தீரன்” கார்த்தி இன்று பரத் நடிப்பில், ஶ்ரீசெந்தில் இயக்கத்தில் உருவாகும் ” காளிதாஸ்” போலீஸ் திர்ல்லர் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னையில், இயக்குனர் பாண்டிராஜ் மற்றும் ஒளிப்பாதிவாளர் வேல்ராஜ்யுடன் இணைந்து வெளியிட்டார்.
அப்போது “பரத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதை மிக மகிழ்ச்சியாக கருதுகிறேன். அவரையும் அவரது படக்குழுவினரையும் வாழ்த்துகிறேன். பரத்திற்கு சிறப்பான படமாக இது அமையட்டும்” என்றும் கார்த்தி குறிப்பிட்டுள்ளார். அதற்கு பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் “உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி கார்த்தி டார்லிங்… ” என மறுமொழி இட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை நடிகர் ஆர்யா பாராட்டியுள்ளார். அதற்கு கார்த்தி ‘நன்றி டார்லிங்’ என கூறியுள்ளார்.
இதனிடையே சமீப ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் புதிய சிந்தனை களுடன் புதிய அலை படங்களை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றுவருகிறார்கள், இதற்கு அடிப்படையாக அமைந்த “நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் கிரியேட்டிவ் ஹெட் & இயக்குனர் சிவநேசன் தயாரிப்பில் மற்றுமொரு குறும்பட இயக்குனர் ஶ்ரீசெந்தில் புதிய முயற்சியாக நடிகர் பரத் முற்றிலும் இதில் புதிய தோற்றதில் இன்வெஸ்ட்கேஷன் திரில்லர் கேரக்டரில் “காளிதாஸ்” என்ற பெயரில் தயாராகும் இந்த திரைப்படம் பெறும் எதிர்ப்பார்ப்புடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
மேலும் தானா சேர்ந்த கூட்டத்தை அடுத்து சுரேஷ் மேனன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக மலையாள நடிகை அன் ஷீத்தல் அறிமுகம் ஆகிறார். இவர்களுடன் மற்றுமொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் கண்ணாதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் நடித்துள்ளார்.
இசை விஷால் சந்திரசேகர், எடிட்டிங்- புவன் ஶ்ரீனிவாசன், ஒளிப்பதிவு- சுரேஷ் பாலா
பாடல்கள்- தாமரை.. தயாரிப்பு- தினகரன்.M சிவனேசன்.M.S, LEAPING HORSE