்களுக்கு தன் பின்னணி இசை மூலம் பக்க பலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் கலா சரண். படத்தொகுப்பாளர் முகன் வேலும் தனது பங்குக்கு நிறைவான படத்தொகுப்பை கொடுத்து படத்தை கரை சேர்க்க முயற்சி செய்து உள்ளார்.

படத்தில் நடிக்கும் புது முகங்கள் நன்றாகவே நடித்துள்ளனர் , படத்தில் சுவாரஸ்யம் குறையாமலே இருந்தது
மொத்தத்ஹ்டில் எனக்கு எண்டே கிடையாது படம் புது முகங்களின் ஒரு நல்ல முயற்சி