மீண்டும் ஒரு சூப்பர் ஹீரோ படம் ஹனுமன் !!
ஹனுமனின் சக்தி ஒரு சாதாரண இளைஞனுக்கு கிடைத்தால் ? அவன் சூப்பர்Remove term: hanuman hanumanRemove term: hanuman film hanuman filmRemove term: ஹீரோவாக மாறினால் என்னவாகும் ? இந்த ஐடியா தான் படம்.
இந்த பொங்கலுக்கு தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுடன் போட்டியிட்டு ஜெயித்திருக்கும் படம் தெலுங்கில் கொண்டாடும் இந்தப்படம் தமிழிலும் வந்திருக்கிறது
சின்ன டீம் சின்ன பட்ஜெட் ஆனால் அதை சொன்ன விதத்தில் ஈர்த்திருக்கிறார்கள்.
அஞ்சனாத்தி எனும் கற்பனயான கிராமத்தில் கதை நடக்கிறது. நாயகன் தேஜா சஜ்ஜாவுக்கு ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் மாபெரும் பலசாலியாக உருவெடுக்கிறான், அதன் மூலம் ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறான். தேஜா சஜ்ஜாவின் சக்தி பற்றி தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய், அவரிடம் இருக்கும் சக்தியை பறிப்பதற்காக அவரை தேடி வருகிறார். அவர் நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே மீதி படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் தேஜா சஜ்ஜா, பக்கத்து வீட்டு பையன் துறுதுறு நடிப்பால் நம்மை ஈர்க்கிறார். அவரது நடிப்பு தோற்றம் எளிதாக நம்மோடு கலந்துவிடுகிறது.
சூப்பர் ஹீரோ என்றவுடன் ஹாலிவுட் ஸ்டைல் கதை சொல்லாமல் கிராமத்துப்பின்னணியில் சொன்னது அழகு. அதனாலோ என்னவோ படம் எளிதாக எல்லோருக்கும் பிடித்துவிட்டது. படம் முழுக்க ஒன்லைன் காமெடி அசத்தல் அதிலும் ஹீரோ பாலய்யா போல் ரயிலை விரலால் நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கே சிரிப்பு சத்தத்தால் அதிர்கிறது.
தேஜா, காதல் காட்சி, செண்டிமெண்ட், காமெடி காட்சி எல்லாவற்றிலும் ஸ்கோர் செய்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர், ஹீரோ செய்ய வேண்டிய விசயங்களை செய்து அதிரடி காட்டுகிறார்.
அக்காவாக வரலட்சுமி படத்திற்கு முக்கிய திருப்பமாக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் வினய்க்கு சொல்லும் ப்ளாஷ்பேக் செம்மையானது, அவரது அலட்சியத் தோரணையைச் சரியாக வெளிப்படுத்தி ஏற்றுக்கொண்ட வேடத்தை ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இவர் ஏன் கடைசியில் சின்ன ஹீரோவைப்போய் இப்படி பழி வாங்க வேண்டும் என்பது தெரியவில்லை.
இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையில் பாடல்களும், பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது. ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மிக பிரமாண்டமாக இருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சிஜி, கோடிகோடியாக கொட்டி எடுக்கும் படங்களில் இல்லாத அளவு மிகச்சிறப்பாக சிஜி அமைந்திருக்கிறது.
பேண்டஸி அம்சங்கள் நிறைந்தவையாக இருப்பதால் இந்த ‘ஹனு-மான்’-னை அனைவரும் கொண்டாடுவார்கள்.
ஆன்மீகம் பேசும் படம் என்றாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் பிரசாந்த் வர்மா இயக்கியிருக்கிறார். அடுத்த பாகம் எடுக்க வேண்டும் என்பதற்காக சொருகப்பட்டிருக்கு இறுதிக்காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
குடும்பத்தோடு கொண்டாடி சிரிக்க ஒரு அருமையான கமர்ஷியல் படம்.