ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

ஶ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகியுள்ள “கட்டில்” படத்தின் பாடல் வெளியீட்டு விழா!

Maple Leaf's Productions தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பிரபல எடிட்டர் B.லெனின் கதை, திரைக்கதையில், EV கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத்திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இவ்விழாவினில் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…. வைரமுத்து சாருக்குப் பிறகு யார் பேசினாலும் எடுபடாது. வைரமுத்து என் 25 படங்களுக்குப் பாட்டு எழுதியிருப்பார். நீண்ட காலத்திற்குப் பிறகு அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேவா என் படங்களுக்கு இசையமைக்கும்போது கீபோர்டில் எப்போதும் ஶ்ரீகாந்த் தேவா தான் இருப்பார் இப்போது அவர் புகழ் பெறுவது மகிழ்ச்சி. இயக்குநர் நடிகர் EV கணேஷ் பாபு என் படத்தில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு படம் எடுத்து இயக்குநராகியிருக்கிறார் வாழ்த்துக்கள். இப்படத்தின் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள் நன்றி. இயக்குநர் மோகன் ராஜா…
Read More
ஒட்டு மொத்த யூடியுப் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் இணைந்து நடத்திய “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இசை வெளியீட்டு விழா

ஒட்டு மொத்த யூடியுப் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் இணைந்து நடத்திய “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தின் இசை வெளியீட்டு விழா

ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பிரமாண்டமான உருவாக்கத்தில், பள்ளிக்கால வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “பாபா பிளாக்‌ ஷீப்” . இன்றைய தலைமுறையின் மனம் கவர்ந்த பல டிஜிட்டல் ஊடக பிரபலங்கள் வெள்ளித்திரையில் இப்படம் மூலம் கால் பதிக்கின்றனர். பெரும் பொருட்செலவில், நாம் அறிந்த முகங்களின் வாயிலாக நம் பள்ளி வாழ்வை அசை போட வைக்கும் அற்புதமான படைப்பாக, இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழ் திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள், படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், ஒரு கல்லூரி கலை நிகழ்வு போல் திருவிழாக்கோலமாக இவ்விழா நடைபெற்றது. இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ,இயக்குனர் லிங்குசாமி மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய திரைப்பிரபலங்கள் இணைந்து படத்தில் நடித்திருந்த கதாநாயகர்களை அறிமுகம் செய்தனர். பெரும் ரசிகர் கூட்டத்தின்…
Read More
ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்!-ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ரஜினியின் படையப்பா ரிலீஸ் ஆகி 24 வருஷமாச்சாம்.. இச்சூழலில் நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு ப்ரண்ட்சுக்கு ஸ்பெஷல் ரிப்போர்ட் கொடுக்கலின்னா தெய்வகுத்தமாயிடுமாமில்லே.. இதோ நம் கட்டிங் கண்ணையாவி சிறப்பு கட்டுரை கிராமத்து படங்கள் என்று சொன்னாலே நாட்டாமை பெயர் அனைவருக்கும் நினைவுக்கு வரும். தனது படங்களில் கதாபாத்திரங்களை உருவாக்குவதில் கே எஸ் ரவிக்குமார் அதிகமாகவே மெனக்கெடுவார்.இயக்குநராக மட்டும் இல்லாமல் தான் இயக்கும் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து அனைவரையும் வியக்க வைப்பார். நடிப்பிலும் வெளுத்து வாங்குவார் கே எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படையப்பா திரைப்படம் வெளிவந்தது கிட்டத்தட்ட 24 ஆண்டுகளைக் கடந்து உள்ளது. இன்றும் இந்த படத்தின் வெற்றியை #Padayappa24 என்ற ஹேஷ்டாக் உடன் சமூக வலைதளத்தில் தெறிக்க விட்டு வருகின்றனர். 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனதும்…
Read More
“மாயோன்”  திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா !

“மாயோன்” திரைப்பட முன்னோட்ட ரத யாத்திரை மற்றும் சிறப்பு டிரெய்லர் வெளியீட்டு விழா !

Double Meaning Production சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்து வழங்க, N.கிஷோர் இயக்கத்தில், நடிகர் சிபிராஜ் ,தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள திரைப்படம்  “மாயோன்”.  புத்தம் புதிய களத்தில் கடவுள் & அறிவியல், சிலை கடத்தல் மற்றும் புதையல் வேட்டை  என பரபர திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள, இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தனியார் கல்லூரியில் படத்தின் விளம்பர முன்னோட்டமாக ஒரு வண்டியில் படத்தில் வரும்  விஷ்ணு சிலை அமைக்கப்பட்டு, ரதம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ரதத்தில் ‘மாயோன்’ பட விளம்பரங்களும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ரதம் 40 நாட்கள், தமிழகம் முழுவதும் வலம் வரப்போகிறது. இந்த விழாவினில் இந்த ரதத்தின் பயணம்  படக்குழுவினரால் துவக்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நம் பாரம்பரிய கலையான தோல் பாவை கூத்து அரங்கேற்றப்பட்டது. மேலும் பார்வையற்ற  மாற்றுத்திறனாளிகளுக்காக, அவர்கள் முன்னிலையில் அவர்களுக்காக  ஆடியோ விளக்கத்துடன்  பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட…
Read More
விக்ரம் படத்துடன் வரும் மாயோன் டிரெய்லர் !

விக்ரம் படத்துடன் வரும் மாயோன் டிரெய்லர் !

"கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும்" 14 வருடங்களுக்குப் பிறகு கமலின் கேள்விக்குக் கிடைத்த பதில்.. மாயோன் படக்குழு வெளியிட்ட அறிவிப்பு. 14 வருடங்களுக்கு பிறகு கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் பேசிய வசனத்திற்கு பதில் கிடைத்திருப்பதாக மாயோன் படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் சிபி ராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உட்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாயோன். படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் அவர்கள் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். படத்தில் இருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான வடிவமைப்பில் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் ஜூன் மூன்றாம் தேதி முதல் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.…
Read More
கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

கூகுள் குட்டப்பா திரைவிமர்சனம்

  இயக்கம்: சபரி, சரவணன் இசை: ஜிப்ரான் நடிகர்கள்: கே எஸ் ரவிக்குமார், தர்ஷன், லோஸ்லியா, யோகிபாபு, பூவையார் கூகுள் குட்டப்பா வயதான தன் தந்தையை பார்த்துகொள்ள ரோபோவை பணியமர்த்தும் மகன், ரோபோவை மகனாக பாவிக்கும் தந்தை இவர்களுக்கிடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை. மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் தான் இந்த கூகுள் குட்டப்பா. மலையாளத்தில் ஏற்படுத்திய பாதிப்பை தமிழ் பதிப்பு ஏற்படுத்தவில்லை. படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோடியாக நடித்துள்ள தர்ஷன் மற்றும் லோஸ்லியா உடைய நடிப்பு ஈர்க்கும் படியில்லை. அவர்களுக்கிடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் சரி, உரையாடல் காட்சிகளும் சரி பாதிப்பை ஏற்படுத்தாமல் காட்சியை தொய்வுபடுத்துகிறது. படத்திற்கு ஆறுதலான இரு விஷயங்களில் ஒன்று கே எஸ் ரவிகுமார் நடிப்பு. தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நடிப்பை கொடுக்க, தனது முழு பங்கையும் அளித்துள்ளார். மற்றொன்று இசை, படத்தில் இரு பாடல்கள் கேட்கும் படி உள்ளது. மற்றபடி…
Read More
இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – கே. எஸ். ரவிக்குமார்

இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை – கே. எஸ். ரவிக்குமார்

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு இன்று பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி ,ஆர் வி உதயகுமார், பேரரசு, கௌரவ் நாராயணன், பொன் குமரன், கல்யாண், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் டி சிவா உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் விக்ரமன், ஆர்கே செல்வமணி, ஆர் வி. உதயகுமார் பேரரசு ஆகியோர் வெளியிட,…
Read More
ராகவா லாரன்சின் புதிய படம் !

ராகவா லாரன்சின் புதிய படம் !

ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று டிரைடென்ட் ஆர்ட்ஸ், ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கே எஸ்ரவிக்குமார் இயக்கும் ராகவா லாரன்ஸ், எல்வின் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானது பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்து விநியோகித்துள்ள டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், ஏ ஆர்என்டர்டெயின்மென்ட்டுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றை பிரமாண்ட பொருட்செலவில்தயாரிக்கவுள்ளார். வெற்றிப்பட இயக்குநரான கே எஸ் ரவிக்குமார் இயக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இதுவரைஏற்றிராத மாஸான சிறப்பு கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க, எல்வின் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு ராகவா லாரன்சின் பிறந்த நாளன்று வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன், கலகலப்பான காமெடி, மனதைத் தொடும் எமோஷன் நிறைந்த இந்த புதியதிரைப்படத்திற்காக கே எஸ் ரவிக்குமார், ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முதல் முறையாக இணைகின்றனர். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு விரைவில்தொடங்கவுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.…
Read More